புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கர்த்தார் சிங்

*கிறிஸ்துவின் அன்பை தன் வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்டிய கர்த்தார் சிங்*

பாட்டியாலா என்ற கிராமத்தில் மாபெரும் செல்வந்தரான சிக்கிய பெற்றோருக்கு மகனாக பிறந்தார் கர்த்தார் சிங் . இவரது தந்தை தன்னுடைய குமாரன் சிறந்தவனாக வளரவேண்டும் என்று விரும்பியதால் சகலவிதமான பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்தார் .

சிறுவயதிலேயே கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளில் ஆர்வம் காட்டிய இவர் வேதாகமத்தின் சத்தியங்களில் தன் மனதைப் பறிகொடுத்தார் .

எந்த அளவுக்கு இயேசுவின் வார்த்தைகளை நேசித்தாரோ , அந்த அளவுக்கு அவரது பாவ வாழ்வு அவரைவிட்டு உருண்டோடியது .

இறுதியில் தன்னை இயேசுவுக்கு முற்றிலுமாக அர்ப்பணித்தார் .

கர்த்தார்சிங் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் , தன்னுடைய வீட்டிலிருந்து வெறுமையாக துரத்தப்பட்டார் .

ஆனால் இவர் பாட்டியாலாவிலுள்ள கிராமங்களிலும் , பட்டணங்களிலும் சுவிசேஷத்தை பிரசங்கித்தார் .

பஞ்சாபில் அநேக இடங்களில் சுவிசேஷத்தை அறிவித்த இவர் , உயர்ந்த மலைகளைத் தாண்டி திபெத் நாட்டிற்குப் பயணமானார் .

அங்கு புத்த பிட்சுகள் இவரின் போதகத்தை எதிர்த்தனர் .

ஆயினும் கிறிஸ்துவின் அன்பை தன் வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்டி சிலரை கிறிஸ்துவண்டை வரச்செய்தார் .

எப்படியாயினும் அம்மக்களை கிறிஸ்துவுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று தன் அழைப்பில் உறுதியாகக் காணப்பட்ட இவர் , தெருத்தெருவாக சென்று சுவிசேஷத்தை அறிவித்தார் .

அரசாங்கத்தின் உத்தரவின்றி உள்ளே வந்துள்ளான் என்று இவரை குற்றம்சாட்டி சிங்காமின் தலைவரிடத்தில் கொண்டு சென்றார்கள் .

தலைவன் இவருக்கு மரண தண்டனை விதித்தபோதிலும் , தன் விசுவாசத்தை மறுதலிக்காமல் , அம்மக்களுக்கு கிறிஸ்துவின் செய்தியை எடுத்துரைக்க ஆரம்பித்தார் .

இதனால் இவரை ஓர் ஈர எருமைத் தோலில் வைத்து தைத்து வெயிலில் போட்டனர் .

வெயில் ஏற , ஏற இவர் எலும்புகள் உடைய ஆரம்பித்தன .

சுற்றி நின்றோர் பரிகாசம் செய்ய , இவரோ இயேசுவே உண்மையான தெய்வம் என்று அவர்களுக்கு அறிவித்துக் கொண்டே இருந்தார் .

ஒருமுறையாகிலும் கதறி அழாமல் அந்த கொடிய வேதனையை அமைதியாக சகித்து , ஆண்டவரின் கரத்தில் தன் ஜீவனைக் கொடுத்தார் .

சாது சுந்தர்சிங் இவர் வாழ்வால் மேலும் உற்சாகம் பெற்றார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory