புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

வேதமுத்து உபாத்தியாயர்

*மலையேறும் சுவிஷேசம்*

#Tinnevelly #Historical

வேதமுத்து உபாத்தியாயர் பாவூர் மிஷனெரி பங்களாவுக்கு வந்து , அந்த மாலை நேரத்தில் தேனீர்பானமருந்தி விட்டு , வெளி வாசலைத் திறந்த செப்ற்றிமஸ் ஹாப்ஸ் ஐயருக்கு ( Rev Septimus Hobbs ) வந்தனம் கூறினார் .

அவரை வரவேற்ற மிஷனெரி , *' ' வாரும் . என்ன காரியமாய் வந்தீர் ? '* ' என்று கேட்டுக் கொண்டே , அங்கிருந்த ஆசனத்திலமர , வேதமுத்தும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து , *" ஐயா விடம் ஒரு காரியமாய் வந்தேன் '* ' , என்றார் .

' ' சரி சொல்லும் ' ' , என்று ஐயர் ஊக்குவிக்க , வேதமுத்து மேற்கத்திமலைகளைக் காட்டிக் கூறினார்.

" நமது நாட்டுக்கும் திருவாங்கூர் ராச்சியத்துக்குமிடையில் , காடுகளின் மத்தியில் சில காட்டு மனிதர் வாழுகிறார்களென்று தெரிகிறது .

அவர்கள் 'சுவிசேஷச் செய்தியை எப்பொழுதாவது கேட்டிருப்பார்களாவென்று சந்தேகிக்கிறேன்.

சரி , அதற்கென்ன செய்ய வேண்டுமென்றிருக்கிறீர் ?

அந்தக் காட்டுக்குள் போய் அவர்களைக் கண்டு பிடிக்க முடியுமாவென்று பார்த்து . . . . கண்டுபிடித்தால் ?

கண்டுபிடித்தால் சத்தியத்தை அறிந்துகொள்ள அவர்களுக்கு மனமுண்டாவென்று தெரிந்து வர வேண்டும்.

" நல்ல யோசனை தான் ! அப்படிச் செய்ய எனக்குச் சிலகாலம் ரஜாக் கிடைக்க குமாவென்று சமுகத்தில் . . . . . . . .

கேட்க வந்தீராக்கும் ? சரி .

எத்தனை மாதம் ?

சில நாட்கள் போதும் , துரைகளே ' '

" உமக்கு அந்த ஜனங்களுடைய பாஷை தெரியுமா ? தெரியாது .

ஆனால் தமிழை விளங்கிக்கொள்ளக் கூடியவர்கள் அவர்களிலிருக்கலாம்.

அப்படியில்லாவிட்டலும் ஏதாவதொரு வழியில் என்னை அவர்கள் விளங்கிக் கொள்ளச் செய்வேன் , ஐயா '

நிச்சயமாக நீர் போகலாம்.

அவர்களில் யாராவது கிறிஸ்து மார்க்கத்துக்கு வருவதானால் எனக்கு மெத்தச்சங்தோஷம்.

''ஒரு வேளை தற்சமயம் அது கொஞ்சம் அதிகமான எதிர்நோக்காபயிருக்கலாம் , ஐயா ;

ஏனென்றால் அவர்களுக்கு கிறிஸ்து மார்க்கத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாது.

ஆம் . . . ஆம் . . .

அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதிலும் மிகுந்த சிரமம் இருக்கிறது. ஒருவேளை

ஒருவேளை ? ' '

இப்போதைக்குத் தங்கள் மத்தியில் ஒரு பள்ளிக் கூடம் வைக்க அவர்களைச் சம்மதிக்கச் செய்துவிட்டேனானால் , அதுவே நாம் தற்சமயத்துக்கு அவர்களிடத்தில் எதிர் பார்க்கக்கூடிய பெரிய காரியம் .

'ஹாப்ஸ் ஐயருக்கு வேதமுத்து அப்படிப் பேசினது அதிக சந்தோஷத்தை அளித்தது.

ஏனென்றால் அவர் அதைப்பற்றி நன்கு யோசித்திருந்தார் என்றும் , ஏதோ ஒரு திடீர் உற்சாகத்தில் செயல்பட ஆரம்பித்துவிடவில்லை என்றும் அவருடைய வார்த்தைகள் காட்டின.

மிஷனெரியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்ட வேதமுத்து தன்னுடைய அடுத்த கோரிக்கையையும் சமர்ப்பித்தார்.

என்னுடைய நண்பனும் அயலாருமான மாசிலாமணி உபாத்தியாயரையும் நான் கூட்டிக்கொள்வதற்குச் சமுகத்தில் உத்தரவு கிடைக்குமானால் . . .

" ஓ , நிச்சயமாய் ! கூட்டிக் கொண்டு போம் !

கிறிஸ்து இயேசுநாதரின் சுவிசேஷத்தை காடுவாள் மக்களுக்கும் எடுத்துச் செல்லவேண்டுமென்றவாஞ்சை.

வாலிபரான அவ்வூழியரின் உள்த்தில் தோன்றி , அப்பணியை மேற்கொள்ளத் தாங்களாகவே , யாருடைய தூண்டுதலுமின்றி முன்வந்தது , ஐயருள்ளத்தில் நன்றிகலந்த , உவகையளித்தது .

அம்மலைவாசிகளைப்பற்றி அவர் நினைத்ததுண்டு , ஆனால் , பாவூர்வட்டாரத்தோடு நல்லுார் வட்டாரத்தையும் சேர்த்து மேற்பார்வை செய்யவேண்டிய திருந்தால் , வேலைப்பழுவினிமித்தம் அவர் அது விரையத்தில் அதிகமாக ஒன்றும் யோசிக்கக்கூடாது போயிற்று.

1851 - ம் ஆண்டு மார்ச் 7 - ம் நாள் , வேதமுத்தும் மாசிலாமணியும் மலையில் வாழ்ந்த அம்மக்களைத் தேடிச் சென்று , அவர்களுடன் சில நாட்களைப் பின்னிட்டு , 24 ம் தேதி திரும்பி வந்து ஐயரைச் சந்தித்தனர், மகிழ்ச்சியுடனும் அன்போடும் அவர்களை வரவேற்ற மிஷனெரி அவர்கள் சொன்ன விவரங்களைக் கேட்டு கர்த்தரைத்துதித்தார்.

மலையேறுவது தொடக்கத்தில் அதிகக் கஷ்டமாயிருந்தது .

தொடர்தொடராயிருந்த அம்மலைகளையும் ஊடேயிருந்த பள்ளத்தாக்குகளையும் கடந்தபின் ஒரு பீடபூமியான வெளியிருந்தது . அதில் ஒங்கி நெருங்கி வளர்ந்த மரங்களையுடைய இருண்ட காடு .

அந்தக் காட்டில் அம்மக்கள் ஆங்காங்கே குடிசைகளை அமைத்து சிறுசிறு குடியேற்றங்களாக தோற்றுவித்திருந்தனர்.

காட்டுத்தேன் முதலிய பொருட்களை அவர்கள் சேகரித்து , சமவெளியிலிருந்து வரும் வியாபாரிகளுக்குப் பண்டமாற்றுச் செய்வதுண்டு. அவ்வியாபாரிகளினுதவியில் , வேதமுத்தும் மாசிலாமணியும் அவர்களுடன் பேசிப் பழகிவிட்டார்கள்.

மலைவாசிகள் எளிய ஜனங்கள் என்றும் , சத்தியவர்தரெனவும் , பொய் பேசியறி யாரென்றும் , அவர்களுக்குள் ஜாதி வித்தியாசமில்லை யென்றும் கண்டார்கள்.

இவற்றை அவர்கள் சொல்லிக்கொண்டு வருகையில் , வஹாப்ஸ் ஐயர் கேட்டார்.

அவர்களுடைய மதம் என்ன ? ' '

அகஸ்தியர் என்ற ஒரு தெய்வத்தைக் கும்பிடுகிறார்கள் .

அது ' மலைகளின் தெய்வமென்று வணங்குகிறார்கள் .

அவர்களுடைய தொழுகை ஒருசில சடங்குகளைச் செய்வதிலடங்குகிறது ' '


( *அகஸ்தியர் ' என்ற சொல்லை ஹாப்ஸ் ஐயர் ' அகஸ் ' என்னும் பெயராலறியப்பட்ட ஒரு மரம் என்றெண்ணித் தனது கடிதத்தில் அகஸ் ட்ரீ ( Aqus tree ) என்று குறித்திருக்கிறார்.* )

தமிழ் கற்றுக்கொள்ள விருப்பமுண்டா ? ' ' ' '

ஆம் , ஐயா . சொல்ல மறந்துவிட்டோமே ! தமிழ் படிக்க நிரம்பவும் ஆசைப்படுகிறார்கள் .

ஒரு ஆசிரியர் வேண்டுமென்று வாஞ்சிக்கிறார்கள் ' ' "

அப்படியா ?

ரொம்ப சந்தோஷம் !

தங்களைப் பார்க்கவேண்டுமென்று துடிக்கிறார்கள் '

ஓகோ , ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி . சீக்கிரம் போய்ப் பார்த்து அவர்கள் ஆசையையும் என் ஆசையையும் நிறை வேற்றிக்கொள்ளலாம் என்று நம்புகிறேன்.

நம்பினபடியே , அவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் செப்ற்றிமஸ் ஹாப்ஸ் ஐயரும் அவருடைய தமையனாரான ஸ்டீபன் ஹாப்ஸ் ஐயரும் மலைவாசிகளைச் சந்தித்துச் சிலநாட்கள் செலவிட்டு , சுவிசேஷம் போதித்து , அங்கு நிரந்தர ஊழியம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து திரும்பினர்.

காலக்கிரமத்தில் அம்மக்கள் கிறிஸ்தவர்களாயினர் .

150 பேர் கொண்ட ஒரு சபை தோன்றியது . பள்ளிக்கூடமும் நிறுவப்பட்டு , சிறுவர் பலர் கல்வி பெறலாயினர் . அவர்களிலொருவன் சுவிசேஷமல்லன் என்பான் . அவன் பாவூரில் படித்து முடித்துத் தன் சுய ஜாதியினரின் முதல் உபதேசியாரானான்.

*மலையரசர்* என்றறியப்பட்ட அம்மக்களை , பின்னாளில் திருவாங்கூர் C . M . S . மிஷனெரிமார் தங்கள் பராமரிப்புக்குள் சேர்த்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory