புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சாது சுந்தர் சிங்

உலகை கவர்ந்த இந்திய இளைஞனின் பிறந்த தினம் இன்று சாது சுந்தர் சிங்

#Tinnevelly #Christian #Historical

திபெத் நாடு . புத்த மதத்தைச் சார்ந்த மக்கள் , கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவோ , கேட்கவோ தடை செய்யப்பட்ட இடம் .
மீறினால் கொடூரமான . தண்டனை . உள்ளத்தில் கிறிஸ்துவையும் , கரங்களில் வேதாகமத்தையும் சுமந்து புறப்பட்டார் சாது சுந்தர்சிங் .
பிறப்பிலே அவர் ஒரு சீக்கியர் .
வளர்ப்பிலே மிகவும் சடங்காச்சாரங்களுடன் வளர்க்கப்பட்டவர் . 19வது வயதிலே திபெத்தை நோக்கி சுவிசேஷத்தைச் சுமந்து சென்றார் சாது .
திபெத் லாமாக்களால் அவர் பிடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார் . அவ்விடத்திலிருந்து 1889 விரட்டப்பட்டார். துன்பங்களை இன்பமாக ஏற்றுக்கொண்டு மீண்டும் சுவிசேஷப்பணியைத் தொடர்ந்தார்.
அந்தோ ! லாமாக்களின் தலைவனிடம் பிடிபட்டார் . தண்டனையோ மிகவும் கொடூரம் . பாழடைந்த கிணறு . தவறு செய்தவர்களை உள்ளே போட்டு மூடி விடுவார்கள் . உடல் அழுகி சாக வேண்டியது தான் . சாது சுந்தர் சிங்குக்கும் இதே தண்டனை கொடுக்கப்பட்டது .
உள்ளே விழுந்தவுடன் அவர் தோள்பட்டை உடைந்தது . அழுகிய பிண நாற்றத்தால் வயிறு குமட்டியது . எங்கு பார்த்தாலும் பிணங்கள் . கிணற்றிற்குள்ளிருந்தே ஜெபிக்க ஆரம்பித்தார் சுந்தர் சிங் . மூன்று நாட்களுக்குப்பின் ஓர் அதிசய மனிதரால் அக்கிணற்றுக் கதவு திறக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
மீண்டும் தன் பணியைத் தொடர்ந்தார் . திபெத் , நேபாளம் மற்றும் இந்தியாவின் பல பாகங்களிலும் ஊழியம் செய்த இவர் எளிமையாகவும் , இனிமையாகவும் , உவமைகளாலும் போதிப்பதில் சிறந்தவர் .
இவரது நூல்கள் கிறிஸ்தவ ஜீவியத்தின் ஊன்றுகோல்கள் . இரத்தம் சிந்தும் பாதங்களையுடைய அப்போஸ்தலன் என்றும் , இந்திய அப்போஸ்தலன் என்றும் அழைக்கப்பட்ட சாதுசுந்தர் சிங் பிறந்தது இந்தத் தினத்தில் தான் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory