புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பழங்குடி இனமக்கள் பட்டியல்-01

பழங்குடி இனமக்கள் பட்டியல்-01

கல்வார் பழங்குடி மக்கள்

*பழங்குடி மக்கள் இனத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும் அவர்களுக்காக ஜெபிக்கவும் வேண்டும் என்ற நோக்கத்திற்க்காக பதிவு செய்கின்றோம்*

*நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒருமனுஷனைத் தேடினேன்...."*

கல்வார் பழங்குடி மக்கள் பீகார் , உத்திரப்பிரதேசம் , மத்தியப்பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகமாக உள்ளனர் .

இவர்களுக்குள் மால்வி , தஹாரியா , ஜெய்ஸ்வர் ஆகிய வேறு பெயர்களும் உண்டு .

இவர்கள் மகாஹி , ஹிந்தி ஆகிய மொழியில் பேசுகின்றனர் .

சமஸ்கிருத சொல்லான ' கல்யபாலா ' என்பதற்கு ' சாராயம் காய்ச்சுதல் ' என்று பொருள் , இவர்களது பரம்பரைத் தொழில் சாராயம் காய்ச்சுதல் , விற்பனை செய்தல் ஆகும் .

மற்றும் தினக்கூலி , விவசாயக் கூலி வேலைகளையும் செய்கின்றனர் .

இவர்கள் ' மஹவா ' என்ற மரத்திலுள்ள பூக்களைக் கொண்டு மது பானம் தயாரிக்கின்றனர்.

ஆண்கள் அளவுக்கு அதிகமாகக் குடிக்கின்றனர்.

மதுபானத்தை திருமணம் மற்றும் குடும்பத்தில் நடைபெறும் எல்லா விசேஷங்களிலும் அனைவரும் அருந்துகின்றனர்.

இவர்களது முக்கிய உணவு ஆடு , மான் , பறவைகள் மற்றும் மீன் வகைகள் ஆகும் .

இவ் வினப் பெண்கள் பச்சை குத்திக்கொள்கின்றனர்.

சிலர் ஆபரணங்களையும் அணிகின்றனர் .

இவர்கள் கிராமவேலை செய்பவர்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இவர்கள் தங்கள் சூழ் நிலைகளுக்கேற்றவாறு இந்து மதச்சடங்குகளின்படி திருமணத்தை நடத்துகின்றனர்.

பொதுவாக , பெண்களுக்கு இளவயதிலேயே திருமணம் செய்கின்றனர்.

ஆனால் , பெண்ணிடம் தவறான நடத்தை காணப்படுமாயின் திருமணம் காலதாமதமாக செய்யப்படுகிறது .

தங்கள் குலப்பண்டிகையின் போது திருமணத்தை ஒழுங்கு செய்கின்றனர் .

திருமணம் மற்றும் எல்லா சடங்குகளையும் பிராமணப் பூசாரியை வைத்து நடத்துகின்றனர் .

பெரும்பாலும் , ஒருதார மணமே கடைப்பிடிக்கப்படுகிறது .

பலதாரமணம் அனுமதிக்கப்படுகிறது.

பெண் வேறொருவருடன் தவறாக நடந்தால் அவளை தங்கள் இனத்திலிருந்து ஒதுக்கிவைக்கின்றனர்.

விவாகரத்தும் , விதவை மறுமணமும் வழக்கத்திலுள்ளது.

இவர்கள் இந்து பண்டிகைகளான தசரா , ஹோலி மற்றும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

இவர்கள் மாந்திரீகம் மற்றும் மூடநம்பிக்கைகளை நம்புகின்றனர் .

இவர்கள் இறந்தவர்களை எரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory