தமிழ்நாட்டின் மூடி பிரசங்கியாராக ஆன்மீக எழுப்புதலை உண்டுபண்ணினவர் பால் சுந்தரம் கடம்பவனம் பிறந்த தினம் இன்று (ஜூன் 25)
மனதில் மாற்றம் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்து , சைவ பக்தராய் வளர்ந்து தன் 20ம் வயதில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு , ஞானஸ்நானம் பெற்று , புதிய மனிதனாக வளர்ந்து , இறுதிவரை இயேசு கிறிஸ்துவின் அடியாராகவும் சாட்சியாகவும் வாழ்ந்த ஜெபவீரர் , தந்தை பால் கடம்பவனம்.
ஞானஸ்நானம் பெற்றபின் ஒரு கிறிஸ்தவ துறவியாக விரும்பினார் , ஆயினும் , அம்முயற்சியைக் கைவிட்டு கிறிஸ்தவ பக்தி முயற்சி சங்கப் பயணச் செயலாளராக பணியாற்றினார் .
1912ம் ஆண்டு சுதேச மிஷனெரி சாங்க பணியினைஏற்றார் .
பல இடங்களில் அருளுரையாற்றும் பொறுப்பு கிடைத்தது .
கூட்டங்களில் கலந்து கொண்டோர் இவரின் அருளுரையைக் கேட்டவுடன் மனதில் மாற்றமடைந்து , கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர் .
" இயேசுவை நம்பி கெட்டவன் இல்லை . இயேசுவுக்குக் கொடுத்து கெட்டவனில்லை. இயேசுவுக்கு உழைத்து கெட்டவனில்லை . இது பால் கடம்பவனத்தின் அசையாதஅருளுரையின் சாரம் .
இவர் பல ஆவிக்குரிய நூல்களை எழுதியுள்ளார்.
நான் ஏன் கிறிஸ்தவனானேன் ? ( 1910 ) மற்றும் அனுபவ திருஷ்டாந்தங்கள் ( 1974 ) என்ற நூல்வரை சுமார் 16 நூல்கள் எழுதியுள்ளார்.
பால் கடம்பவனத்தின் நூல்கள் யாவும் , இரட்சிப்பின் அனுபவங்களாக வரலாற்று சான்றுகளாக , நற்செய்திப் பணி ஊடகங்களாக , ஜெபத்தின் செயல்களாக விளங்குகின்றன .
இவரது பேச்சு , கல் நெஞ்சங்களையும் உடைக்கும் வலிமைபெற்றவை . ' தமிழ்நாட்டின் மூடி பிரசங்கியாராக ' ஆன்மீக எழுப்புதலை உண்டுபண்ணினார் .
இறைவனே தம்மை அவரின் அடியாராக தெரிந்துக் கொண்டதாக அறிவித்து , இறுதிவரை உண்மையான கிறிஸ்தவ ஜெபவீரராக விளங்கி , தன் வாழ்வில் வந்த பல சோதனைகளையும் மேற்கொண்டு , கிறிஸ்துவுக்குள் ஆழமான விசுவாசத்தை செயலில் காட்டி மக்களின் முன்மாதிரியானார் .
இவர் தம் முதிர்வயதில் , கண்ணொளி இழந்த பின்னும் , தன்னைக் காண வரும் அனைவரின் தலைமீதும் கைகள் வைத்து ஜெபித்து , அன்பு பாராட்டுவார்.
No comments:
Post a Comment