புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திரு.D.ஜான்ஜேக்கப் உபதேசியார்

*இனியபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*
*திரு.D.ஜான்ஜேக்கப் உபதேசியார்*
இன்று என்னுடைய தகப்பனார் தமது 80 வயதை நிறைவுசெய்து 81 வது வயதைக் காண்கிறார்கள் அவர்களை அன்போடு வாழ்த்துகிறேன்.
கல்லிடைக்குறிச்சி மேல்முகம் நாடார் தெருவைச் சேர்ந்த அவர்கள்
19.07.1939 அன்று திரு.S.A.J.தேவாசீர்வாதம் உபதேசியார் - ஞானதீபம் அம்மாள் எனும் பக்திமிக்க பெற்றோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்கள் அக்காலத்தில் எனது தாத்தா ஆலங்குளம் பெரியசபையில் உபதேசியாராகவும் ஆலங்குளம் TDTA பள்ளியின் தலைமைஆசிரியராகவும் பணிசெய்து வந்தார்கள். அப்பாவின் பள்ளிபருவங்களில் தாத்தா சுவிசேஷபுரம் சர்க்கிளுக்குட்பட்ட சுவிசேஷபுரம், இட்டமொழி, திசையன்விளை சமாரியா, இடைச்சிவிளை நல்லம்மாள்புரம், மடத்தச்சம்பாடு இடையன்குடி ஆகிய பெரியசபைகளில் தலைமைஉபதேசியாராகவும் அங்குள்ள பள்ளிகளில் தலைமைஆசிரியராகவும் பணி செய்ததால் அப்பா தம் பள்ளிபடிப்பையும் ஆசிரியர் பயிற்சிபடிப்பையும் இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு பள்ளியில் நிறைவுசெய்தார்கள்.
1960 - 1962 ல் தாத்தா மாவடிநெருஞ்சிவிளையில் முழுநேரஉபதேசியாராகப் பணிசெய்தார்கள்.
மாவடி சபை கமிற்றி மெம்பர் திரு. துரைப்பாண்டியன் ஆசிரியர் அவர்கள் மலையடிப்புதூரில் நடத்திவந்த நடுநிலைப்பள்ளியில் 3 மாதம் அப்பா தற்காலிகஆசிரியராகப் பணிசெய்தார்கள். நிரந்திரஆசிரியர் பணிக்காக தென்ஆற்காடு மாவட்டம் சென்று 1960 - 1967 வரை அங்கு தலைமைஆசிரியராகப் பணிசெய்தார்கள். அந்நேரம் 14.09.1964 ல் நாசரேத் கருப்பன்முக்கந்தர் வம்சம் கொற்கைப்பாண்டியர் வழிமரபைத் தந்தைவழியிலும் நல்லூர் சாமுவேல்வம்சம் & விசுவாசம்உபதேசியார் வழிமரபைத் தாய்வழியிலும் கொண்ட எனது தாயார் பத்மினி எவாஞ்சலின் கிருபைபாய் Tr ஐத் திருமணம் செய்தார்கள். வயதான பெற்றோர் மற்றும் திருமண்டலப்பணி காரியமாக கல்லிடைக்குறிச்சிக்கு வந்த அப்பா மூன்றுஆண்டுகள் விடுப்புபதிலி ஆசிரியராக அம்பாசமுத்திரம் சர்க்கிளில் பணிசெய்து 11.06.1970 ல் சடையாண்டியூர் TDTA தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக நியமனம் பெற்றார்கள் பின்பு அப்பள்ளியிலேயே தலைமைஆசிரியராக உயர்ந்தார்கள். 1972 முதல் 1980 வரை சடையாண்டியூர் மற்றும் வடக்குபாப்பான்குளம் ஆகிய இருசபைகளிலும் சபைஊழியராகச் சீரியபணியாற்றினார்கள் அவ்விரு சபைகளிலும் நேரந்தவறாமையைக் கடைப்பிடித்து தொடர்ஜெபக்கூட்டங்கள் கன்வென்ஷன் கூட்டம் நடத்தி இருசபைகளையும் சிறப்பாக வழிநடத்தினார்கள்.
வடக்குபாப்பான்குளம் அநேகக் கிராமங்களை உள்ளடக்கிய சபை
பிற்காலத்தில் அதிலிருந்து A.P.நாடானூர் சபை உருவாக அது காரணமாயிற்று. அப்பாவின் பணிக்காலத்தில் வடக்கு பாப்பாங்குளத்தில் முன்மண்டபமும் சடையாண்டியூரில் ஆல்டரும் கட்டப்பட்டது. (பிற்காலத்தில் அப்பாவின் மூத்தமகனாகிய எனது அண்ணன் J.ஜேக்சன் சாலமோன் 2001 - 2013 வரை 12 ஆண்டுகள் சடையாண்டியூர் சபைஊழியராக பணிசெய்தார்கள்)
1980 - 81 ல் ராயகிரி வாசுதேவநல்லூர் சபைகளில் அப்பா சபைஊழியராகவும் பள்ளிதலைமை ஆசிரியராகவும் பணிசெய்தார்கள்
1981 - 83 ல் புலவனூர் சேகரத்தில் பணிசெய்தார்கள். சடையாண்டியூர் ஊர்மக்களின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு அங்கு 1983 ல் அப்பா தலைமைஆசிரியராகப் பொறுப்பேற்று மூடப்படும் நிலையிலிருந்த அவ்வூர் TDTA பள்ளியைப் பாதுகாத்தார்கள்.
1985 - 1987 வரை அப்பா தெற்குபாப்பான்குளம் சபைஊழியராகப்பணி செய்தார்கள்.
1987 முதல் 2003 வரை மணிமுத்தாறில் சபைஊழியராகப் பணிசெய்தார்கள். அக்காலத்தில் அங்கு முன்மண்டபம், கோபுரம் கட்டப்பட்டது வெண்கலநாக்குமணி பொருத்தப்பட்டது. ஒலிபெருக்கி அமைப்பு கல்லிடைக்குறிச்சி திரு.T.ஜெயராஜ் அண்ணன் உதவியால் அமைக்கப்பட்டது. 1987 ல் பிரமதேசம் TDTA பள்ளிக்கு சிக்கல் ஏற்பட்டது அப்பள்ளி வளர்ச்சிக்காகவும் அங்குள்ள ஆசிரியர் பணியிடங்கள் பாதுகாக்கப்படவும் அப்பா அங்கு தலைமைஆசிரியராக நியமிக்கப்பட்டார்கள் 1987 - 1989 வரை அங்கு பணி செய்தார்கள்.
1989 ல் தெற்கு பாப்பான்குளம் TDTA பள்ளிக்கு பெருஞ்சிக்கல் ஏற்பட்டது அங்கு அரசு சார்பில் ஊராட்சி ஒன்றியப்பள்ளியைத் தொடங்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன அந்நேரம் அப்பள்ளி நலன் கருதி அங்கு அப்பா தலைமைஆசிரியராக நியமிக்கப்பட்டார்கள் அங்குள்ள பெரியோர்களிடம் பேசி பள்ளிஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் பள்ளி நிலைமையைச் சரிசெய்து 1998 வரை 9 ஆண்டுகள் அங்கு சிறப்புறப் பணிசெய்து பணிநிறைவைப் பெற்றார்கள்.
சபைஊழியர் பணியிலும் தலைமை ஆசிரியர் பணியிலும்
கடினஉழைப்பு
நேரந்தவறாமை
உண்மை
நேர்மை
பொறுப்புணர்வு
கண்டிப்பு
ஆகியவற்றை சிறப்பாகக் கடைப்பிடித்தவர்கள் அப்பா செல்லும் இடங்களில் அவர்களைப் பார்த்து நேரத்தை பொதுமக்கள் சொல்லும் அளவு நேரந்தவறாமையைக் கடைப்பிடித்தவர்கள்.
இன்றளவும் அப்பா அதிகாலையில் 4.00 மணியளவில் எழுந்து அரைமணிநேரம் வேதம்வாசிப்பு, அரைமணிநேர தனிஜெபம் என்ற சிறப்பான ஒழுங்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
சபைகளில் உச்சதொனியில் சத்தமாக கொட்டு அடித்தவாரே பாடல் பாடுபவர்கள்.
"ஓய்வுநாள் இது மனமே தேவனின்"
"ஆசையாகினேன் கோவே"
"தீயன் ஆயினேன் ஐயா"
"பக்தருடன் பாடுவேன்"
ஆகிய உச்சதொனியில் பாடப்படும் பாடல்களை அப்பா விரும்பி பாடுபவர்கள். அப்பா
சுவிசேஷஊழியம்
சுவிசேஷபவனிகளில் உற்சாகமாய் பங்கெடுத்து நற்செய்தி அறிவிப்பவர்கள்.
மேற்கு கவுன்சில் சேர்மனாகப் பணிசெய்த Rev.Dr.D.ஜான்டேவிட் ஐயரவர்கள் அப்பாவின் மூத்தஅண்ணன்.
கல்லிடைக்குறிச்சி IMS ஜெபக்குழு பொறுப்பாளர் மற்றும் பாடகர் குழு பொறுப்பாளராகவுள்ள திரு.D.ஜான்தேவராஜ் அப்பாவுக்குத் தம்பி.
அப்பாவிற்கு
எனது அண்ணன் J.ஜேக்சன் சாலமோன் உபதேசியார் , நான், எனது தங்கை ஜெயாமேரி ஜெயதாஸ்,
எனது தம்பி J.A.D.ஜெய்சிங் (ஆர்கனிஸ்ட்) ஆகிய நான்கு பிள்ளைகள் நாங்கள் அனைவரும் ஊழியத்தொடர்போடு இருப்பதற்காக ஆண்டவருக்கு மிகுந்த நன்றியைச் செலுத்துகிறேன்.
இன்று 81 ஆவது வயதைக் காணும் அப்பாவுக்காக அனைவரும் ஜெபித்துக்கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.
ஜா.ஜான் ஞானராஜ்
கல்லிடைக்குறிச்சி

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory