புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இடையன்குளத்தை மையமாகக் கொண்ட CMS மிஷன் பணி (8)

இடையன்குளத்தை மையமாகக் கொண்ட CMS மிஷன் பணி (8)*
*இடையன்குளத்தின் தொடக்ககாலக் குடும்பங்கள்*
இடையன்குளத்தை மையமாகக் கொண்டு கனம்.ரேனியஸ் ஐயரவர்களும் CMS மிஷனரிகளும் நற்செய்திப் பணியாற்றியபோது எட்டு சமூகங்கள் வாழ்ந்த இடையன்குளத்தில் நாடார் சமூகத்தினர் கிறிஸ்தவத்தை ஏற்றனர் அந்த தொடக்ககால குடும்பங்களில் முதல்குடும்பமான *1.காயாமொழி குடும்பம் (மேலத்தெரு வகையறா)* குறித்து பார்த்தோம் இதர குடும்பங்களாவன
*2.கீழ்காடு குடும்பம் (தெற்குத்தெரு வகையறா)*
காயாமொழிக்கு கீழ்பகுதி கிராமமான கீழ்காடு பகுதியில் இருந்து காயாமொழி குடும்பத்தாரின் அழைப்பின்பேரில்
காயாமொழி குடும்பத்தாருக்கு மச்சினன் உறவுமுறை கொண்ட இக்குடும்பத்தார் இடையன்குளத்தின் தெற்குபகுதியில் குடியேறினர்
இவர்கள் தெற்கு தெரு வகையறா என்றழைக்கப்படுகின்றனர்.
*3. குட்டம் குடும்பம் (மிராய்தார் வகையறா)* இடையன்குடிக்கு அருகிலுள்ள குட்டம் கிராமத்தைச் சேர்ந்த வன்னியநாடார் தமது இரண்டு ஆண்பிள்ளைகளான
1.பெரிய மிராய்தார்
2.சின்ன மிராய்தார்
ஆகியோருடன்
இடையன்குளத்தின் மேற்கிலுள்ள குடியிருப்பு என்ற இடத்தில் குடியேறினர்.
அங்கிருந்து பெரிய மிராய்தார் குடும்பத்தினர் ஆதிச்சப்பேரியிலும்
சின்ன மிராய்தார் குடும்பத்தினர் இடையன்குளத்திலும் குடியேறினர்.
பெரிய மிராய்தார் குடும்பம் எட்டுகுடும்பமாக பெருகிய நிலையில் அதிலிருந்து ஒரு குடும்பத்தினர் இடையன்குளத்தில் குடியேறினர்.
கிராமமுன்சீப் ஆக பெரியமிராய்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர் பரம்பரையாக இருந்தனர்.
*4.பூச்சிக்காடு குடும்பம்*
மாநாடு தேரிப்பகுதியைச் சேர்ந்த பூச்சிக்காடு கிராமத்திலிருந்து இடையன்குளத்தில் குடியேறிய இக்குடும்பத்தினர் பூச்சிக்காடு வகையறா என்றும் யோவன்னா வகையறா என்றும் அழைக்கப்படுகின்றனர்.
*5.கடசமனைக் குடும்பம் (கீழத்தெரு மற்றும் வடக்குத்தெரு வகையறா)*
கடசமனை என்ற கிராமத்திலிருந்து
சுடலைமாடசாமியைக் குலதெய்வமாக வழிபட்ட மாமன் மச்சினன் உறவுமுறை கொண்ட. குடும்பத்தினர் குழுவாகப் புறப்பட்டு இடையன்குளத்தின் கீழ்பகுதியிலும் வடகுதியிலும் குடியேறினர் ஆதலால் கீழத்தெரு மற்றும் வடக்குத்தெரு வகையறா என்றழைக்கப்படுகின்றனர்.
*6.வீரவநல்லூர் குடும்பம்*
வீரவநல்லூரிலிருந்து இடையன்குளத்தில் திருமணம் செய்து இடையன்குளத்தில் குடியேறிய குடும்பத்தினர் வீரவநல்லூர் குடும்பம் என்றழைக்கப்படுகின்றனர்.
*7.பிள்ளைகுளம் குடும்பம்*
பிள்ளைகுளத்திலிருந்து இடையன்குளத்தில் திருமணம் செய்து இடையன்குளத்தில் குடியேறிய குடும்பத்தினர் பிள்ளைகுளம் குடும்பம் என்றழைக்கப்படுகின்றனர்.
மேற்கண்ட குடும்பத்தினர் CMS மிஷனரிகளின் நற்செய்திப்பணியால் இடையன்குளத்தில் கிறிஸ்தவராயினர்.
(தொடரும்)
*ஜா.ஜான்ஞானராஜ் கல்லிடைக்குறிச்சி

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory