புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ரேனியஸ் ஐயரின் புரட்சி போராட்டம் ( அரசியல்)

ரேனியஸ் ஐயரின் புரட்சி போராட்டம் ( அரசியல்)
(1830 - 1838 )இந்த காலங்கள் அரசியலும் கருத்தியலும் மாறி மாறி தாக்கி கொண்ட காலம். ரேனியஸ் ஐயர் மன விசாலத்தோடும், மன தைரியத்தோடும் பல முடிவுகளை எடுத்த காலங்கள் அவை.
இன்றைக்கு ரேனியஸ் ஐயரை திருமண்டலமே கொண்டாடுகிறது. அவர் தன் வாழ்க்கையை இந்த திருமண்டலத்திற்காக அர்பணித்து வாழ்ந்தார் என்பதும் நாம் அறிந்ததே. என்றாலும் அவரின் வாழ்க்கையின் கடைசி வருடங்களில் அவர் போராடியே கழித்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. என்னை பொறுத்தவரை ரேனியஸ் ஐயர் சீர்திருத்த எண்ணம் உடைய ஒரு கிறிஸ்தவ போராளி.( இது ஏன் என்பது நான் CMS, SPG பற்றி எழுதும் வரிசையில் புரிந்து கொள்வீர்கள்). அவரது நாட்குறிப்புகளில் அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவரது வேதனையும், எழுச்சி மிகுந்த எண்ணங்களையும், ஆத்தும பாரத்தையும் எதிரொலிப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். சரி CMS மிசனரியாக இருந்த அவர் ஏன் CMS ல் இருந்து ஒதுக்கப்பட்டார்? இதை நாம் ஒரு கோணத்தில் யோசிக்க முடியாது ஏன் என்றால் ஒரு கோணத்தில் கண்டால் அது நியாயமும் கிடையாது. ஒரு போராளியின் எண்ணம் அவருக்கு நியாயமாக தோன்றும் பட்ச்சத்தில் அது அதை எதிர்க்கும் பலர்க்கு அநியாயமாக தோன்றலாம். நான் எனக்கு கிடைத்த தகவல்களின்படி ஒரு முன்று கோணத்தில் இந்த பதிவை எழுதுகிறேன். (ரேனியஸ் ஐயரின் கோணத்தை மற்றொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன். ஏன் என்றால் அதற்கு சில முக்கியமான சம்பவங்கள் பற்றிய விளக்கங்கள் வேண்டும்).
முதலாவது கோணம் ஒருங்கிணைந்த திருநெல்வேலி திருமண்டலத்தில் உள்ள ஒரு குருவானவரின் கோணம்: (கணம்.கிறிஸ்துதாஸ் ஐயரின் இருநூற்றாண்டு சரித்திரம் புத்தகத்தில் இருந்து)
“ ரேனியஸ் தனது மிசனரி வாழ்வின் உச்சத்தில் இருக்கும் போது தான் CMS இன் திருநெல்வேலி மிசனில் விரும்பபடாத பிளவுகள் எற்பட்டது. அக்காலத்தில் இருந்த ஏழு திறமையான உபதேசிமாரின் குரு அபிசேகத்தை பற்றிய அது உண்டானது. லுத்தரன் முறைப்படி அவர்களுக்கு குரு அபிசேகம் கொடுக்க CMS சென்னை கமிட்டியின் உதவியை ரேனியஸ் நாடினார். அதற்க்கு கமிட்டி அனுப்பிய பதில் : இந்தியாவில் பேராயர் எவரும் இல்லாத போது அல்லது இந்தியர்களுக்கு அபிசேகம் கொடுக்க பேராயருக்கு அதிகாரம் இல்லாத பொது இந்தியர்கள் லுத்தரன் முறைபடி அபிசேகம் பெறலாம். ஆனால் அவர்களுக்கு அபிசேகம் அளிக்க கூடிய பேராயர் ஒருவர் இந்தியாவில் இருக்கும் போது அவர்கள் ஆங்கிலேய முறைப்படி அபிசேகம் செய்யப்படுவதே அவசியம். இங்கிலாந்து திருச்சபையின் பல்வேறு விதிகளை பற்றி தமது உபதேசிமாருக்கு மனசாட்சியின்படி மறுப்பு உண்டு என்று ரேனியஸ் பதில் எழுதினார். இது பற்றி ரேனியஸ் எழுதின ஒரு துண்டு பிரதி தாய்சங்கத்தாரின் கவனத்தை ஈர்த்தது.அவரது பணி வேண்டாம் என்று அவருக்கு தீர்மானம் நிறைவேற்றியது. இச்செய்தி அவருக்கு கிடைத்த பத்தாவது நாள் அருள்திரு டக்கர் மிசன் பொறுப்பேற்கும்படி பாளையங்கோட்டைக்கு வந்தார். ரேனியஸின் உபதேசிமார் அனைவரும் அவரை சூழ்ந்து வந்தனர். நெடு ஆலோசனைக்கு பிறகு பணித்தளத்தை விட்டு விலக போவதாக தனது தீர்மானத்தை அவர் அறிவித்தார்.”
அடுத்ததாக CMS தாய் கழகத்தின் கோணத்தில் (From CMS Archives) :
ஜெர்மன் லுத்ரன் சபையின் பணியாளார் இருவர் இந்தியாவின் முதல் CMS மிசனரிகளாக மெட்ராஸிற்க்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் ரேனியஸ் மிகவும் புலமை வாய்ந்தவராகவும், மிகுந்த தன்னம்பிக்கை உடையவராகவும், தனித்துவம் வாய்ந்தவராகவும் இருந்தார். லுத்தரன் திருச்சபையில் உள்ளவர்களும், ஆங்கிலிக்கன் திருச்சபையில் உள்ளவர்களுக்கும் இடையில் உள்ள புரிந்துணர்வின் இயலாமை காரணமாகவும், மற்றும் மெட்ராஸ் கமிட்டியினுடன் உள்ள புரிந்துணர்வு இல்லாமை காரணமாகவும் 1820 ஆம் ஆண்டு ரேனியஸ் பாளையங்கோட்டைக்கு மாறுதல் செய்யப்பட்டார். அவரின் முதல் மிசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில். ரேனியஸ் தனது உபதேசியார்களிடையே பல ஒழுக்க நெறிகளை பயிற்றுவித்தார்.என்றாலும் தஞ்சாவூர் போல மிசனில் அவர்களால் தனியே செயல்பட முடியவில்லை. 1830 களில் ரேனியஸ் பிளைமூத் ப்பிரதரேன் என்னும் தலைவர்களின் கருத்தியல் தாக்கம் காரணமாக ஆங்கிலிக்கன் சபை முறைமைகளை பலமாக தாக்கினார். இதனால் CMS அவரை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் சபைகளுக்கு இடையே பிளவுகள் உண்டானது. அவர் இறந்த பின்பு தான் அந்த பிளவு முடிவிற்கு வந்தது.
இரு மாறுபட்ட கோணங்களை நாம் இப்பொது பார்த்துள்ளோம். பிளைமூத் ப்பிரதரேன் இதை பற்றி நான் தனியாக எழுதுகிறேன். அனால் இதற்கும் லுத்தரன் சபைக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
18 ஆண்டுகளில் 371 சபைகளையும் 107 பள்ளிகளையும் நிறுவிய ரேனியஸின் சிந்தனையை தொடர்ச்சியாக அடுத்த பதிவில் சொல்கிறேன்.
மே 30 1835 ல் ரேனியஸ் தனக்கு மேல் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உள்ள ஒரு பகுதி (இது தமிழ் பதிப்பில் கிடையாது)
ரேனியஸ் ஐயரின் குரல்களில்
“ CMS என்பது ஒரு உறுதியான பிணைப்பை தனக்கென திருநெல்வேலியில் ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் ஏற்கிறேன். சொத்துக்கள் அவர்களுடையது தான் என்பதையும் நான் ஏற்கிறேன். ஆனால் மக்களை பொறுத்தவரை உங்கள் மீது உள்ளது போல என் மீதும் அவர்களுக்கு உறுதியான அன்பும், பற்றும் உள்ளது. ஏன் என்றால் எனக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள ஒரு உறவை எவராலும் அவ்வளவு எளியதாக உடைக்க முடியாது.”
அடுத்த பதிவில் ரேனியஸ் ஐயரின் கோணம்

Sujithrex (@iamsujithrex)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory