யெகோவா ஷம்மா சபையை உருவாக்கிய பஞ்சாபின் சீக்கியரான பக்த்சிங்*
ஆசியாவிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆவிக்குரியத் தகப்பனாகவும் , விசுவாசிகளின் மாதிரியாகவும் விளங்கியவர் பகத்சிங் .
பஞ்சாபின் சீக்கிய குடும்பத்தில் பிறந்த இவர் , இங்கிலாந்து சென்று பொறியாளர் படிப்பை முடித்தார்.
1929ஆம் ஆண்டு உலகப்பிரகாரமான வாழ்வில் உன்னத நிலையை அடைந்தார் .
கிறிஸ்து உள்ளத்தில் வர புது சிருஷ்டியானார் .
சீக்கிய மதப் பெற்றோர் அவரை பம்பாயில் விட்டு விட்டுத் தங்கள் நாட்டிற்குப் போய்ச் சேர்ந்தனர் .
தன் ஜீவனையும் , தனக்கு அன்பானவர்களையும் விட மேலாக கர்த்தரையே நேசித்ததால் , கர்த்தருடைய வார்த்தையே அவருக்கு ஆறுதலாகவும் தேறுதலாகவும் மாறினது . பம்பாயில் தன் ஊழியத்தை ஆரம்பித்த பக்த்சிங் , பின்னர் பஞ்சாபிலும் , கராச்சியிலும் ஊழியத்தைத் தொடர்ந்தார் .
குறுகிய காலத்திற்குள் தேவன் அவரை உயர்த்தினார் .
ஒரு மாதத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட இடத்திலிருந்து சுவிசேஷப் பணிக்கு அழைப்பு வந்தது . அவரின் ஊழியத்தின் பயனாக ஆயிரக்கணக்கானோர் கிறஸ்துவைக் கண்டுகொண்டனர் .
சென்னையில் கால்பதித்த அவர் யெகோவா ஷம்மா என்ற சபையை 1941ம் ஆண்டு ஆரம்பித்தார் .
இச்சபை விரைவாக வளர ஆரம்பித்தது . இந்தியாவின் பல பாகங்களிலும் , பாகிஸ்தான் , இலங்கை , ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளிலும் ஆயிரக்கணக்கான சபைகள் உருவாகின .
ஆண்டவர் சகோதரரை அற்புதமாகப் பயன்படுத்தினார் .
வேதவாசிப்பும் , ஜெபமும் , ஆழ்ந்த விசுவாசமும் இவரது வெற்றிக்குக் காரணங்களாயின .
விசுவாசிகளுக்கு மத்தியில் ஐக்கியத்தை நிலைப்படுத்த அன்பின் விருந்தை ஆரம்பித்த இவர் ஓர் அன்பின் ஊழியராகவே வாழ்ந்து தன் ஓட்டத்தை முடித்தார் .
------------------------------------------------------------
No comments:
Post a Comment