புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

உங்கள் ஆலயத்தில் வாசித்த ஜெபத்தை மறுபடியும் மறுபடியும் வாசிக்கிறார்களா ?

உங்கள் ஆலயத்தில் வாசித்த ஜெபத்தை மறுபடியும் மறுபடியும் வாசிக்கிறார்களா ?
திருநெல்வேலி திருமண்டலத்தில் ஆலயங்கள் என்றாலே பல தொன்மை மிகுந்த கட்டிடங்களும், அதில் எவரும் அறியாத பல அடையாளங்களை கொண்டிருப்பதுமாய் இருப்பதும், தினமும் எழுதி வைத்து இருக்கிற சில ஜெபங்களை வாசிப்பதும் மட்டுமே நினைக்கிறோமா? அவ்வாறு நினைத்தால் நீங்கள் இன்னும் நம் ஆலயங்களின் மகிமையையும், அந்த ஜெபங்களின் ஆழமான அர்த்தங்களையும் அதன் வரலாற்று பின்னணியையும் அறியவில்லை என்றே அர்த்தம். அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறிர்களா ? ஆம் ஒவ்வொரு ஆலயத்தின் ஒவ்வொரு கற்களும் வேதாகமத்தை சார்ந்த விசயங்களையே எதிரோளிக்கிறது. நீங்கள் கேட்கலாம், புறம்பான இந்த உலகத்தில் உள்ளது நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு எந்த அளவு பிரயோஜனப்படும் என்று..... உங்களுக்கு ஒன்றரை சொல்லுகிறேன். இப்போது இருக்கும் எந்த சபை ஆலயங்கள் என்றாலும் அவர்களுகென்று ஒரு சித்தாந்தங்கள் உண்டு. ஒரு நெறிமுறை உண்டு. அவர்களும் அவர்களின் சித்தாந்தங்களை மக்களின் முன்னணியில் சொல்லுவார்கள். பலர் பிரிந்து செல்வோரும் உண்டு. ஆனால் அவர்களுக்கு புரியவில்லை அதை விட சிறந்த பல விசயங்கள் இங்கு கொட்டி கிடைக்கிறது என்று.. அவை அனைத்தையும் நாம் புரியாமல் உலக பிரமாணம் என்று ஒதுக்கி கொண்டிருக்கிறோம்.
இனி வரபோகிற பதிவுகளில் இதை பற்றி விரிவாக காண்போம் தற்போது சுருக்கமாக
சுருக்க ஜெபங்கள் : நாம் வாசிக்கிற சுருக்க ஜெபங்கள் வெறும் ஜெபங்கள் மட்டும் அல்ல. உதாரணமாக நம் கிறிஸ்தவம் பல நுற்றண்டுகலாக பலரை கடந்து வந்து கொண்டிருக்கிறது.ஒவ்வொரு முறையும் கிறிஸ்தவத்தை பிற மதத்தினரோ அல்லது புரியாத கேள்விகளும் தாக்க வரும் போது கிறிஸ்தவ விசுவாச கேடயமாக விளங்குவது பிரமாணங்கள். அதன் அடிப்படையில் விளைந்தவை தான் இந்த ஜெபங்கள். ஜெபங்களை நீங்கள் தியானித்தால் கூட அது வேதத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்திருப்பதே இதன் சிறப்பு. முழுவதுமாக வேதத்தை சார்ந்து இருபது என்ன ஒரு ஆச்சரியம். ( ஒவ்வொரு ஜெபங்களின் வரலாறு மற்றும் அதன் அர்த்தங்களை பின் வரும் பதிவுகளில் விளக்குகிறேன்)
ஆலய அமைப்புகள் : முன்பு நான் சொல்லியபடி ஆலயத்தின் ஒவ்வொரு விசயமும் ஒவ்வொரு வேத வசனத்தையும், அதன் அர்த்தங்களையும் தன்னுளே மறைத்து வைத்துள்ளது. நாம் அதை அறிய முற்படவில்லை என்பதே உண்மை. நம் அல்டர் பகுதியில் உள்ள மேசையில் இருந்து நாம் கையில் வைத்திருக்கும் பாடல் புத்தகம் வரை ஒழுங்கும் நேர்த்தியுமாய் செய்யப்பட்டிருப்பது அதற்கு அழகூட்டுகிறது. பல வேதாகம விசயங்களையும் பல வரலாற்று உண்மைகளையும் தாங்கி நிற்கும் நம் ஆலயம் பற்றி நாம் விரிவாக அறிந்து கொள்ளவேண்டும்.
அடுத்த பதிவில் இருந்து ஒன்று ஒன்றாக விளக்கமாக காண்போம்.
Sujith rex(@iamsujithrex)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory