*" மறுதலி அல்லது மரித்துவிடு . "*
*சுவிசேஷத்திற்கு சாட்சியாக விளங்கிய ஜாண் ஹஸ்*
சுவிசேஷத்திற்கு சாட்சியாக விளங்கிய ஜாண் ஹஸ்ஸிற்கு ஒரு கட்டளை கொடுக்கப்பட்டது .
*" மறுதலி அல்லது மரித்துவிடு . "* மறுதலித்தல் என்பது என்ன ?
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தை விட்டு விடவேண்டும் .
இல்லையென்றால் மரண தண்டனை . நீங்கள் இதில் எதனைத் தேர்ந்தெடுப்பீர்கள் ?
ஜாண் ஹஸ் ஒரு வைராக்கியமுள்ள கிறிஸ்தவர் .
மதப்போதகரும் கூட . அந்நாட்களில் கிறிஸ்தவ சபைகளில் முறையான , தெளிவான விசுவாசமுள்ள உபதேசங்கள் இல்லை .
குருமார்களும் , போப்புவும் தங்கள் விருப்பப்படி வேதாகமத்தைத் திரித்தும் , தவறாகவும் பிரசங்கித்தனர் .
பண ஆசை பிடித்தவர்களாகவும் , ஆடம்பரப் பிரியர்களாகவும் அவர்கள் காணப்பட்டனர் .
ஜாண் ஹஸ் இவைகளைக் கடுமையாக எதிர்த்தார் .
கிறிஸ்துவின் மேல் உள்ள பற்றுதலால் பொஹீமியா மொழியில் தெளிவான சத்தியத்தை எடுத்துரைத்தார் .
ஜாண் விக்ளிப்பின் போதனைகளை மிகவும் மதித்து அவைகளை மக்களிடம் துணிவுடன் கூறினார் .
இதனால் எதிராளிகள் இவரைக் கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டினர் .
போப்பால் கூட்டப்பட்ட விசாரணைக்கு வரும்படி பணிக்கப்பட்டார் .
அவ்விசாரணைக்கு போகும் பாதையில் மறைவான முறையில் தாக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார் .
முடிவில் விசுவாசத்தில் நிலைத்து நின்றதால் மரணதண்டனை விதிக்கப்பட்டார் .
ஒரு திருமண விருந்துக்குச் செல்வது போல் தன்னை நெருப்புக்கு ஆயத்தம் செய்தார் .
ஒரு மரத்தில் , கை , கால்களைக் கட்டினர் . கழுத்துவரை வைக்கோலும் விறகும் குவிக்கப்பட்டன . நெருப்புத் தழல்கள் உயர்ந்தபோது அதைக் காட்டிலும் மேலாக ஆண்டவரைப் புகழ்ந்து பாட விண்ணகம் ஏகினார் .
கடலில் கரைக்கப்பட்ட அவரது சாம்பல் உலகெங்கும் சென்று சத்தியத்திற்கு சாட்சி பகருகின்றது .
No comments:
Post a Comment