*இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய மிஷனெரிப் பண்டிதர் பேராயர் ஸ்டீபன் நீல்*
நினைவு தினம் ( ஜூலை 21)
நினைவு தினம் ( ஜூலை 21)
இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய மிஷனெரிப் பண்டிதர் என்ற பெருமை பெற்றவர் பேராயர் ஸ்டீபன் நீல் .

19ஆம் நூற்றாண்டின் இறுதி நாளில் பிறந்தார் .
இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்தபோது ,
மாணவர்களுக்குத் தலைவராகவும் , கிறிஸ்தவ மாணவர் இயக்கத்திற்கு தலைவராகவும் திகழ்ந்தார் .
இந்நாட்களில் தான் திருச்சபை ஒருமைப்பாடு குறித்த சிந்தனை இவர் மனதில் உருவானது .
இந்தியாவிற்குமிஷனெரியாக வந்த நீல் , ஏமி கார்மிக்கேல் அம்மையாரின தலைமையின் கீழ் பயிற்சிகளை மேற்கொண்டார் .
பின்னர் இங்கிலாந்து சென்று போதக அபிஷேகம் பெற்றார் .
சி . எம் . எஸ் மிஷனெரி சங்கம் மூலம் மீண்டும் இந்தியாவிற்கு வந்து திருநெல்வேலி , திருவாங்கூர் பகுதிகளில் ஊழியங்களை மேற்கொண்டார் .
இந்தியாவில் 20 ஆண்டுகள் மிஷனெரியாக பணியாற்றினார் .
1946லிருந்து 1961 வரை நீல் வெகு சுறுசுறுப்புடன் செயல்பட்டார் .
உலக கிறிஸ்தவ சங்கத்தின் துணைச் செயலாளராகவும் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றினார் .
திருச்சபைகளின் ஒருமைப்பாட்டிற்காக இவர் எடுத்த முயற்சிகள் ஏராளம் .
இது சம்பந்தமாக ஏராளமான புத்தகங்களை எழுதினார் .
உலகின் பல நாடுகளுக்கும் சென்று திருச்சபைகளின் ஒருமைப்பாடு குறித்து சொற்பொழிவுகள் ஆற்றினார் .
சரீரத்தில் பல சோர்வுகளும் வேதனைகளும் அவருக்கு ஏற்பட்டாலும் கடவுள் கொடுத்த பணியை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டினார் .
இந்தியாவைத் தன் மனதில் சுமந்த இவர் , இந்திய கிறிஸ்தவ வரலாற்றில் அழியா இடத்தைப் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment