புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருவழுதிநாடார்விளை பரிசுத்த இமானுவேல் ஆலயம்

திருவழுதிநாடார்விளை பரிசுத்த இமானுவேல் ஆலயம்
1841-ம் ஆண்டு ஏரலில் உள்ளவர்கள் துயரத்தினால் பாதிக்கப்பட்டபோது திருவழுதிநாடார்விளை சென்று அடைக்கலம் புகுந்தனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக திருவைகுண்டம் அருகிலுள்ள தோழப்பன் பண்ணை கிராமத்தில் ஒரு ஆசிரியர் திருவழுதிநாடார்விளை வந்து கல்வி கற்றுக் கொடுத்துள்ளார்.
அவரே இயேசுவை பற்றிக் கூறியுள்ளார். ஓலையால் வேயப்பட்ட அந்த பள்ளியே பின்னர் இறைவனை ஆராதிக்கும் ஆலயமாக மாறியது பகலில் பள்ளிகூடமாகவும் இரவில் ஆலயமாகவும் பயன்படுத்தினர்
1860-ம் ஆண்டுகளுக்கு பின் ஏரல் சபைக்கு தங்கி இருந்து பணிசெய்யும் சபை ஊழியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
அவர்கள் ஏரலில் தங்கி இருந்து ஏரல் சபையையும், திருவழுதிநாடார்விளை சபையையும் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. சபை மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. 1880-ம் ஆண்டுகளில் ஒரு மேலான வளர்ச்சி காணப்பட்டது.
எனவே , 1883-ம் ஆண்டில் சக்கம்மாள்புரம் (சமாதானபுரம்) ஊரைச் சேர்ந்த அருள் திரு N.சாமுவேல் வேதக்கண் என்பவர் ஏரலில் குருவாக நியமிக்கப்பட்டார். அவர்கள் திருவழுதிநாடார்விளை சென்று திருவிருந்து கொடுத்து சபையை வளப்படுத்தினார்கள். 1886 வரை பணிசெய்தார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதி பகுதியில் திருவழுதிநாடார்விளையில் கிறிஸ்தவம் சிறப்பாக வேரூன்றி இருந்தது.
பள்ளிக்கூடம் இருந்த இடத்தில் சிறிய ஆலயம் ஒன்று கட்டி, அதற்கு திரித்துவ ஆலயம் என்று பெயரிட்டு, மக்கள் வழிபட்டு வந்தனர். வருடங்கள் உருண்டோடின.
சபை மக்களின் வாழ்க்கைத் தரம் மாறத்தொடங்கியது. ஓலை வீடுகளில் வசித்தவர்கள் ஓடு வீடுகளுக்கு மாறினர். கல்வி தரம் உயர்ந்ததால் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரத்தொடங்கியது.
உண்மை இறைவனை அறிந்துகொண்ட மக்கள் வாழ்க்கையில் உயர்வுநிலையை அடைவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
1940-ம் ஆண்டுகளில் அன்றையத் திருச்சபை பெரியோர்கள் ஒன்றுகூடி தங்களுக்கு ஒரு காரை கோயில் கட்டவேண்டுமென்று ஆலோசனை செய்தனர்.
அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடவுளின் பெரிதான கிருபையால், 1943-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அன்றைய பேராயராக இருந்த மகாகனம் ஸ்டீபன் நீல் அவர்கள் பிரதிஷ்டை செய்தார்கள்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory