*இயேசுவின் சிறிய சகோதரர்கள் அமைப்பை தொடங்கிய சார்லஸ் தெ ஃபூக்கோ*
தனிமையான தியான வாழ்வில் எனது துறவை ஆரம்பித்த நான் என்னையும் அறியாமல் பிறர் பணியில் மூழ்கியிருக்கக் கண்டு வியப்படைந்தேன் .
தினமும் இரவு உணவு உண்ணும் சமயத்தில் விருந்தினர் வருகின்றனர் .
தங்க இடம் கேட்கின்றனர் . காலையுணவு நேரத்திலும் விருந்தினர் . இதற்கு முடிவேயில்லை . சில நாட்களில் இரவிலும் பத்துப் பதினொரு விருந்தினர் வந்து கூடி விடுகின்றனர் .
தினமும் அறுபது முதல் நூறு வரை என்னைப் பார்க்க வருகின்றனர் .
எனது இல்லத்திற்கு காலை 5 மணி முதல் 8 மணிவரை , மாலை 4 மணிமுதல் 8 மணிவரை மக்கள் வந்து செல்வதால் அது ஒரு தேன்கூடு போல் தோற்றமளிக்கிறது இது சார்லஸ் ஃபூக்கோவின் வார்த்தைகள் .
யார் இவர் ?
பிரான்ஸ் நாட்டில் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த ஃபூக்கோ , கிறிஸ்துவின் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்து துறவியானார் . புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்ட இவர் , இயேசுவவைப் போல் வாழ ஆசை கொண்டார் .
1901ம் ஆண்டு தன் மிஷனெரிப் பயணத்தை அல்ஜீரியாவை நோக்கி ஆரம்பித்தார் .
துவாரெக் மக்களின் நலனுக்காக கோவில் ஒன்றினை அமைத்து அதன் உச்சியில் ஒரு சிலுவையை நாட்டினார் .
இதுவே அந்நாட்டின் முதல் திருச்சபை . நாடோடியாக வாழ்ந்த துவாரெக் மக்களுக்கு அவர்கள் மொழியிலேயே நற்செய்தியைக் கூறி , மக்களின் வாழ்வை நிலைப்படுத்தினார் .
துறவு மடத்தையும் ஆரம்பித்தார் .
தியானங்களையும் எழுத ஆரம்பித்தார் . " ஏழைகளின் துணிகளையும் சலவை செய்துகொடு , அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை சுத்தம் செய் . கூடுமானவரை இவற்றையெல்லாம் நீயே செய் பொதுக் கழிவறைகளையும் நீயே கழுவு . பணி செய்யவே வந்தேன் என்ற இயேசுவைப் பின்பற்றி நீ ஒரு பணியாளனாகவே இரு . " என்று கூறிய சார்லஸ் தெஃபூக்கோ , தன் வாழ்நாளெல்லாம் பணியாளனாகவே வாழ்ந்து *இயேசுவின் சிறிய சகோதரர்கள்* என்ற அமைப்பை உலகிற்குத்தந்து உன்னதரிடம் சென்றார்.
No comments:
Post a Comment