புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பாரம்பரியமான ஆராதனை முறைமை தவறா ?

பாரம்பரியமான ஆராதனை முறைமை தவறா ?
நாங்கள் பாரம்பரியத்தை பற்றி எழும்போதும் பேசும்போதும் மக்கள் பலர் பாரம்பரியம் என்பது தவறானது, ஏன் இதை பின்பற்ற வேண்டும், என்று கேட்கிறார்கள், ஆம் சரியான கேள்விதான், எதற்க்காக பல நூற்றாண்டுகளாக கையில் வைத்திருக்கும் இந்த ஆராதனை முறைமைகளை நாம் பின்பற்ற வேண்டும் ? இந்த கேள்விகளை உங்கள் மனது கேட்குமாயின் அதற்கான விளக்கம்.
நாம் எந்த பிரிவினரையும் குற்றப்படுத்தியோ நியாயபடுத்தியோ பேசத்தேவை இல்லை. நாம் நம்முடைய காரணங்களை சொல்லினாலே போதும் என்று நினைக்கிறன். இப்போதும் நாம் இந்த முறைமைகளை பின்பற்றுவதற்கான ஐந்து காரணங்களை முன் வைக்கிறேன்.
முதல் காரணம்
நம்முடைய ஆராதனை முறைமைகளில் இருக்கும் நூற்றுக்கு என்பது சதவிகிதம் வேதத்தில் இருக்கும் வேத வசனங்கள் மட்டுமே. எந்த ஒரு மறு விளக்கமும் கொடுக்காமல் அதை அவ்வாறே சொலுவது நம் முறைமையின் சிறப்புகள். காலை, மாலை ஆராதனை, திருவிருந்து, ஞானஸ்நானம் எந்த ஆராதனை முறைமை ஆகினும் நாம் வாசிப்பது, பாடலாக படிப்பது என்று அத்தனையும் அப்படியே வேத வசனங்களை கொண்டே இருக்கும். மற்ற எந்த தற்கால ஆராதனை முறைமைகளிலும் இத்தகைய வேத வசனம் கொண்ட ஆராதனை முறைமையை நம்மால் காண்பது கடினம்.
இரண்டாம் காரணம்
இது பெரும்பாலான ஏபிஸ்டோஸ்கோபி சபைகள் முன்னெடுக்கும் ஒரு காரணம். நாம் இன்று செய்யும் ஆராதனை வழி முறைமைகள் ஆதிகாலத்தில் இருந்தே கிறிஸ்தவர்களால் பின்பற்றப்பட்டது. ஆம் கலாச்சாரத்திக்கு ஏற்ப சில மாறுபாடுகள் இருந்தாலும் பெரும் பங்கை நாம் வழி வழியாக பின்பற்றி கொண்டு வருகிறோம். இந்த வழிமுறைகள் நமக்கு நம்முடைய கலச்சாரத்திகும் அதிகமான வேதத்தின் கலாச்சாரத்துடன் இணைக்கிறது. ( பரிசுத்த தேவனே நித்தியமானவா என்னும் நற்கருணை பாடலின் வேர் இரண்டாம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிக்கிறது). மேலும் பழங்காலத்தில் ஆதி கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை கடத்துகிறது ( ரோமன் கத்தோலிக்க புரட்சி அக்காலத்தில் இருந்த சில மூட நம்பிக்கைகளை எதிர்த்தது தவிர ஒட்டுமொத்த வரலாற்றை அல்ல, நம்முடைய பல சித்தாந்தங்கள் வழி வழியாய் போதிக்கபட்டு வந்தவை)
மூன்றாம் காரணம்
இது ஒரு முக்கியமான காரணம். உணர்ச்சிகளுக்கு உட்பட்டு தேவனை ஆராதிப்பதை தவிர்த்து உண்மையான சத்தியத்தை அறிந்து உணர்வு பூர்வமாக தேவனை அறிய வழிவகுக்கும். இங்கு உணர்ச்சிகள் என்பது ஒரு தற்காலிக உணர்சிகள் அதாவது தற்காலத்தில் ஆராதனை கூடங்கள் என்று தனியே நடத்தப்படுவதை கேள்விப்பட்டு இருப்பிர்கள் அதில் வெளிப்படும் ஒரு தற்காலிக உணர்ச்சியை குறிக்கிறேன். வேதத்தை வாசிக்கும் பொது தேவனால் வெளிபடுத்தப்படும் சத்தியங்களை குறிக்காது. நாம் ஒரு விசயத்தை கணக்கில் கண்டிப்பாக கொள்ள வேண்டும் அது தான் Contextual. தற்கால வாலிபர்கள் இந்த முறைமை ஈர்க்காது என்ற ஒரு கருத்து. ஆம் ஈர்க்காது. ஏன் என்றால் முழுக்க முழுக்க வேத வசனங்களை கொண்டுள்ள முறைமைகள் ஒருபோதும் வேத வாசிப்பை கடமையாக்கி கொள்ளத மனிதர்களுக்கு ஈர்ப்பு அளிக்காது. கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பார்க்கவேண்டும். எப்படி ? வேதத்தின் முலமே .. ( நான் நற்செய்தி பணியை சொல்ல வில்லை என்பதை கணக்கில் கொள்ள வேண்டும், நான் சபையாக ஒருமனபடுவதற்கான வழியை சொல்கிறேன்)
காரணம் நான்கு
தேவனை என்ன செய்து வேண்டுமென்றாலும் ஆராதிக்கலாம் என்று சொல்லும் உபதேசங்கள் வெளிபடுத்துதல் சொல்லும் பரலோக ஆராதனை காட்சிகளை நினைவில் கொள்ள வேண்டும். Theological ஆக சொல்லவேண்டும் என்றால் ஆதி திருச்சபையினர் வெளிப்டுத்துதலில் உள்ள அந்த முறைமைகளை எடுத்து கொண்டார்கள் என்றே சொல்லவேண்டும். அரியாசனம், பாடல் பாடுதல், அங்கிகள் உடுத்துதல், வெளிபடுத்துதலில் உள்ள பாடல்கள் என அனைத்தும் Reflect ஆகும். அனைத்தும் வேதத்தின்படியும் ஆனால் முக்கியமானது உபயோகிபவரின் கலாச்ச்ரதிலும் இருக்க வேண்டும் என்பதே இதன் சிறப்பு.
குறிப்பு : பல நூற்றாண்டுகளாக பல கிறிஸ்தவ சமுதாயங்களை தாண்டி வந்திருக்கும் இந்த முறைமைகள் பல விதங்களில் சித்தாந்த ரீதியாகவும் அடிப்படை உறுதி கொண்டது, ( நாம் உணர்ந்து கொண்டால்)
ஐந்தாம் காரணம்
ஆதிகிரிஸ்தவத்தில் இருந்து இப்போது வரை ஒருமனமாக ஒரே ஆராதனை முறைமை கொண்டுள்ளது இதன் சிறப்பு. தற்போதைய பல சபைகள் பிரிவதற்கு காரணங்களில் முக்கியமான ஒரு விசயம் ஆராதனை முறைமை ஆனால் மெயின் லைன் சபைகள் இதில் ஒன்றிணைகிறது. ஒரே கிறிஸ்துவின் மந்தை என ...
நாம் விசுவாசபிரமானம் என்று ஒன்றை வார வாரம் சொல்லுவோமே அதில் “பொதுவாக இருக்கிற பரிசுத்த சபையும், பரிசுத்தவான்களின் ஐக்கியமும்” என்று நாம் சொல்லும் வரிகள் கூட நாம் நம் பாரம்பரியமான நிலைபாட்டினை விசுவாசிக்கிறோம் என்ற கருத்தினை கொண்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
மத்தேயு 15
6: உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
And honour not his father or his mother, he shall be free. Thus have ye made the commandment of God of none effect by your tradition. (KJV)
குற்றப்படுத்த எல்லாரும் இந்த வசனத்தை சொல்லுவார்கள் அதை நன்கு வாசித்தால் தெரியும் அதை தேவன் தவறு என்று சொல்லவில்லை. அதை தவறாக உபயோகபடுத்துகிரிகள் என்று தான் சொல்லுவார்.(இந்த வசனம் இரண்டு நச்செய்தி சுவிசேஷங்களில் காணப்படுகிறது) தற்போது கூட இந்த விசயங்களை காணலாம். (இதை பற்றிய விரிவான விளக்கத்தை அடுத்த பதிவில் அளிக்கிறேன்)
Sujith Rex (@iamsujithrex)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory