புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

CMS குதிரை SPG புல்லை தின்னாது

CMS குதிரை SPG புல்லை தின்னாது..😵😵😵
CMS, SPG ஆகியன திருநெல்வேலிக்கு வந்து கிறிஸ்தவத்தை அறிவித்த முக்கியமான இரு மிசன்கள் ஆகும். இந்த இரு மிசன்களும் ஆங்கிலிக்கன் பின்புலத்தை சார்ந்தாலும் அவரை ஒன்றுகொண்டு சேராமல் இரு துருவங்களாகவே நூறு ஆண்டுகளுக்கு மேல் திருநெல்வேலியில் சுவிசேசத்தை அறிவித்து கொண்டிருந்தது.CMS மற்றும் SPG சபைக்களுக்கு இடையே ஐக்கியம் இராமல் வேறுபட்ட கருத்தும், பகைமை உணர்வுமே மேலோங்கி இருந்தது. CMS காரர் குதிரை SPG காரர் புல்லை தின்னாது என்ற பேச்சு வழக்கே உருவாகிவிட்டது என்றால் பாருங்களேன். என்றாலும் தேவ கிருபையால் இரண்டு இயக்கங்களும் பல ஊழியர்களின் முயற்சியால் ஒன்றிணைந்தது. சரி இவைகள் இரண்டும் ஒரே ஆங்கிலிகன் சபையை சார்ந்தது என்றாலும் ஏன் பிரிந்து இருந்தது ? அவைகளுக்கு இடையேயான ஒரு அடிப்படை வித்தியாசத்தை இப்பொது காண்போம்.
CMS ( Church Missionory Socity)
இந்த இயக்கம் 1799 ஆம் ஆண்டு லண்டனில் தொடங்கப்பட்டது. இது அடிப்படை கிலபம் என்னும் பிரிவில் இருந்து வந்தது. கிலபம் என்னும் இந்த பிரிவு ஆங்கிலிகன் சபையில் இருந்து உருவாகிய ஒரு கிளர்ச்சி ஆகும்.இவர்கள் ஆங்கிலிகன் சபையின் சமுதாய சீர்திருத்தவாதிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பொதுவாக நற்செய்தி அறிவிப்பாளர்களாகவும் அதே நேரத்தில் அரசியல் மற்றும் சமுதாய பணிகளை மேற்கொள்ளுகிறவர்களாக இருந்தனர். CMS சபையின் ஆவிக்குரிய பின்புலம் என்பது கிரேட் அவேக்கனிங் (The Create Awakening) என்று அழைக்கப்படும் ஒரு சீர்திருத்த போராட்டத்தினை அடிபடையாக கொண்டதாகவே இருந்தது. எப்படி ஜான் வெஸ்லி என்ற ஆங்கிலிக்கன் பாதியார் பிரிந்து மெத்தடிஸ்ட் என்னும் ஒரு சபைபிரிவை ஏற்படுத்தினாரோ அது மாதிரி அல்லாமல் பிரிந்து போகமால் ஆங்கிலிகன் கூடவே இணைந்து பணியாற்றும் ஒரு இயக்கமாக CMS இருந்தது. CMS ஆங்கிலிக்கன் சபையினரின் பிஷப், மற்றும் ஆராதனை முறைமைகள் போன்றவற்றை ஏற்றுகொண்டாலும் சபையை குருவானவர்கள் மட்டுமே நிர்வாகிக்கவேண்டும் என்ற கோட்பாட்டை எதிர்த்தது. லே மற்றும் பெண்களும் சபைகளில் பங்கேற்ப்பதை வலியுறுத்தியது. இரத்தின சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் CMS ஒரு அங்கிலிக்கன் சீர்திருத்த நிறுவனம்.
உலகில் உள்ள பல இடங்களில் ஆங்கிலிகன் சபையின் தடங்கள் இருபதற்கு காரணம் CMS என்றும் சொல்லலாம்.
SPG (Socity for the Propagation of the Gospel)
SPG என்பது முழுக்க முழுக்க ஆங்கிலிக்க சபையினரால் சட்டப்படி அரசாங்க முறைப்படி ஏற்படுத்தபட்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஒரு ஆங்கிலிக மிசனரி இயக்கம் ஆகும். இங்கிலாந்திற்கு அப்பால் ஆங்கிலிக்க அமைப்பையும் சுவிசேஷத்தையும் எடுத்து செல்லவேண்டும் என்பதால் இது 1701 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கங்களாக முன்று விசயங்களை சொல்லலாம்
1. பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருக்கும் நாடுகளில் இருக்கும் ஆங்கிலிக்கன் சபை மதக்குருக்களுக்கு பராமரிப்பு மற்றும் கிறிஸ்தவத்தை பரப்புவதற்காகவும்
2. காலனி மற்றும் தொழிற்ச்சாலைகள் இருக்கும் இடங்களில் கிறிஸ்துவை அறிவிக்க தகுந்த ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கும்
3. அரசாங்கத்தின் நெறிமுறைகளை பயிற்றுவிப்பதர்க்காகவும் ஏற்படுத்தப்பட்டது
இதையும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது ஆங்கிலிக்கனின் பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் ஒரு இயக்கம் ஆகும்.
நான் முன்பு பதிவிட்ட ரேனியஸ் பதிவை இதை படித்தபின் மறுபடியும் படித்தால் CMS மிசனரியாகிய ரேனியஸ் ஏன் புரட்சி எண்ணத்தில் இருந்தார் என்பது விளங்கும்.
ரேனியஸ் ஐயரின் புரட்சி
Sujith Rex (@iamsujithrex)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory