புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

அருட்திரு . T . பேரின்பராஜ்

*திருநெல்வேலியில் இருந்து வந்த இந்திய மிஷனரி சங்க ஊழியர்கள்: - 10*

அருட்திரு . T . பேரின்பராஜ்

இவர் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தார் . இவர் குழந்தையாக இருந்தபோதே , கடவுளின் சத்தத்தைக் கேட்டு , தன்னைக் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணித்தார் .

தனது கல்வியை முடித்த பின் , சில காலம் சிறுவர் ஊழியராகப் பணி செய்தார் .

இவர் செல்வி . விமலாவைத் திருமணம் செய்த பிறகு 26 . 9 . 1986இல் இ . மி . சங்கத்தில் இணைந்து , மேற்கு வங்கத்தில் குனாயிர் பணித்தளத்திற்குச் சென்றார் .

அங்கு இருவரும் ஏறக்குறைய 7 ஆண்டுகள் ஊழியம் செய்தனர் .

இவர்களது மூன்றாவது குழந்தை குனாயிரில் மரித்தது .

அதன்பிறகு 1993 இல் ஒரிசாவின் மல்க்கன்கிரி பணித்தளத்திலுள்ள ம . கி . என்ற சந்தாலி கிராமத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர் .

1997 வரை ஏறக்குறைய 4 ஆண்டுகள் அங்குப் பணி செய்தனர் .

*அபிஷேகமும் ஊழியமும் : -*

இறையியல் படிப்பிற்காக இருவரும் YCLT யோத்மாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .

10 . 5 . 1998 அன்று உதவி குருவாக அபிஷேகம் பெற்றார் .

இவர்கள் கோங்குலா மையப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு 28 . 11 . 2004 வரை இப்பணியில் இருந்தனர் .

இதன்பிறகு இருவரும் காலிமேலா மையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு , ' மையப்பொறுப்பாளராகவும் , காலிமேலா சேகரத்தலைவராகவும் பொறுப்பேற்றார் .

இவர்களது மூன்று மகள்களும் தமிழ்நாட்டிலுள்ள ' டோனாவூரில் கல்வி கற்கின்றனர் . தற்போது , மேற்கு வங்கத்தின் ' குனாயிர் பணித்தளப் பொறுப்பாளர்களாக , பணியிடமாற்றம் ' செய்யப்பட்டு , 2007 முதல் அங்குப் பணியாற்றி வருகின்றனர் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory