*திருச்சபை வளர்ச்சி என்ற நிறுவனத்தை நிறுவிய டொனால்ட் மெக்காவரன்*
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் உண்டு .
அவைகள் நிறைவேற கடின உழைப்பை ஆயுதமாக பயன்படுத்துபவர்கள் பலர் .
ஆனால் சிலர் இதற்கு விதிவிலக்காக கனவு உலகத்தில் வாழ்ந்து காலம் கடந்தபின் நொந்து கொள்ளுவார்கள் . -
சுவிசேஷப் பணியே உயிர் மூச்சான டொனால்ட் மெக்காவரன் என்ற ஆராய்ச்சியாளருக்குக் காணப்பட்டதோ வித்தியாசமான ஆசை , அது என்ன தெரியுமா ?
இந்தியாவிற்கு வந்து வட இந்தியாவில் கூட்ட நெரிசலாயிருக்கும் பாசஞ்சர் ரெயிலில் ஒரு நாள் பயணம் செய்ய வேண்டும் .
அப்படி ஒரு பயணத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறக்க வேண்டும் .
அவ்வழியில் உள்ள கிராமத்தில் தான் புதைக்கப் பட வேண்டும் .
இது தான் அவரது ஆசை . ஏன் தெரியுமா ?
மிஷனெரிகளைப் போன்று தன் சொந்த இன மக்களை விட்டு சுவிசேஷத்திற்காக கோதுமை மணியாக வட இந்திய கிராமத்தில் விதைக்கப்பட்டு முளைத்தெழும்பி பலன் கொடுக்கப்பட வேண்டும் என்று மெக்காவரன்விரும்பினார் .
இளம் பிராயத்தில் பணம் சம்பாதிப்பதையே மிகுந்த வாஞ்சையாகக் கொண்டிருந்த இவர் , கிறிஸ்துவால் தெரிந்து கொள்ளப்பட்டு , அவர் சேனையில் போர்வீரரானார் .
திருச்சபைகள் கிறிஸ்துவுக்குள் வேகமாக வளரவேண்டும் என்று விரும்பிய இவர் *திருச்சபை வளர்ச்சி* என்ற நிறுவனத்தை 1961ம் ஆண்டு ஆரம்பித்தார் .
கலாச்சாரம் கடந்த சுவிசேஷ ஊழியத்தில் உயிர் துடிப்புள்ள தீவிரமான மிஷனெரியாக ஈடுபட்டார் .
திருச்சபை வளர்ச்சியின் அப்போஸ்தலராக , மக்கள் இயக்கங்களை உருவாக்கி மிகுந்த மாற்றத்தைக் கொண்டு வந்தார் .
வேதபாட வகுப்புகள் , ஆராய்ச்சிகள் மூலம் ஆயிரக்கணக்கானோரை இரட்சிப்பின் பாதையில் நடத்திய இவர் தமது 92வது வயதில் மறைந்தார் .
No comments:
Post a Comment