புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

அடையாளங்களின் அர்த்தங்கள்

நீங்கள் உங்கள் சபைகளுக்கு செல்லும்போது இந்த அடையாளங்களின் அர்த்தங்கள் என்னவாக இருக்கும் என்று யோசித்து உள்ளிர்களா?
நாம் வாரந்தோறும், சிலர் தினமும் சபைக்கு சென்று தேவனை ஆராதித்து வருகிறோம். குருவானவர், போட்டிருக்கும் சால்வையிலும் சரி, பிரசங்க பீடம், மற்றும் ஆல்டர் மேசையிலும் சரி நாம் பல படங்களை பார்த்திருப்போம் அந்த படங்கள் எதை உணர்த்துகிறது?
இந்த கேள்விகள் உங்களுக்கு உண்டாகுமாயின் அதை விளக்குமாறு இந்த பதிவு இருக்கும்.
ஒவ்வொரு காலத்திகும் ஒவ்வொரு வகையான வண்ணங்கள் உபயோகப்படுத்துவார்கள். அந்த வண்ணத்தோடு கூடசேர்ந்து அதில் இருக்கும் படங்களும் காலத்திக்கு காலம் மாறுபடும். சரி இதெல்லாம் எதற்கு ?
நீங்கள் நன்றாக கவனித்திர்கள் என்றால் இந்த மாற்றத்தோடு ஒன்றி தான் சபையின் கிறிஸ்தவ காலேண்டர் செயல்படும். இதனை அடிப்படையாக கொண்டுதான் சபையின் பாடல்கள், வேத வாசிப்புகள் காணப்படும். இந்த வன்ணங்கள் மாற்றும் அடையாளங்களை அறிந்து கொண்டால் சபையின் உங்களை சுற்றி இருக்கும் சுவர் கூட தேவனை நினைவுபடுத்தி கொண்டிருக்கும்.
சபையின் ஒரு துணி கூட தேவ நாமத்தை வெளிபடுத்தும்.
நாம் அடையாளமாக கொண்டுள்ள சில அடையாளங்கள் அப்போஸ்தலர் காலத்தில் இருந்து இப்போது வரை உள்ளவை என்பது வியப்பிற்குரிய உண்மை.
அடையாளங்களும் அவைகளின் அர்த்தங்களும்
அல்பா மற்றும் ஒமேகா. இது இயேசுவின் நித்திய தன்மையை வெளிப்படுத்துகிறது.
(ANCHOR) நங்கூரம் படம். இது நம்முடைய விசுவாசத்தை குறிக்கிறது.
அப்பமும் திராச்சை இரசமும். இது நம்முடைய கிறிஸ்து நமக்காக மரித்தார் என்பதை நினைவூடுக்ரிறது.
கை அண்ட் ரோ (X மற்றும் P ) அல்லது IHS. இது கிரேக்கத்தில் இயேசு கிறிஸ்துவின் பெயராகும்
சிலுவை- கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் மற்றும் நமக்காக மரித்தார் என்பதை நினைவூட்டுகிறது.
புறா – இயேசு கிரிஸ்து ஞானஸ்நானம் எடுக்கும் பொது இறங்கிய பரிசுத்த ஆவியானவரின் குணாதிசயங்களை குறிக்கிறது
தீ – பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய பரிசுத்த ஆவியானவரின் குணாதிசயங்களை குறிக்கிறது.
மீன் – இதில் சில சமயம் சில கிரேக்க எழுத்துகளும் பொறிக்கப்ட்டிருகும் அதற்கு அர்த்தம் “இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன், மீட்பரானவர்”. தனியே மீன் இருந்தால் தேவன் இரண்டு மீன்களை வைத்து 5௦௦௦ பேரை போசித்ததை நினைவுபடுத்துகிறது. மேலும் தேவன் அவரை ஏற்று கொண்டவர்கள் அனைவரையும் மனுஷர்களை பிடிக்கிறவர்களாக்குவேன் என்று கொடுத்த வாக்குத்தத்ததை நினைவு கூறுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
விளக்கு – கிறிஸ்து நமக்காக தன்னை தானே சிலுவையில் பலியாக கொடுத்தார் என்பதை விளக்குகிறது.
மேய்ப்பனின் கோல் – தேவன் தமது ஜனத்தை பார்த்து கொள்வார் என்று உணர்த்துகிறது
கப்பல் – இது நம் சபையை குறிக்கிறது ( நோவாவின் காலத்தில் தேவன் நீரினால் ஞானஸ்நானம் கொடுத்து கப்பலில் பாதுகாக்கபட்டனர் என்ற அடிப்படை சித்தாந்தத்தை வெளிபடுத்துகிறது (இதனை விரிவாக பிறகு விளக்குகிறேன் )).
திராச்சை, கோதுமை – கிறிஸ்துவுக்கு உள்ளாக நாம் கொண்டிருக்கும் ஒருமனத்தை விளக்குகிறது .
இனி உங்களின் சபைக்கு சென்றால் அதில் குறிக்கபட்டிருக்கும் அடையாளங்ளின் அர்த்தங்களின் அடையாங்களை அறிந்து அத்துடன் நமது வேத பகுதி பிரசங்கம் அனைத்தையும் ஒன்றுபடுத்தி பாருங்கள். தேவ பிரசன்னம் உங்களோடு இருப்பதாக
Sujith Rex (@iamsujithrex)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory