புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஜான் பால்மர்



ஜான் பால்மர்
(1812- 1883)
இவர் யார் என்று 90% தமிழ் கிறிஸ்தவர்களுக்கு தெரியாது. ஆனால் இவர் எழுதிய பாடலை தெரியாத ஒரு கிறிஸ்தவர்கள் கூட இல்லை எனலாம்....
#குமரி மாவட்டம் #மைலாடியில் 1812 ஆம் ஆண்டு நவம்பர் 15ல் பிறந்தார்.
#தென்_திருவிதாங்கூரின் முதல் #சீர்திருத்த ஆலையம் மைலாடியில் தான் 1809 ல் கட்டப்பட்டது.
ஜான் பால்மரின் தந்தை #ஞானபிரகாசம். இவர் திருவிதாங்கூரின் முதல் சீர்திருத்த கிறிஸ்தவரான #மகாராசன்_வேதமாணிக்கம்_தேசிகரின் நெருங்கிய உறவினர்.
ஞானபிரகாசம் கிறிஸ்தவரான வரலாறு
தனது நெருங்கிய உறவினர் மகாரசன் வேதமாணிக்கம் கிறிஸ்தவரானதால் கோபம் கொண்ட ஞானபிரகாசம் வேதமாணிக்கத்தை பகைத்தார். எட்டு நாளைக்குள் உனக்கு நல்ல பாடம் புகட்டுகிறேன் என்று கூறி வேதமாணிக்கத்தை சாபமிட்டார் ஞானபிரகாசம்.
எட்டு நாள் கழிந்தும் சாபம் வேதமாணிக்கத்தை நெருங்காததால் ஆத்திரமடைந்த ஞானபிரகாசம் 30 நாளில் நீ மரித்துவிடுவாய் என்று சாபமிட்டார்.
30 நாள் கழிந்தும் எதுவும் நடக்கவில்லை, எனவே வேதமாணிக்கத்திடம் தன் தோல்வியை ஒப்புக்கொண்ட ஞானபிரகாசம் உமது கடவுள் தான் உண்மையான கடவுள் என்று இயேசுவை ஏற்றுக்கொண்டு தனது பெயரை பால்மர் எனவும் தனது மகன் பெயரை ஜான் பால்மர் எனவும் மாற்றி அருள்திரு. #ரிங்கல்_தௌபேயால் திருமுழுக்கு பெற்றார். இன்றும் இவரது குடும்பத்தினர் அனைவரும் தங்கள் பெயருடன் பால்மர் என்ற பெயரையும் இணைத்துள்ளனர்.
ஜான் பால்மரின் வாழ்க்கை வரலாறு, அவரது இறைபணி, எழுதிய புத்தகங்கள் குறித்து எழுதினால் ஒரு புஸ்தகமே வெளியிடலாம்.......
ஜான் பால்மரின் 200 க்கும் மேற்பட்ட கீர்த்தனை பாடல்கள் அச்சேறாமல் அழிந்து போனது வேதனையான ஒன்று.
ஆனாலும் சில பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளது.
கிறிஸ்து குல ஆசிரமம், கிறிஸ்தவ இலக்கிய சங்கம், #கன்னியாகுமரி_பேராயம், மயிலாடியை சார்ந்த சி.எம். ஆகூர் என்பவர் எழுதிய திருவிதாங்கூர் சபை சரித்திரம் போன்ற நூல்களில் இருந்து 54 கீர்த்தனைகள் இன்று கிடைத்துள்ளன. அவற்றுள் சில பாடல்கள்....
1) ஆ! வாரும் நாம் எல்லோரும் கூடி மகிழ் கொண்டாடுவோம்
2) இந்நாளில் இயேசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்
3) இயேசுவே கிருபாசன பதியே
4) உந்தன் சுயமதியே நெறி என்று உகந்து சாயாதே
5) ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே
6) ஓய்வு நாளதை ஸ்தாபித்தருளிய உன்னதா உமக்கே 
7) கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே
8) நெஞ்சமே தள்ளாடி நொந்து நீ கலங்காதே
9) பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா
10) பெத்தலையில் பிறந்தவரை போற்றி துதி மனமே
11) வாராவினை வந்தாலும் சோராதே மனமே
12) அடங்காதே நாவு தீதே அதை ஆட்கொள்ளவே பார்
13) சரணம் சரணம் சரணம் எனக்குன் தயை புரியும்
இன்னும் பல பாடல்கள்......
பல நூல்களையும் எழுதியுள்ளார்.....
கவிஞர் ஜான் பால்மர் 1883 ஏப்ரல் 2 அன்று தனது 71 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.
இவரது உடல் திருவனந்தபுரத்திலுள்ள கிறிஸ்து நாதர் ஆலயத்தின் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 
இவரது புகழை கூறும் விதமாக இவர் பிறந்த ஊரான மைலாடியில் உள்ள ஒரு தெருவுக்கு #ஜான்_பால்மர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வாராவினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே
- ஜான் பால்மர்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory