புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

நல்லூர் திருச்சபை

*நல்லூர் திருச்சபை ஆரம்ப வரலாறு*
நெல்லைக்கு மேற்கே குற்றாலம் ரோட்டில் ஆலங்குளத்திற்குப் பக்கமுள்ள நல்லூர் கிறிஸ்தவ சபை
ரேனியஸ் ஐயர் காலத்தில் ஆரம்பமானதாகும் .
குற்றால சீசனின் எதிரொலியை நல்லூரில் அப்படியே காணலாம் .
குற்றாலத்தில் சாரல் என்றால் அதன் ஈரம் நல்லூரில் துளிர்க்கும் . இவ்வூரில் நல்ல காற்றும் , மழையும் , சாரலும் இருந்தமையால் இவ்வூருக்கு *' நல்லூர் '* என்ற பெயரினை நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸ் சூட்டினார் .
1835 ஆம் ஆண்டு ரேனியஸ் ஐயர் அரசிடமிருந்து அறுபது ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி நல்லூரை உருவாக்கினார் .
தமிழ்நாட்டில் *' நல்லூர் '* என்று நிறைய ஊர்கள் உண்டு .
அவைகளில் இது ஓர் அர்த்தமுள்ள ஊர் .
கடாட்சபுரத்திலிருந்து தேவ பக்தி மிகுந்த விசுவாசம் என்ற சகோதரனை கூட்டி வந்து சிறிய கோயிலுக்கு உபதேசியாராக நியமித்தார் .
அவர்தாம் முதல் உபதேசியார் .
அங்கு ஆரம்பித்த மகளிர் பள்ளிக்கும் அவரே முதல் தலைமை ஆசிரியர் .
பின்பு மகத்தான பரி . பவுல் ஆலயம் கட்டப்பட்டு 1850 ஆம் ஆண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது .
அதன்பிறகே பையன்களுக்கான பள்ளியும் தொடங்கப்பட்டது.
அதுவே இன்றைய மேல் திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியாகும்.
(நல்லூர் விசுவாசம் உபதேசியார் - அன்னம்மாள் தம்பதியருக்கு
1.ரேச்சல்
2.மேரி
3.லீதியாள் என மூன்று பெண்பிள்ளைகள்
அதில் இரண்டாவது பெண்பிள்ளையான மேரியை நல்லூர் சாமுவேல் அவர்களின் 13 பிள்ளைகளில் 6 ஆவது பிள்ளையான ஜோசப்சாமுவேல் உபா திருமணம் செய்தார்.
CMS ல் இருந்து நீக்கப்பட்டபோது நல்லூரில் ரேனியஸ் தாம் தங்கியிருப்பதற்காக கட்டியிருந்த வீட்டை விசுவாசம் உபதேசியார் வாங்கினார் அவருக்குப்பின் அவரது இரண்டாவது மகள் மேரிஜோசப் சாமுவேல் குடும்பத்தினர் அதில் குடியிருந்தனர் அத்தம்பதியினருக்கு
1.ஐசக்சாமுவேல்
2.ஜான்விசுவாசம்சாமுவேல் எனஇருபிள்ளைகள்.
ஐசக்சாமுவேல் இலஞ்சியில் ஆசிரியராக உபதேசியாராகப் பணிசெய்தபோது இலஞ்சியில் பத்து ஏக்கர் மாந்தோப்பை வாங்கியதால் நல்லூர் வீட்டின் முழுபாகத்தையும் திருநெல்வேலி மாவட்ட விவாக ரிஜிஸ்ட்ரார் ஆக பாளையில் வசித்த தம் தம்பியான ஜான்விசுவாசம் சாமுவேலிடம் கொடுத்தார். அவர் பர்மாவில் பணிசெய்துவிட்டு நல்லூருக்கு திரும்பியிருந்த தம் சித்தி மகன் V.D.ஞானம் அவ்வீட்டில் வசிக்கும்படி கொடுத்தார் இந்த நெடும்பாரம்பரியமிக்க வீடு தற்போது V.D.ஞானம் அவர்களின் மகள் எபநேசரைத் திருமணம செய்த பால்ஆசீர்லாறி குடும்பத்தாரிடம் உள்ளது.
நல்லூர் கல்லூரிக்கு ஜெயராஜ்நாடார் குடும்பத்தாரை அடுத்து அதிகநன்கொடை கொடுத்தவர்கள். ஐசக்சாமுவேல் வயோதிபமானபோது தம் பத்து ஏக்கர் நிலத்தையும் நம் திருச்சபைக்கு எழுதிக்கொடுத்தார் அதில் ஒரு ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டது மீதியுள்ள 9 ஏக்கர் நிலத்தில் D.S.டேனியல்ராஜம்மாள் B.Ed College நடைபெறுகிறது அங்கிருந்த அந்த பத்து ஏக்கரை நன்கொடையாகக் கொடுத்த ஐசக்சாமுவேல் மற்றும் அவரது குடும்பத்தார் கல்லறை அகற்றப்பட்டு அதன் எழுத்துக்கல் (கல்லறை) வாட்ச்மேன் வீட்டி உள்ளது. ஐசக்சாமுவேலின் பேரன் கிறிஸ்டோபர் நல்லூர் கல்லூரியில்Campus Manager ஆக தற்போது பணிபுரிகிறார்.
ஐசக்சாமுவேலின் தம்பியும் மாவட்ட விவாக ரிஜிஸ்ட்ராருமான ஜான் வி.சாமுவேல் CMS சுத்தாங்க சுவிசேஷ சபையின் நிறவனர்களான ஆறுபேரில் ஒருவர் ஆனாலும் அவர் மரணம்வரை டயோசிசன் சபையிலேயே இருந்தார்
அவருக்கு ஏழு பிள்ளைகள்
1.மேரிமணிமுத்து சாமுவேல்
2.லில்லி பால்
3.அன்பன்டேவிட்ஜான்
4.மேர்சி அன்னத்தாய் டேனியல்
5.எல்சிதாயம்மாரேனியஸ்
6.டேனியல்பால்ஜான்
7.விக்டோரியாபாலா
மேற்கண்ட ஏழுபேரில் லில்லி தவிர்த்து அனைவரும் சீரியபணியாற்றிய ஆசிரியர்கள்
எனது தாயார் நல்லூர் திரு.விசுவாசம் உபதேசியாரின் கொள்ளு பேத்தியான
மேர்சிஅன்னத்தாய் டேனியலின் மகள் பத்மினி எவாஞ்சலின் ஜேக்க ஆவார்.)
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory