புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

புரூனோ

*மெளன சபையை தோற்றுவித்த புரூனோ*
உங்களால் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருக்க முடியுமா ?
உலகக் காரியங்களை சிந்திக்காமல் , நாட்டு நடப்புகளை நினைத்துப் பார்க்காமல் , இறை சிந்தனையிலேயே அமர்ந்திருந்து .
தனிமையில் ஆண்டவரோடு உறவாட முடியுமா ?
மெளன சபை என்று ஒன்று உள்ளது .
இவர்கள் யாரிடமும் அதிகமாக பேசமாட்டார்கள் .
தனிமை ஒன்றையே தங்கள் தோழமையாகக் கொண்டவர்கள் .
தனித்தனி குடிசையில் தங்கியிருந்து , அமைதியாக தியானத்தில் ஈடுபடுபவர்கள் .
ஆண்டவரையே தங்கள் உயிராக நினைத்து , உருகி நிற்பவர்கள் வாழ்வு அனைத்தையும் இறைவனிடம் கையளித்தவர்கள் .
இச்சபையைத் தோற்றுவித்தவரே புரூனோ .
அது ஒரு அடக்க ஆராதனை .
புரூனோவும் அவர் நண்பர்களும் அவ்வடக்க ஆராதனையில் பங்கு கொண்டிருந்தார்கள் .
திடீரென மரித்தவன் எழுந்தான் .
சத்தமிட்டு அழுதான் . ஓவெனக் கத்தினான் . " நான் நரகத்திற்கு தீர்ப்பிடப்பட்டிருக்கிறேன் " என்றுசொல்லிக்கொண்டிருக்கும்போதே பொத்தெனவிழுந்தான் .
இதைக் கண்ட புரூனோ அஞ்சி நடுநடுங்கினார் .
உலக இன்பங்களைத் துறந்தார் .
தம் தோழர்களோடு காட்டிற்குச் சென்றார் . கர்த்தூசியன் என்னும் சபையைத் துவங்கினார் .
ஏழ்மை , தன்னை வெறுத்தல் , மௌனம் என்பவையே இவற்றின் முக்கிய அம்சங்கள் .
உயர்ந்த பதவிகள் இவருக்குக் கொடுக்கப்பட்ட போதும் , அவற்றை உதறித் தள்ளி உன்னதமான இறைவனையே தனது மிகப்பெரும் சொத்தாக எண்ணி அனுதினமும் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்தார் .
இவரின் சபை சிதைவுறவில்லை .
எனவே சீர்திருத்தப்படவில்லை . நேர்மையும் , ஒழுங்கும் அங்கே கடைபிடிக்கப்பட்டன .
இளைஞர்கள் பலர் இவரின் தவ வாழ்வால் ஈர்க்கப்பட்டு , தங்களை இறைவனுக்கு காணிக்கையாக்கினர் .
தமது இறப்பை முன்னறிந்த இவர் , சக துறவிகளை அழைத்து , திருவிருந்தை உட்கொண்டு , இறைவனிடம் தன் ஆவியை ஒப்படைத்தார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory