*வில்லிசை மன்னர் பொன் . இலாசரசு நினைவு தினம் ஜூலை 29*
15 கிலோ எடையுள்ள வில்லைத் தூக்கிக் கொண்டு வேகமாக நடந்து கொண்டிருந்தார் பொன் இலாசரசு .
எங்கே இவ்வளவு அவசரம் ? பட்டணத்து மக்களுக்குப் போதிக்க பல போதகர்கள் இருக்கும் நிலைமையில் கிராமத்து மக்களுக்கு , கிராமத்து மணங்கமழ , கிராமத்துக் கலையில் நற்செய்தி அறிவிக்கச் சென்றார் , வில்லிசை மன்னர் இவர் .
நற்செய்தியைக் கேட்போருக்கு நகைச்சுவையோடுநல்விருந்தையும் அளிப்பவர் இவர் .
ஊழியத்தை மிகப் பெரிய அளவில் வளர்க்கவேண்டும் என்ற விருப்பம் இவருக்கு இருந்ததில்லை . மாறாக , செல்லுமிடங்களிலெல்லாம் வேத சத்தியங்களை எளிய முறையில் நிதானமாக போதிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார் .
1994ம் ஆண்டு , ' துலிப் ' என்ற ஊழியத்தை ஆரம்பித்தார் .
பல ஊழியர்களையும் , விசுவாசிகளையும் இதன் மூலம் உருவாக்கினார் .
அந்நிய பாஷை என்னும் தலைப்பில் 5 கட்டுரைகளை வெளியிட்டார் .
இரட்சிப்பு கர்த்தருடையது என்ற வேத சத்தியத்தை விளக்கமாகப் போதித்தார் .
மத பேதமில்லாமல் எல்லோரிடமும் அன்பாகப் பழகுபவர் . எளிமையே உருவானவர் . பாடல்கள் மூலம் மக்களை பக்தியில் வளரச் செய்தவர் .
இவர் வில்லில் இருந்து வரும் ஓசையும் , நாவிலிருந்து வரும் நகைச்சுவையும் கேட்போரின் துன்பத்தை நீக்கி அவர்களுக்கு மன இன்பத்தைதந்தன .
வேதனையோடு வந்த மக்கள் , வேதமென்னும் மன்னாவை உண்டு நாதனாகிய இயேசுவைப் புகழ்ந்து சென்றனர் .
வில்லுப் பாட்டுகள் மூலம் ஊழியங்கள் நடைபெறுவது மிகவும் அரிது . ஆனால் , இவரின் ஊழியத்தின் மூலம் ஆயிரக்கணக்கானோர் இரட்சிப்பிற்குள் வந்தனர் .
2005ம் ஆண்டு சபை நாட்டும் ஊழியத்தை ஆரம்பித்தார் .
உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலெல்லாம் , சுவிசேஷத்தை சுறுசுறுப்புடன் அறிவித்தார் .
ஓடி ஓடி உழைத்த இவரது உடல் தளர்ந்த நேரங்கள் பல உண்டு . குளிக்கவும் , குடிக்கவும் தண்ணீரின்றி அவதிப்பட்டார் .
பல நேரங்களில் பாறைக்கற்களே இவர் தலைக்கு தலையணையானது .
இவர் 2006ஆம் ஆண்டு இதே நாள் பரலோக அழைப்பைப் பெற்றார்.
No comments:
Post a Comment