புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இடையன்குளத்தை மையமாகக் கொண்ட CMS மிஷன் பணி - 5

*இடையன்குளத்தை மையமாகக் கொண்ட CMS மிஷன் பணி - 5*
*இடையன்குளத்தின் தொடக்ககால குருமார்*
1827 முதல் 1858 வரை கனம்.C.T.E.ரேனியஸ் (பாளை)
கனம்.G.பெற்றிட் (பாளை) அவ்விருவருக்குப் பின் டோனாவூர் தலைமை CMS மிஷனரிகளான கனம்.E.டென்ற்
கனம்.சார்லஸ்ரேனியஸ்
கனம்.ஜேசுதாசன்ஜான்
கனம்.T.ஃபோக்ஸ்
கனம்.S.ஹாப்ஸ்
கனம்.D.ஞானமுத்து
கனம்.ஆஷ்டன் டிப் ஆகிய குருமார்களின் கண்காணிப்பில் இடையன்குளம் சபை இருந்தது.
1858 க்கும் 1878 க்கும் இடைப்பட்ட காலத்தில்
கனம்.M.தேவப்பிரசாதம்
கனம்.ஜான் கிரிட்டன்
கனம்.நைஜல் ஹானிஸ்
கனம்.M.சவரிராயன்
கனம்.M.தேவப்பிரசாதம்
கனம்.I.சாமுவேல் ஆகிய குருமார்கள் இடையன்குளத்தில் தங்கி பணி செய்தனர்.
*இடைக்கால சபை வளர்ச்சி*
இடைக்கால இடையன்குளம் சபை வரலாற்றை அறிந்துகொள்ள பேராயர்.மகாகனம்.
எட்வர்டு சார்ஜென்ற் அவர்களது ஊழியடைரி மிகபயனுள்ளதாக உள்ளது.11.03.1877 அன்று உதவிபேராயராக கல்கத்தா தூய.பவுல் தேவாலயத்தில் அருட்பொழிவு பெற்று திரும்பிய அவர் 1877 ல் மிஷனரி சுற்றுப்பயணம் செய்து அதில் தாம் சந்தித்த சபைநிலவரங்களைத் தம் ஊழிய டைரியில் குறிப்பிட்டுள்ளார். அதில் இடையன்குளம் மற்றும் அதன் கிளை சபைகளான ஆதிச்சப்பேரி, காடுவெட்டி, சமாதானபுரம் ஆகிய சபைகள் பற்றியும் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளதோடு இடையன்குளம் குருவானவர் கனம்.I.சாமுவேல் ஊக்கமாகச் செயலாற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முதன்முதலில் ஆதிச்சப்பேரியில் கிறிஸ்துவை ஏற்றவர் இடையன்குளம் சபை பெண்ணைத் திருமணம் செய்ததாகவும் இடையன்குளத்தில் நடைபெற்ற அந்த திருமணஆராதனையை நடத்திய மிஷன் குருவானவர் தம் அருட்செய்தியில் கிறிஸ்தவர்களில்லாத ஆதிச்சப்பேரிக்கு செல்லும் மணமகளே நீ உன் சாட்சியான பரிசுத்தவாழ்வு மூலம் ஆதிச்சப்பேரி கிராமத்தாரை ஆத்துமஆதாயம் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாகவும் குருவானவர் சொன்னது போன்றே அப்பெண்ணும் ஆதிச்சப்பேரியில் சாட்சியான தம் தூயவாழ்வு மூலம் பெரும் மாற்றத்தை உருவாக்கியதாகவும் வெகுவிரைவில் ஆதிச்சப்பேரி கிராமத்தார் அனைவரும் கிறிஸ்தவரானதாகவும்
மிஷன்குறிப்பு மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. சுவிசேஷம் அறிவிப்பதில் அக்காலத்து சபையாரின் ஆர்வம் என்றும் நினைவுகூரும்படி நமக்கு முன்உதாரணமாக உள்ளது.
(தொடரும்)
(ஜா.ஜான்ஞானராஜ் கல்லிடைக்குறிச்சி)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory