புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இடையன்குளத்தை மையமாகக் கொண்ட CMS மிஷன் பணி - 2

இடையன்குளம் வழக்கு*
இடையன்குளம் சபையாரின் நிலங்கள் சுப்பிரமணியபிள்ளை ஓமநல்லூர் பத்தமடையாப்பிள்ளை ஆகியோரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் சபையாரின் வீடுகளுக்கு தீவைத்ததோடு விளைபொருள்களையும் கொள்ளையடித்துச் சென்றனர் இதனால் இடைய்ன்குளம் சபையார் அவ்விருவரையும் எதிர்த்து திருநெல்வேலியிலிருந்த மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றிபெற்றனர். அவ்விருவரும் அக்காலத்தில் திருச்சியிலிருந்த மாநிலநீதிமன்றத்திற்கு அப்பீல் செய்ததால் அப்பீல்வழக்கை எதிர்க.கொள்ள சபையாருக்கு பெரும் பொருட்செலவு ஏற்பட்டது அந்நேரம் வழக்கில் ஆண்டவர் வெற்றி தந்தால் தங்களது ஊர்நிலத்தில் 1/6 பாகத்தை தம் ஊர் CMS மிஷனுக்கு எழுதிக் கொடுப்போம் என பொருத்தனை செய்தனர். வழக்கில் வெற்றிகிடைத்தது. தாங்கள் செய்த பொருத்தனைப்படி 1/6 பங்கு நிலத்தை மிஷனுக்கு கொடுத்தனர்.
*வீரஉணர்வு* தோல்வியடைந்த இருவரால் மீண்டும் இடையன்குளத்தாரின் வீடுகள் தீ வைக்கப்பட்டு விளைபொருள் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்ட ரேனியஸ் ஐயரவர்கள் உதாரமும் வீரமும் மிக்க தலைமை உபதேசியார் தாவீதை இடையன்குளத்திற்கு அனுப்பினார் அவர் வந்து சேர்ந்தது முதல் இருவராலும் ஏற்பட்ட இடையூறுகள் நின்றது இடையன்குளத்தாரும் வீரஉணர்வைப் பெற்றார்கள் இன்றளவும் அவ்வீரம் இடையன்குளத்திலே தொடர்கிறது.
*வடலிவிளைக்கு நற்செய்தி*
மாவீரன் செம்புலிங்கத்தின் ஊரான வடலிவிளைக்கும் இடையன்குளத்திற்கும் அக்காலத்தில் அதிகஅளவில் திருமணஉறவுகள் இருந்தது. தங்களது உறவினரான இடையன்குளத்தார் கிறிஸ்தவரானதைக் கண்ட வடலிவிளையார் தங்களூருக்கும் கிறிஸ்தவத்தை அறிவிக்கும்படியும் இடையன்குளத்தில் தங்கி பணிசெய்த ஆழ்வாநேரியைச் சேர்ந்த தேவசகாயம் உபதேசியாரையே வடலிவிளைக்கும் நியமிக்க வேண்டினர் அதை ஏற்ற ரேனியஸ் அவரை இருஊர்களிலும் உபதேசியார் பணிசெய்ய அனுமதி அளித்தார்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory