புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

K . S . ஆபிரகாம் ஐயா

ஊழியத்தில் அர்ப்பணிப்பும் , ஏற்றுக்கொள்ளுதலும் அவசியம் தேவை என்ற அருட்திரு K . S . ஆபிரகாம் ஐயா பிறந்த தினம்*
ஆ ண் ட வ ரி ன் பணியனாலும் உலக வேலையானாலும் *பணிமாற்றம்*என்பது அடிக்கடி நிகழ்வதுண்டு .
திடீரெனக் கட்டளையிடப்படும் பணி மாற்றங்களைப் பலர் விரும்புவதில்லை .
உலகப் பணிகளில் சாக்குப் போக்கு சொல்லியோ சதியாலோசனை செய்தோ தமக்கு வரும் விருப்பமில்லாப் பணியிட மாற்றத்தைத் தகர்த்து விடுபவர் பலர் .
ஆனால் ஊழியப் பணியில் அப்படிச் செய்வது சரியோ ?
போதகராகப் பணியாற்றிய K . S ஆபிரகாம் ஐயர் ஒரு கிராமப் பகுதியில் சுவிசேஷ ஊழியம் செய்து கொண்டிருந்த நேரம் .
வீட்டிற்குத் தந்தி ஒன்று வந்தது . அவர் பணியிடம் மாற்றப்பட்டு இருந்தார் .
அந்நாட்களில் தொலைபேசி வசதி இல்லாத காரணத்தால் , போதகரின் மனைவி ஐயரிடம் ஆளனுப்பி " அதிக வசதி இல்லாத இடம் . வேறு இடத்துக்கு மாறுதல் கேட்கவும் என்று சொல்லி அனுப்பினார் .
போதகரிடமிருந்து " ரோமர் 8 : 28ஐ வாசி " என்ற பதில் வந்தது .
போதகர் மனைவி தன்னை ஆண்டவருக்குள் புதுப்பித்துக் கொண்டார் .
குடும்பமாகத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்திற்கு மாற்றலாகிச் சென்றனர் .
ஊழியத்தில் அர்ப்பணிப்பும் , ஏற்றுக்கொள்ளுதலும் அவசியம் தேவை .
அவ்வாறு சுயசித்தத்தைச் சாகடித்தவர்களே ஊழியக்காரர்கள் .
மற்றவர்கள் ஊதியக்காரர்கள் .
1954 - 1973 வரை தென்னிந்திய திருச்சபையின் போதகராகப் பல்வேறு இடங்களில் பணியாற்றிய ஆபிரகாம் ஐயர் அவர்கள் இசை ஞானம் மிக்கவர் .
கதா காலட்சேபம் நடத்தி கிறிஸ்துவின் பாடுகளை அறிவிப்பதில் அவருக்கு நிகர் அவரே .
மிஷனெரிப் பணியில் ஆர்வம் காட்டிய ஐயர் அவர்கள் *நண்பர் சுவிசேஷக் குழுவின் மிஷனெரியாகத்* தன்னை அர்ப்பணித்து , மிஷனெரிப் போதகராக மாபெரும் பணிகளைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory