புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இடையன்குளத்தை மையமாகக் கொண்ட CMS மிஷன் பணி (7)

இடையன்குளத்தை மையமாகக் கொண்ட CMS மிஷன் பணி (7)*
*இடையன்குளத்தின் தொடக்ககாலக் குடும்பங்கள்*
இடையன்குளத்தை மையமாகக் கொண்டு CMS மிஷன் இறைபணியாற்றியபோது கிறிஸ்தவத்தை ஏற்ற
நாடார் சமூகக் குடும்பங்கள் குறித்து சுருக்கமாகக் காண்போம்
*காயாமொழி குடும்பம்*
காயாமொழியில் வசித்துவந்த *பூவணைஞ்சபெருமாள் நாடார்* அவரது மனைவி நிறைமாதக் கர்ப்பிணி.
சகோதர உறவினர்களுக்கிடையிலான கருத்துமோதலில் மனவெறுப்புற்றிருந்த பூவணைஞ்சபெருமாள் நாடார் மேற்குநோக்கி புறப்படப்போவதாகக் கூற அவரது மனைவி தாமும் வருவதாகக் கூற இருவரும் புறப்பட்டபோது தம்பி *சொள்ளமுத்து நாடாரும்* இணைந்துகொள்ள மேலப்பாளையம் வழியாக கோபாலசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையை ஒட்டி இருந்த பசுங்கிளி சாஸ்தா கோவிலை வந்தடைந்தனர்.
பூவணைஞ்சபெருமாள் நாடார் வெளியே சென்றிருந்த நிலையில் அவரது மனைவி பிரசவவேதனையால் துடித்ததாகவும் அத்தகவலை பசுங்கிளி சாஸ்தா அக்கோயில் பூசாரிக்கு தெரியப்படுத்தியதாகவும் பூசாரி தம் மனைவியோடு வந்ததாகவும் பூசாரியின் மனைவி அழைத்துச் சென்று பிரசவம் பார்த்ததாகவும் சிலகாலம் தம் வீட்டில் அவர்களை வைத்து கவனித்ததாகவும் செவிவழிச்செய்திகள், ஓலைச்சுவடிகள் மூலம் அறியமுடிகிறது.
கைக்குழந்தையோடுகோபாலசமுத்திரத்திலிருந்து புறப்பட்ட இக்குடும்பத்தினர் அக்காலம் முதல் பசுங்கிளி சாஸ்தாவைக் குலதெய்வமாக ஏற்று தம் பிள்ளைகளுக்கு பசுங்கிளி
பசுபதி
எனப்பெயர் சூட்டினர்.
கோபாலசமுத்திரத்திலிருந்து புறப்பட்ட இக்குடும்பத்தினர் இடையன்குளத்தின் மேற்குப்பகுதியில் மேற்குதொடர்ச்சி மலையடிவாரம் உள்ள பெரியதோப்புக்காட்டுக்கு வந்தனர் அங்கு மங்கம்மாசாலையை ஒட்டி பனைஓலையால் வேயப்பட்ட மேற்கூரையைக் கொண்ட வீட்டில் குடியிருந்தபோது அந்த சாலை வழியே வந்த இராணிமங்கம்மாள் அவ்வீட்டில் இருந்து கேட்ட கைக்குழந்தையின் அழுகுரலைக் கேட்டதும் தம் குதிரைவண்டியை நிறுத்தி விசாரிக்க பூவணைஞ்சபெருமாள் நாடார் குடும்பத்தினர் தாம் காயாமொழியில் இருந்துவந்து அங்கு தங்கியிருப்பதைக் கூற அப்பகுதியில் உள்ள பல ஏக்கர் நிலங்களை அவர் பூவணைஞ்சபெருமாள் நாடார் குடும்பத்திற்கு செப்புபட்டயம் எழுதிக் கொடுத்தார். அங்கிருந்து புறப்பட்ட
அக்குடும்பத்தினர்
ஆதியாபள்ளம் என்ற இடத்தில் சிறிதுகாலம் தங்கினர் பின் தற்போதைய இடைய்ன்குளத்தின் மேற்பகுதியில் குடியிருப்பு என்றழைக்கப்படும் இடத்தில் குடியேறினர் சிறிது காலத்திற்குப் பின் தற்போதைய இடையன்குளத்தின் மேல்பகுதியில் குடியேறினர்.
பூவணைஞ்சபெருமாள் நாடார் சொள்ளமுத்துநாடார் ஆகிய இருசகோதரர்களின் சந்ததியினராகிய அவர்கள் மேலத்தெரு வகையறா என்றும் பசுவநாடார் குடும்பத்தினர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இக்குடும்பத்தினரின் குடியேற்றமே இடையன்குளம் நாடார் சமூகத்தின் முதல்குடியேற்றம்.
(தொடரும்)
ஜா.ஜான்ஞானராஜ்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory