இருந்த இடத்திலிருந்தே மிஷனெரிப் பணி நம்மால் செய்ய முடியுமா ?*
*அனி ஆம்ஸ்ட்ராங் ஈஸ்டர் காணிக்கை*
இன்னும் சிலருக்கு காட்டுமிராண்டிகளைப் பற்றியும் நினைவுக்கு வரும் .
அது ஒரு வகையில் உண்மையே .
ஆனால் இருந்த இடத்திலிருந்தே மிஷனெரிப் பணி நம்மால் செய்ய முடியுமா ? முடியும் என்று சாதித்துக் காட்டியுள்ளார் அனி ஆம்ஸ்ட்ராங் .
அன்னை தெரசாவைப் போன்று , இவர் ஏழைகளை அரவணைத்து , ஆதரித்தவர் அல்ல , பிளாரன்ஸ் நைட்டிங்கேலைப் போன்று , நோயுற்றோரைக் கவனித்த தாதியாரும் அல்ல .
ஆனால் , ஆண்டவர் தனக்குக் கொடுத்த எழுத்துத் திறமையைக் கொண்டே மாபெரும் மிஷனெரிப் பணிகளைத் தாங்கினார் .
இறைவன் தன்னைக் கொண்டு இவ்வுலகிற்குச் செய்யப்போகும் மாபெரும் திட்டத்தை மனதில்கொண்டு திறம்பட செயலாற்றியவர் , தன் முழு இருதயத்தோடும் இயேசுவை நேசித்த இவர் , மிஷனெரிகளுக்கு உதவிட வேண்டுமென்ற வாஞ்சையினால் , கடிதம் எழுதுவதின் மூலம் தன் பணியை ஆரம்பித்தார் .
அத்தனையும் மூலதனங்களாயின .
அவைகளே தேவ ஊழியர்கள் மீது கொண்டுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் சிறந்த கருவிகளாயின .
தட்டச்சு மூலமாகவும் , கைப்படவும் மிஷனெரி பணிகளைக் குறித்ததான ஏராளமான கடிதங்களை எழுதிக் குவித்தார் .
இவருடைய கடிதங்கள் மிகவும் நீண்டவையாகவும் , மிஷனெரி ஊழியத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய காரியங்களைக் குறித்ததாகவும் , எவ்விதங்களில் சுவிசேஷம் பறைசாற்றப்பட வேண்டுமென்றும் , அதற்கு எப்படியெல்லாம் நாம் உதவ முடியும் என்பதைக் குறித்தும் , திட்டமும் தெளிவுமாக தன் நண்பர்களுக்கு எழுதி அனுப்பினார் .
1893ஆம் ஆண்டு மட்டும் இவர் எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 17 , 719 . மிஷனெரிப் பணியில் இவருக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட மக்கள் , இவரைப் பாராட்டும் விதமாக , ஈஸ்டர் பண்டிகை அன்று மிஷனெரி ஊழியத்திற்கென்று சேகரிப்படும் காணிக்கைக்கு அனி ஆம்ஸ்ட்ராங் ஈஸ்டர் காணிக்கை என்று பேரிட்டார்கள் .
No comments:
Post a Comment