*பங்களாச் சுரண்டை திருச்சபையும் - கிரேஸ் அம்மாளும் - திருச்சபை வரலாற்று நெடு தொடர் -01*
#Tinnevelly #Historical
கனம் அம்மாளவர்கள் திருநெல்வேலி அத்தியக்ஷாதீனத்தின் சி . எம் . எஸ் . சரகத்தில் சாஷியாபுரம் , வாகைக்குளம் , நல்லூர் சர்க்கிள் களுக்கு சேர்மனாகவும் , திருநெல்வேலி சி . எம் . எஸ் . டிஸ்டிரிக்ட் சர்ச் கவுண்சில் செக்ரற்றேரியாகவும் சிறந்த பணியாற்றி நல்லூரில் 1916 - ம் நம் ஜூலை மாதம் 23 - ம் தேதி தன்னுடைய ஐம்பதாவது வயதில் மரணமடைந்த கனம் ஏசுதாசன் ஆல்பர்ட் ஐயரவர்களின் சேஷ்ட புத்திரி.
கோவில்பட்டி ,
சிவகாசி ,
சிரிவில்லிபுத்தூர் ,
வாகைக்குளம் ,
நல்லூர் ஆகிய இடங்களில் தன் கணவனோடு ஒத்துழைத்து , ஆண்டவருக்கு உத்தம பணி விடை செய்து , தன் கணவனுடைய காலத்துக்குப் பின்பும் தன் அந்தியகாலம் மட்டும் தன் இரட்சகரின் சேவையில் சலிப்பின்றி உழைத்து 1951 - ம் ஏப்ரல் மாதம் 17 - ம் தேதியன்று தனது எண்பத்திரண்டாவது வயதில் தன் சொந்த ஊராகிய *பங்களாச் சுரண்டையில்* மரணமடைந்த கனம் ஞானாபரணம் ஆல்பர்ட் அம்மாளவர்கள் கிரேஸ் அம்மாளவர்களின் தாயார்.
ஆதியில் பங்களாச்சுரண்டை சி . எம் . எஸ் . மிடில் ஸ்கூலுக்கு பத்து வருஷங்கள் தலைமை ஆசிரியராகவும் , பின் தோர்ணக்கல்லில் நான்கு வருஷங்கள் இந்திய மிஷனெரி சங்க மிஷனெரியாகவும் , அதின் பின் திருநெல்வேலி அத்தியக்ஷாதீனத்தில் நல்லூர் ,
கோவில்பட்டி ,
மெஞ்ஞானபுரம் ,
பண்ணைவிளை சர்க்கிள்களுக்கு சேர்மனாகவும் உத்தம பணிவிடை செய்து 1939 - ம் வரும் செப்ரெம்பர் மாதம் 13 - ம் தேதி நாசரேத்தில் தனது அறுபத்திரண்டாவது வயதில் மரணமடைந்த கனம் ஜாண் சாமுவேல் ஐயரவர்களின் மனைவி கிரேஸ் அம்மாளவர்கள்.
திருநெல்வேலி டவுனிலிருக்கும் ஷாப்டர் ஹைஸ்கூலில் உதவி ஆசிரியராகவும் , தலைமை ஆசிரியராகவும் 1915 - ம் வருஷம் முதல் 1955 - ம் வருஷம் வரைக்கும் நாற்பது வருஷ காலமாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றிருக்கும் பென் ஆல்பர்ட் அவர்கள் கிரேஸ் அம்மாளவர்களின் நேர் இளைய சகோதரன் . சென்னை மெயில் பத்திரிகையில் சப் எடிற்றராக திறமையுடன் உத்தியோகம் வகித்து 1962 - ம் வருஷம் பெப்ருவரி மாதம் 9 - ம் தேதியன்று தனது அறுபத்து மூன்றாவது வ ய தி ல் மதுரையில் காலமான ஸ்ரீ வ்ராங்க் ஆல்பர்ட் அவர்கள் கிரேஸ் அம்மாளவர்களின் அடுத்த சகோதரன்.
இடையன்குடி கால்டுவெல் மெமோரியல் ஹைஸ்கூல் , ராமநாதபுரம் சுவார்ட்ஸ் ஹைஸ்கூல் , தூத்துக்குடி கால்டுவெல் ஹைஸ்கூல் ஆகிய பள்ளிக் கூடங்களுக்கு தலைமை ஆசிரியராக நற்பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றிருக்கும் கனம் எம் . எஸ் . ரத்தினம் ஐயரவர்களின் மனைவியான ஸ்ரீமதி ஹெப்சிபா லைற் அம்மாளவர்கள் கிரேஸ் அம்மாளவர்களின் இளைய சகோதரி . இவர்கள் ராமநாதபுரத்தில் 1951 - ம் வருஷம் ஜூலை மாதம் 12 - ம் தேதியன்று தனது நாற்பத்தெட்டாவது வயதில் மரணமடைந்தார்கள்.
கிரேஸ் அம்மாளவர்கள் 1891 - ம் வருஷம் மே மாதம் 7 - ம் தேதியாகிய கிறிஸ்துவானவர் பரத்துக்கேறின திரு நாளன்று அவர்களது தகப்பனார் கனம் ஆல்பர்ட் ஐயரவர் கள் *பங்களாச் சுரண்டை* சி . எம் . எஸ் . மிடில் ஸ்கூலுக்கு கனம் ஷாப்டர் ஐயரவர்களின் மேற்பார்வையின் கீழ் தலைமை ஆசிரியராயிருக்கும்போது பங்களாச்சுரண்டையில் பிறந்தார்கள்.
கனம் ஐயரவர்களுடைய கையின் கீழ் பள்ளிக்கூடம் மிகவும் சிறப்புற்றிருந்தது.
தஞ்சாவூர் ஸ்ரீ ஆபிரகாம் பண்டிதர் அவர்களுடைய மருமகனும் பங்களாச் சுரண்டை ஆலயத்துக்குக் கோபுரமும் காம்பவுண்டு சுவரும் 1924 - ம் வ ரு ஷ த் தி ல் கட்டினவர்களுமான ஸ்ரீ ஞானசிகாமணி அவர்கள் கனம் ஐயரவர்களின் பழைய மாணவர் ஆவர் .
கிரேஸ் அம்மாள் பிறந்த அதே வருஷம் கனம் ஐயரவர்கள் பங்களாச் சுரண்டை பங்களாவிலும் , ஆலயத்திலும் பழுது பட்டுப் போயிருந்த பனங்கைகளை எடுத்து விட்டு கோங்குக் கைகளைப் போட்டார்கள்.
அதின் பலனாக பங்களாக் கூரையும் ஆலயத்தின் கூரையும் இன்றையதினம் வரைக்கும் பழுதுபடாதிருக்கின்றன.(தற்போழுது புதிய ஆலயம்) இதினால் மிடில் ஸ்கூல் ஹைஸ்கூல் ஆனவுடன் பங்களாவின் அறைகள் ஹைஸ்கூலுக்கு வகுப்பு அறைகளாக உபயோகிக்கப்பட ஏதுவாயிருந்தது .
புதுக் க ட் ட ட ம் கட்டும் செலவை ஓரளவுக்கு இது இலகுவாக்கிற்று .
மேற் கூறிய ரிப்பேர்களைச் செய்யும் விஷயத்தில் கனம் ஆல்பர்ட் ஐயர் வர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தது கனம் ஆல்பர்ட் அம்மாளவர்களின் தகப்பனாரான ஸ்ரீ ஆணிமுத்து தாவீது விசாரணை உபாத்தியாயரவர்கள்......
தொடரும்.......

No comments:
Post a Comment