புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இடையன்குளத்தை மையமாகக் கொண்ட CMS மிஷன் பணி - 4

இடையன்குளத்தை மையமாகக் கொண்ட CMS மிஷன் பணி - 4*
*CMS மிஷன் நிலம் வாங்கப்படுதல்*
தற்போதைய இடையன்குளத்தின் ஒருபகுதி மிஷன் நிலம். அந்நிலம் ரேனியஸ் ஐயரவர்களால் CMS தர்மசகாயச்சங்கம் சார்பாக 1833 ல் வாங்கப்பட்டது மிஷன் நிலத்திற்கு புதியபெயர் சூட்டப்படவில்லை.1833 வரை விரைவான வளர்ச்சியைக் கண்ட இடையன்குளத்தில் 1834 ல் அனல் குன்றிப்போனதாக ரேனியஸ் ஐயரவர்கள் குறிப்பிடுகிறார். *இடையன்குளம் மிஷன் பணித்தளமாகுதல்* ரேனியஸ் ஐயரவர்களது காலத்தில் பாளை CMS தலைமைமிஷனரியின் நேரடி கண்காணிப்பில் இருந்த இடையன்குளம் சபை அவரது காலத்திற்குப்பின் டோனாவூர் வட்டாரத்தோடு சேர்க்கப்பட்டு டோனாவூர் CMS மிஷனரி கண்காணிப்பின் கீழ் 1858 வரை இருந்தது. 1858 ல் டோனாவூர் வட்டாரத்தின் கீழ் துணைவட்டாரமாக மிஷன்பணித்தளமாக இடையன்குளம் மாறிற்று. *இடையன்குளத்திற்கு குருவானவர் நியமனம் செய்யப்படுதல்* துணைவட்டாரமாகவும் மிஷன்பணியிடமாகவும் உயர்ந்த இடையன்குளத்தில் தங்கி பணிசெய்ய Rev.M.தேவப்பிரசாதம் ஐயரவர்கள் நியமிக்கப்பட்டார்கள். *இடையன்குளம் வட்டார எல்கை* வடக்கே பத்தை மஞ்சுவிளை மேற்கே மேற்குதொடர்ச்சிமலை தெற்கே தாமிரபரணி ஆறும் அந்த ஆற்றின் தென்கரையில் இருந்த கல்லிடைக்குறிச்சிவரை வட்டார எல்கை இருந்தது இடையன்குளத்திலிருந்து குருமார் கல்லிடைக்குறிச்சி வரை வந்து திருவிருந்து ஞானஸ்நானம் கொடுத்துவந்தனர். 1878 ல் அம்பாசமுத்திரத்தில் தங்கி பணிசெய்ய குருவானவர் நியமிக்கப்பட்டவுடன் கல்லிடைக்குறிச்சி சபை நல்லூர் வட்டாரம் அம்பாசமுத்திரத்தோடு 1878 ல் இணைக்கப்பட்டதால் கோரையாற்றின் கீழ்கரையில் இருந்த மலைச்செங்குளம்சபை வட்டாரத் தென்மேற்கு எல்கை ஆயிற்று. தற்போதைய பத்து சேகரங்களுக்கு அக்காலத்தில் இடையன்குளம் தலைமையிடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. (தொடரும்) (ஜா.ஜான்ஞானராஜ் கல்லிடைக்குறிச்சி)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory