*பங்களாச் சுரண்டை திருச்சபையும் - கிரேஸ் அம்மாளும் - திருச்சபை வரலாற்று நெடு தொடர் -02*
#Tinnevelly #Historical
நேற்றய தொடர்ச்சி .......
1892 - ம் வருஷம் கனம் ஆல்பர்ட் ஐயரவர்கள் குருப் பட்டத்துக்கு தெரிந்தெடுக்கப்பட்டு குருபட்டத்துக்குப் படிக்கும்படி குடும்பத்துடன் சென்னைக்குப் புறப்பட்டு திருநெல்வேலியில் ரெயில் ஏறும்படி சுரண்டையிலிருந்து மாட்டு வண்டியில் பாளையங்கோட்டை போய்ச் சேர்ந்தார்கள்.
அப்போது திருநெல்வேலியிலிருந்து கொல்லத்துக்கு ரெயில் போடப்படவில்லை .
பாளையங்கோட்டை சேர்ந்தவுடன் அச்சமயம் சி . எம் . எஸ் . சூப்பரின்டென்டிங் மிஷனெரியாக இருந்த கனம் . டக்ளஸ் ஐயரவர்கள் ' ' உனக்கு விரோதமாக சுரண்டை சர்க்கிளிலிருந்து பிராதுகள் வந்திருக்கின்றன.
ஆகையால் நீ திரும்பி சுரண்டைக்குப் போ.
நான் வந்து விசாரிப்பதில் நீ குற்றமற்றவன் என்று ருசுவான பின்பே நீ சென்னைக்குச் செல்லலாம் ” என்று கட்டளையிட கனம் ஐயரவர்கள் குடும்பத்தோடு மறுபடி சுரண்டை வந்து சேர்ந்தார்கள் .
முக்கியபிராது என்ன வெனில் கோவிலையும் பங்களாவையும் ரிப்பேர் செய்ததில் , மாமனாரும் மருமகனும் சேர்ந்து பணம் திருடிக்கொண்டார்கள் என்பது .
இது போக , கனம் ஐயரவர்களும் அவர்களுடைய மைத்துனர் டிப்டிகலெக்டர் ஸ்ரீ நவமணி டேவிட் அவர்களும் ரஜாக் காலங்களில் சுரண்டையில் வாலிபராகக் கூடும்போது , போர்டிங் பாடசாலை உபாத்திமாரும் இவர்களுமாக சேர்ந்து வேதநாயக சாஸ்திரியாரின் பாடல்களை மனப்பாடம் பண்ணி , பங்களாச் சுரண்டை ஊருக்குக் கிழக்கே அப்போதிருந்த சந்தையில் ஊஞ்சல் போட்டு ஆடி ஊஞ்சல் பாட்டுப் பாடுவதும் , யோசேப்பின் சரித்திரம் போன்ற வேத சரித்திரங்களை நாடகமாக நடிப்பதும் சகஜ மாக இருந்து வந்திருந்தது.
பிராதில் கண்டிருந்த மற்றோர் குற்றம் இது .
தான் சொன்னபடியே கனம் டக்ளஸ் ஐயரவர்கள் சுரண்டைக்கு வந்து , பங்களாவில் இருந்து கொண்டு , விசாரணையென்று விளம்பரம் பண்ணி , விசாரணையில் ஆஜராகும்படி கையெழுத்திட்டவர்களை ஆள் அனுப்பி அழைக்க ஒருவரும் வரவில்லை .
அதின் பேரில் கனம் டக்ளஸ் ஐயரவர்கள் ஆலயத்தில் மணி அடித்து சபை முழு வதையும் ஆலயத்தில் கூடி வரச்செய்து , தன் விசாரணையின் முடிவாக ஸ்ரீ ஆல்பர்ட் ஹெட்மாஸ்ற்றர் அவர்கள் குற்ற மற்றவர்கள் என்று ருசுவாகியிருக்கிறதாகக் கூற சபையார் அந்த இடத்திலேயே சனம் டக்ளஸ் ஐயரவர்களை தலைமை வகிக்கச்செய்து , கனம் ஆல்பர்ட் ஐயரவர்களுக்கு பயணோ பசாரப் பத்திரம் ஒன்று படித்து , தங்கள் நன் மதிப்புக்கடையாளமாக ஒரு வேத புஸ்தகமும் இனாம் அளித்து , இவ்வித மாக கனம் ஐயரவர்களைக் கெளரவித்து அனுப்பி வைத்தார்கள்.
இக் காரியங்களை முன்னின்று நடத்தினவர் அப்போது சுரண்டையில் பைபிள் கோல் போட்டராக இருந்த ஸ்ரீ பாக்கிய நாதன்கோல் போட்டர் அவர்கள்.
சத்தியம் தவறாதவர் .
நியாயத்துக்காகப் போராடுவதில் பின் வாங் காதவர் .
அஞ்சா நெஞ்சம் படைத்தவர் .
ஊரில் அவருக்கு மிகுந்த மதிப்பு உண்டு ,
சர்க்கார் உத்தியோகத்தில் உயர்ந்த பதவிகள் வகித்து தற்போது ஓய்வு பெற்றிருக்கும் ஸ்ரீ ஆர் . டி . பால் , ஸ்ரீ எச் . எஸ் . பால் ஆகிய இரு சகோதரரின் பாட்டனார் .
பின்னான காலங்களில் மேற் கூறிய சம்பவங்களைக் கதையாகச் சொல்லி கேட்போரைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பார் .
பெற்றோர் இவ்விதமாகப் பட்ட அல்லலில் பங்கு கொண்டது கிரேஸ் அம்மாள் மாத்திரமே .
அவர்களுக்கு அப்போது வயது ஒன்று .
அச்சமயத்தில் பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருந்ததின் பொருட்டு அம்மாளவர்கள் அச்சமயத்தில் தன் பெற்றோருக்கு விசேஷித்த ஆறுதலாக இருந்திருக்க வேண்டும் என்பது எமது துணிபு .
ஏனெனில் , அச்சமயத்தில் மேலச் சுரண்டையில் சிறுவனாக தன் மூத்த சகோதரியின் வீட்டில் இருந்து படித்துக் கொண்டிருந்த கனம் ஆல்பர்ட் ஐயரவர்களின் கடைசி சகோதரனான ஸ்ரீ டேவிட் பொன்னையா அவர்கள் , கனம் ஐயரவர்களின் மாமனாரான ஸ்ரீ ஆணி முத்து டேவிட் விசாரணை உபாத்தியாயரவர்கள் வீட்டிற்கு விடியற்காலம் வழக்கம் போல் பால் கொண்டு வந்தபோது , பட்டணத்துக்குப் பிரயாணப் பட்டுப்போன தன் அண்ணட்சியவர்கள் கையில் கிரேஸ் அம்மாளை வைத்துக் கொண்டு வாசலில் நிற்பதைக் கண்டு தான் பிரமித்ததாக பிற்காலத்தில் கூறியுள்ளார்கள்.
தொடரும்.......

No comments:
Post a Comment