புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஆலயத்தில் இருக்கும் இந்த வண்ணங்களை சிந்தித்து இருக்கிறிர்களா ?

சபைக்கு செல்லும் நீங்கள் ஆலயத்தில் இருக்கும் இந்த வண்ணங்களை சிந்தித்து இருக்கிறிர்களா ?
ஆலயத்தில் அல்டெர் பகுதியில் இருக்கும் துணியில் இருக்கும் துணியில் இருந்து குருவானவர்கள் கழுத்தில் அணியும் ஸ்சால் வரையிலும் பல வண்ணம் கொண்டதாய் காணப்படும். இவைகள் உணர்த்துவது என்ன?
குருவானவர்கள் அணியும் இந்த ஸ்சால் இவர்கள் ஆண்டவருக்கு கீழ்படிந்தவர்கள் என்பதை உணர்த்தும் வண்ணம் உள்ளது. ஆராதனை வேளைகளில் மட்டுமே இதை அவர்கள் பயன்படுத்துவர். இந்த துணியின் நிறமும் அல்டெர் மற்றும் பிரசங்க பீடம் போன்றவற்றில் சுற்றப்பட்டிருக்கும் துணியின் நிறமும் ஒன்றாக இருக்கும் . இவை வெள்ளை,ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள். கருநீலம்,கருப்பு போன்ற வண்ணங்களில் அமைந்திருக்கும்.
ஊதா நிறம்: இது அட்வேந்து நாட்களில் உபயோகிக்கபடுகிறது. இது ராஜாக்களுக்கு உரிய வண்ணமாக கருதப்படுகிறது
வெள்ளை நிறம் : இது கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ஈஸ்டர், ஞானஸ்நானம், திடப்படுத்துதல் போன்ற சமயங்களில் பயன்படுத்த படுகிறது. இது மாஸ்டர் சால்வை என்று அழைக்கபடுகிறது. இது ஒளி, மகிழ்ச்சி, எக்கால சத்ததை உணர்த்தும் விதமாக உள்ளது.
மஞ்சள் நிறம் ; இது திருமண நாளில் பயன்படுத்தபடுகிறது. இது மங்களகரத்தை குறிக்கும் வண்ணமாக உள்ளது
கருநீலம் : இது லேந்து காலங்களில் உபயோகிக்கபடுகிறது. இந்த நிறம் உபவாசத்தை குறிக்கிறது. இது மனந்திரும்புதலை வலியுறுத்துகிறது.
சிவப்பு : விசேச நாட்கள், அறுப்பின் பண்டிகை மற்றும் பரிசுத்த ஆவியின் திருநாட்களில் இந்த நிறம் பயன்படுகிறது. இது ரத்தத்தையும், நெருப்பையும் நினைவு படுத்தும்ப வண்ணம் உள்ளது.
கருப்பு நிறம்: துக்க நாட்கள், பெரியவெள்ளி, அடக்க ஆராதனைகளில் இந்த நிறம் பயன்படுத்தபடுகிறது.சோகத்தை வெளிபடுத்தும் வண்ணமாக உள்ளது
பச்சை நிறம் : திருத்துவ நாள் முதற்கொண்டு அட்வேந்து நாட்கள் வரை இந்த நிறம் பயன்படுத்தபடுகிறது. இது வசந்த காலமாக இருப்பதால் இந்த நிறம் பயன்படுத்தபடுகிறது. மேலும் விசுவாசத்தையும், விசுவாசிகளின் நம்பிக்கைகையை உயர்த்தும் என்ற அர்த்தத்தையும் கொண்டுள்ளது.
காவி நிறம் : CSI ல் ஃ பேராயர்களுக்கு மட்டும் இந்த நிறம்.
அடையாளங்களோடு தேவனின் ஆலயத்தின் ஆராதனை முறைமையின் அர்த்தங்களை அறிவோம். தேவ பிரசனத்தை உணருவோம்.
Sujith Rex (@iamsujithrex)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory