புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கால்வின் ஃபெர்பாங்க்ஸ்

அடிமைத்தனத்துக்கு எதிராக குரல் கொடுத்த கால்வின் ஃபெர்பாங்க்ஸ்

19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் அடிமை வியாபாரம் பெருமளவில் நடந்து கொண்டிருந்தது . அமெரிக்க வரி கணக்கு புத்தகங்களின்படி , 32 லட்சம் அடிமைகள் இருந்ததாகவும் , இவர்களின் விலை 100 கோடி என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது .
அன்றைய அமெரிக்கா அடிமைகளின் உழைப்பையே மூலதனமாக சார்ந்திருந்தது . எனவே அடிமைத்தனத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் நாட்டின் எதிரிகளாகக் கருதப்பட்டனர் . ஆனால் , ஆண்டவரின் அன்பால் தொடப்பட்டவர்கள் இந்த அட்டூழியமான அவல நிலையைக் கண்டு , அமைதியாக இருக்கமுடியுமா ? கிறிஸ்துவுக்குள் எல்லோரும் சமம் என்பதை உணர்ந்த பின்னரும் , பொறுமை என்று பொறுத்துப்போக முடியுமா ? கால்வின் ஃபெர்பாங்க்ஸ் என்ற மெதடிஸ்ட்மிஷனெரி அடிமைத்தனத்தின் மீது ஆவேசம் கொண்டார் .
ஒருசமயம் அவர் அடிமைகளை விற்கும் சந்தைக்கு சென்றிருந்தார் . அங்கே எலிசா என்ற நீக்ரோ இன வாலிப பெண் விற்கப்படும்படியாக கொண்டுவரப்பட்டிருந்தாள் .
ஏலம் எடுக்கும்படியாக ஒரு பிரான்ஸ் நாட்டு வணிகனும் வந்திருந்தான் .
அப்பெண்ணை பார்த்தவன் இவளை ஏலம் எடுத்தால் நல்ல லாபத்திற்கு விற்க முடியும் என முடிவு செய்தான் , ஏலம் துவங்கியதும் ஃபெர்பாங்சும் கேட்கத் துவங்கினார் , இருவருக்குமிடையே ஏலத்தில் பலத்த போட்டி நிலவியது .
பிரஞ்சு வியாபாரி கடைசியாக 1 , 575 பாலர் என்று கேட்டான் . ஆனால் இவரோ 1585 டாலர் என்று கேட்டு அவளை விலைக்கு வாங்கினார் . அப்பொழுது அவள் இவர் காலை பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள் . அந்த பிரஞ்சு வியாபாரி மிஷனெரியைப் பார்த்து " இவ்வளவு பணம் கொடுத்து இவளை வாங்கினீரே , என்ன செய்யப் போகிறீர் என்று கேட்டார் . அதற்கு அவர் இவளை விடுதலை செய்யப்போகிறேன் " என்றார் .
இதைக் கேட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர் . இவளோ துள்ளிக் குதித்தாள் . அடிமை வியாபாரத்தைக் குறித்ததான இம்மிஷனெரியின் கரிசனை மாபெரியது .
இயேசு கிறிஸ்துவை அறியாமல் , அடிமைத்தனத்திற்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் மக்களைக்குறித்ததான் உங்களின் கரிசனை என்ன ?

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory