புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

“ பெரிய டீச்சர் ” என்றழைக்கப்படும் நவமணி அன்னபாய்

*“ பெரிய டீச்சர் ” என்றழைக்கப்படும் நவமணி அன்னபாய் நினைவு தினம்* (ஜூலை 20)
அது ஒரு புல் வீடு . கல்வராயன் மலையில் ஆதிவாசிகள் வசிக்கும் பகுதி .
ஒரு நாள் சில திருடர்கள் அவ்வீட்டிற்குள் புகுந்தனர் .
வீட்டுத் தலைவியின் தாலிச் செயினை அறுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர் .
அக்கம் பக்கத்தார் செய்தி அறிந்தனர் . விரைந்து வந்தனர் . திருட்டு நடந்ததை எண்ணி வருந்தி நின்றனர் .
வீட்டின் தலைவி சுற்றி நின்றவர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார் . “ தாலியைத் தானே திருடிச் சென்றனர் ; அவர்களால் என்னுள் இருக்கும் கிறிஸ்துவைத் திருட முடியவில்லையே ” .
என்னே பதில் இது ! அவ்வம்மையார் யார் தெரியுமா ?
மலைவாழ் மக்களின் அன்னையாய் அறிவூட்டும் நல் ஆசிரியராய் வாழ்ந்து ஆலயங்கள் , பள்ளிகள் , மருத்துவமனைகள் , ஆதரவற்றோர் இல்லங்கள் அமைத்திட்ட எலியாஸ் ஐய்யரின் அருமைத் துணைவி *“ பெரிய டீச்சர் ”* என்றழைக்கப்படும் நவமணி அன்னபாய் என்பவர்களை ஆவார் .
ஒருமுறை , நவமணி அன்னபாய் ஆசிரியர் பிள்ளைகளுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுக்காமல் கிறிஸ்தவ மத போதனைகளைக் கற்றுக் கொடுக்கிறார் என்று சில சுயநலமிகளால் கல்வி அதிகாரிக்கு புகார் கொடுக்கப்பட்டது .
அதிகாரிகள் அம்மையாரிடம் விசாரித்தனர் .
அம்மையார் அவர்களுக்குத் தகுந்த பதிலைக் கூறினார் .
அதிகாரிகளோ , " நாங்களும் தாவீது , சாலமோன் மற்றும் யோபுவை பற்றியெல்லாம் படித்திருக்கிறோம் .
நல்ல உபதேசம் கற்றுக் கொடுப்பதில் தவறில்லை " என்று கூறிவிட்டு கெம்பீரமாகத் திரும்பி சென்றனர் .
கல்வராயன்மலை மற்றும் சேராப்பட்டு மலைவாழ் மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து 21 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார் .
அங்கு பள்ளிக்கூடம் இவராலே ஆரம்பிக்கப்பட்டது .
எதிர்ப்புகள் வந்தபோது ஜெபத்திலேயே அவைகளை வென்றார் .
கல்வராயன் , ஜவ்வாது , கொல்லி மலைகளில் அயராது உழைத்த இவர் , தாம் விரும்பிய படியே அக்கொல்லி மலையிலேயே அம்மக்களுக்காகத் தன் உயிரைக் கொடுத்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory