புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

C . T . ஸ்டட்

*அறைகூவி அழைக்கிறார் நற்செய்தி அறிவிக்க C . T . ஸ்ட ட்*
ஜூலை 16 நினைவு கூறுவோம் நினைவு நாளில்
*நரமாமிசப் பட்சிணிகளுக்கு மிஷனெரிகள் தேவை* என்ற விந்தையான விளம்பரம் அது .
ஸ்டட் கண்களையும் கருத்தையும் அது கவர்ந்தது .
நற்செய்தி அறிவிக்கும் ஆர்வத்தால் உந்தப்பட்டார் .
தன் வாழ்நாளின் கடைசி மிஷனெரி பயணமாக ஆப்பிரிக்க நாடு நோக்கிப் பயணமானார்ஸ்டட் , இவர் ஒரு பெரும் பணக்காரர் .
தந்தையின் ஆஸ்திகளோ ஏராளம் , ஏராளம் . இவர் ஒரு சிறந்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும் கூட .
தனது 25வது பிறந்தநாள் தினத்தில் தன் சொத்து மதிப்புகள் 25 ஆ யி ர ம் ப வ ன் க வ ள யு ம் ஊ ழி ய த் தி ற் கு கொடுத்துவிட்டார் .
மூடி பிரசங்கியாருக்கு 5 , 000 பவுன்களையும் , அனாதைகளின் தகப்பன் ஜார்ஜ் முல்லருக்கு 5 , 000 பவுன்களும் , இரட்சண்ய சேனையின் தலைவரான வில்லியம் பூத்திற்கு 4 , 000 பவுன்களும் , ஹாலந்தில் உள்ள ஜார்ஜ் என்பவருக்கு 5 , 000 பவுன்களும் , மீதமுள்ள அனைத்து சொத்துகளையும் ஊழியர்களுக்கு பிரித்து அனுப்பினார் .
இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் மாணவர்கள் மத்தியில் எழுப்புதல் உண்டாகக் காரணமானார் .
இதனால் ' கேம்பிரிட்ஜ் எழுவர் குழு ' உருவானது .
இவர்கள் அனைவரும் தங்களை மிஷனெரிகளாக ஒப்புக்கொடுத்தனர் .
சீனாவுக்கு மிஷனெரியாகச் சென்ற ஸ்டட் அங்கு 10 வருடங்களும் , இந்தியாவில் 6 வருடங்களும் , மிஷனெரியாகப் பணியாற்றினார் .
பின்னர் இங்கிலாந்திலும் , அமெரிக்காவிலும் ஏராளமான ஆத்தும ஆதாயக் கூட்டங்களை நடத்தி ஆயிரக்கணக்கானோரை ஆண்டவரின் பணிக்கு அர்ப்பணிக்கச்செய்தார் .
இறுதிப்பயணமாக இருண்ட கண்டத்திற்குச் சென்று 20 ஆண்டுகளாக இரட்சகர் இயேசுவை இருளில் வாழ்ந்த இதயங்களுக்கு அறிவித்து அவர்களை ஒளியின் பிள்ளைகளாக மாற்றிய ஸ்டட் ,
தன் 70வது வயதில் மிகவும் மகிழ்ச்சியுடன் இறைவனிடம் சென்றார் .
தன்னையோ பிறரையோ சார்ந்திராமல் கிறிஸ்துவையே சார்ந்திருந்த தியாகத் தொண்டர்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory