காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவர்களை கிறிஸ்துவின் மந்தைகளாக மாற்றிய ஜான் ஹோல்ம்ஸ்
பாப்புவா நியூகினியா தீவு . அங்கு வாழும் மக்கள் முற்றிலும் வித்தியாசமானவர்கள் .
உயிருடன் மனிதர்களைக் கடித்து . ருசித்து சாப்பிடும் நர மாமிசப் பட்சிணிகள் . அழுக்கு நிறைந்த உடலுடன் துர்நாற்றம் உடையவர்களாக நடமாடும் நாகரிகமில்லா மக்கள் .
இவர்களின் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் , மண்டை ஓடுகளாலான அலங்காரம் காணப்படும் .
பல நூற்றாண்டுகளாகவே இம்மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை அறிவிப்பதற்கு ஆட்கள் யாரும் செல்லவில்லை .
அவ்விதம் சென்றவர்களில் சிலரும் தங்கள் நாடு திரும்பவில்லை .
இம்மக்களைப் பற்றி கேள்விப்பட்டார் ஜான் ஹோல்மஸ் .
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த நியூகினியா தீவு மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை எடுத்துரைக்கத் தீவிரம் கொண்டார் .
எனவே , எண்டன் மிஷனெரி ஸ்தாபனத்தில் இணைந்தார் .
ஜேம்ஸ் சால்மர்ஸ் என்ற மினாரியுடன் இணைந்து பணி செய்ய தன் ஆவலைத் தெரிவித்தார் .
தன்னுடைய விருப்பம் நிறைவேற்றப்படவே , அதிக மகிழ்ச்சியுடன் கையில் ஒரு பழைய பெட்டியுடன் , ஆஸ்திரேலியாவுக்கு கப்பலில் பயணமானார் .
வியாழன் என்ற தீவு கப்பல் வந்து நின்றது .
ஜேம்ஸ் சால்மர்ஸ் என்ற மிஷனெரி ஜான் ஹோல்ம்ஸை எதிர்நோக்கி நின்றார் .
அவரைத் தனது சிறிய கப்பலில் ஏற்றிக்கொண்டு பாப்புவா தீவிற்குச் சென்றார் .
அம்மக்களின் நிலையைக் கண்ட ஹோல்மஸ் ஒரு நொடி கதிகலங்கினார் .
உடலிலே துணிகள் இல்லாமல் , சகிக்கக் கூடாத துர்நாற்றம் மிக்கவர்களாக நின்று கொண்டிருந்தனர் மக்கள் .
முதலில் அவர்கள் மொழியைக் கற்றுக் கொண்ட இவர் , அவர்களுடன் நட்புடன் பழக ஆரம்பித்தார் .
மக்களின் மூட நம்பிக்கைகளினிமித்தம் ஏற்பட்ட சண்டைகளினால் , பல மனிதர்கள் கொல்லப்பட்டபோது , அவர்களிடம் சமரசத்தை ஏற்படுத்தி அமைதியை நிலைநாட்டினார் .
பள்ளிக்கூடங்களையும் , வீடுகளையும் கட்டினார் .
வேதாகமத்தை அவர்கள் மொழியிலேயே வாசிப்பதற்கு உதவினார் . இதனால் , பாப்புவா தீவின் மக்களின் வாழ்க்கைத் தரம்மாறியது .
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவர்கள் கிறிஸ்துவின் மனிதர்களாக மாறினர் .
No comments:
Post a Comment