புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இடையன்குளத்தை மையமாகக் கொண்ட CMS மிஷன் பணி - (6)

*இடையன்குளத்தை மையமாகக் கொண்ட CMS மிஷன் பணி - (6)*
*இடையன்குளம் ஊரின் தொடக்கம்*
இடையன்குளத்தில் CMS மிஷன் கனம்.ரேனியஸ் ஐயரவர்கள் மூலம் தம் நற்செய்தி பணியைத் தொடங்கும் 1825,1826,1827 காலகட்டங்களுக்கு முன்பாக அவ்வூரின் தொடக்கம் குறித்து சுருக்கமாகக் காண்போம்.
இடையர் (கோனார்) சமூகத்தவர் முத்தாரம்மனைக் குலதெய்வமாகக் கொண்டும்
பிராமணர் பிள்ளைமார் சமூகத்தினர் பிராமத்திம்மனைக் குலதெய்வமாகக் கொண்டும்
ஆசாரிமார் முப்புடாதியம்மனைக் குலதெய்வமாகக் கொண்டும் அத்தெய்வங்களுக்கு இடையன்குளத்திலேயே கோயில் கட்டி வழிபட்டு வந்தனர்.
இந்த நான்கு சமூகத்தோடு
ஒரு இஸ்லாமியக் குடும்பம்
ஒரு மீன்பரதவ சமூகக் கத்தோலிக்கக் கிறிஸ்தவ குடும்பம்
ஒரு தொண்டைமான் சமூகக் குடும்பம்
ஒரு படையாச்சி சமூகக்குடும்பம் ஆகிய எட்டு சமூகக்குடும்பங்களோடு நாடார் குடும்பங்கள் மற்றும் நாடார்கள் இடப்பெயர்ச்சி செய்கையில் அவர்களோடு இணைந்துசெல்கிற சேவைசமூகத்தார் என நாட்டார் வழக்காற்றியலில் குறிப்பிடப்படுகிற மருத்துவகுல பண்டிதர் சமூகக்குடும்பம் (சவரத்தொழிலாளர்),
வண்ணார் சமூகக்குடும்பம் (சலவைத்தொழிலாளர்) ஆகியோர் வாழ்ந்த பாரம்பரியக் கிராமமாக விவசாயத்துக்கும் பனையேற்றுத்தொழிலுக்கும் ஏற்ற செழிப்பான கிராமமாக இடையன்குளம் இருந்தது.
நாடார் குடும்பங்கள் இடையன்குளத்தில் பெருவாரியாகக் குடியேறியவுடன் இடையர் (கோனார்) சமூகத்தவர் தமது குலதெய்வகோயிலை நாடார் சமூகத்தவரிடம் கொடுத்துவிட்டு வேற்றிடங்களுக்கு சென்றுவிட்டனர்.
அதுபோன்று பிராமத்தியம்மனை வழிபட்ட பிராமணர்களும் பிள்ளைமார்களும் வெளியேறிவிட்டனர்.
*மறவரது துணையுடன் பிள்ளைமார்களின் அச்சுறுத்தல்*
பிள்ளைமார்கள் வெளியேறிவிட்டாலும் அவர்கள் இடையன்குளத்து நிலபுலன்களோடு தொடர்பு வைத்திருந்தனர்
பிள்ளைமார்கள் மறவர் சமூகத்தவரைத் தங்களுக்குத் துணையாக வைத்துக்கொண்டு நாடார் சமூகத்தவரின் நிலபுலன்களை, விளைச்சலைக் கொள்ளையடிப்பதும் அவர்களது வீடுகளுக்கு தீ வைப்பதும் ஆகிய செயல்களைச் செய்து வந்தனர்.
சுப்பிமணியப்பிள்ளை
ஓமநல்லூர் பத்தமடையாப்பிள்ளை ஆகியோர் இதில் முக்கியப்பங்காற்றினர். இது ரேனியஸ் ஐயரவர்களின் காலத்தில் இடையன்குளத்தார் கிறிஸ்தவத்தை ஏற்றபோதும் நடைபெற்றதை ஏற்கனவே கண்டோம் இவர்களிருவரும் மறவரது துணைகொண்டு அச்சுறுத்திவந்தனர் இடையன்குளத்தார் அக்காலம் இவர்களுக்கெதிராகநிலபுலன்சார்பு வழக்கில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திலும் திருச்சியிலிருந்த மாநிலநீதிமன்றத்திலும் வெற்றிபெற்றபோதும் மீண்டும் கொள்ளையடிப்பு தீ வைத்தல் இவர்களால் நடைபெற
மனம் வருந்திய ரேனிய்ஸ் CMS தலைமை விசாரணை உபதேசியாராக இருந்த தாவீது உபதேசியாரை அனுப்ப அவரும் தம் ஆட்களோடு தீவட்டிகள் சகிதமாக இடையன்குளம் வந்து தங்கினார்.
அந்நேரம் இடையன்குளம் உபதேசியாராக ஆழ்வாநேரியைப்பூர்வீகமாகக் கொண்டவரும் அவ்வூரின் முதல்கிறிஸ்தவருமான தேவசகாயம் உபதேசியார் ரேனியஸால் சபைஊழியராக நியமிக்கப்பட்டிருந்தார்
இவ்விருவரும் மிகுந்த தைரியசாலிகள் இவ்விருவரும் இடையன்குளத்து மக்களோடு இணைந்து எடுத்த உறுதியான நடவடிக்கைகளால் மறவரது துணைகொண்டு இடையன்குளத்தை அச்சுறுத்திய சுப்பிரமணியப்பிள்ளையும் ஓமநல்லூர் பத்தமடையாப்பிள்ளையும் அடங்கினர்.
இதுவே கனம்.ரேனியஸ் ஐயரவர்கள் CMS மிஷன் பணியாற்ற இடையன்குளம. வந்தபோது அவ்வூரின்நிலை.
கனம்.ரேனியஸ் இடையன்குளத்தில் CMS மிஷன் பணியைத் தொடங்க உதவியாக இருந்தவர்கள் இடையன்குளம் நாடார் சமூகத்தினர்.
*இடையன்குளத்தில் நாடார்களின் குடியேற்றம்*
இடையன்குளத்தில்
நாடார்களின் முதல்குடியேற்றம் இராணிமங்கம்மாள் காலத்தில் மானவீரவளநாடு என்ற மாநாடு வட்டாரம் காயாமொழியிலிருந்து சகோதரர்களுக்கிடையேயான கருத்து மோதலின் காரணமாக வருத்தமடைந்து மேற்குநோக்கி புறப்பட்ட பூவணைஞ்சப்பெருமாள் நாடார்
சொள்ளமுத்துநாடார் ஆகிய இரு உடன்பிறந்த சகோதரர்களது குடும்பத்தால் ஏற்பட்டது.(தொடரும்)
ஜா.ஜான்ஞானராஜ்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory