புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பங்களாச் சுரண்டை திருச்சபையும் - கிரேஸ் அம்மாளும் - திருச்சபை வரலாற்று நெடு தொடர் -03

பங்களாச் சுரண்டை திருச்சபையும் - கிரேஸ் அம்மாளும் - திருச்சபை வரலாற்று நெடு தொடர் -03*

4ம் தேதி தொடர்ச்சி.....

#Tinnevelly #Historical

அக்காலத்தில் சென்னை இராயப்பேட்டை டிவினிற்றி ஸ்கூலில் குருப்பட்டத்துக்குப் படித்த மாணவருக்கு ஸ்டை பென்ட் மாதம் ரூ 15 . இது போதாது . ஆகையால் கனம் ஆல்பர்ட் அம்மாளவர்கள் வேலை பார்க்க வேண்டிய தாயிற்று .

இராயப்பேட்டையில் மிஸ் கூலிங் அம்மாளின் மேற்பார்வையிலிருந்த வெஸ்லியன் மிஷன் பெண் பாடசாலையில் உபாத்தினியாக வேலை எடுத்தார்கள்.

சம்பளம் ரூ . 15 . கிரேஸ் அம்மாள் சென்னையில் இருந்த காலத்தில் அவர்களுக்கு வயது 2 , 3 , 4 . தன் தாயாரோடு பள்ளிக் கூடத்துக்குப் போய் வந்திருந்ததாகத் தெரிகிறது .

ஒரு வேளை கின்டர் கார்ட்டன் வகுப்பில் படித்திருக்கலாம் .

ஆனால் தாயாருக்குத் துணையாகச் சென்றதில் தன் தாயாருக்கு அம்மாளவர்கள் மிகுந்த சந்தோஷத்தை அளித்திருக்கவேண்டும் .

அச்சமயத்தில் குருப்பட்டத்துக்குப்படித்துக் கொண்டிருந்த காலஞ் சென்ற ராவ்சாகிப் கனம் எம் .

ஆசீர்வாதம் ஐயரவர்களின் பிள்ளைகளான ஜானகியும் , செல்லம்மாளும் கிரேஸ் அம்மாளின் பள்ளித்தோழர்கள் .
ஆனால் இவர்கள் இருவரும் கிரேஸ் அம்மாளுக்கு வயதில் சற்று மூத்தவர்கள் .

அக்காலத்திலேயே கிரேஸ் அம்மாளுக்கு ஆங்கிலம் பேசுவதில் மிகுந்த திறமை இருந்த தாகத்தெரிகிறது .

எப்படியெனில் பிற்காலத்தில் மேற்கூறிய கனம் எம் . ஆசீர்வாதம் ஐயரவர்கள் ' ' கிரேஸ் அந்தக் காலத்திலேயே இங்கிலீஷ் நன்றாய்ப் பேசுவாள் " என்று சொல்லியிருக்கிறார்கள் .

இதற்குக் காரணம் அம்மாளுடைய தகப்பனாரே .

கனம் ஆல்பர்ட் ஐயரவர்கள் வீட்டில் தாய் பாஷை ஆங்கிலமே . பிள்ளைகளிடத்தில் கனம் ஐயரவர்கள் ஒரு நாளும் தமிழில் பேசி அறியார்கள் .
இது பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் சிரமமில்லாமல் ஆங்கிலம் கற்பதற்கு மிகவும் உதவியாயிருந்தது .

கனம் அம்மாளவர்கள் முதல் பிள்ளையாக இருந்ததினால் மற்ற 3 பிள்ளைகளைவிட தகப்பனாரோடு அதிகமாக நெருங்கி ஆங்கிலத்தில் பேசிப்பழகி இருந்ததின் காரணமாக மற்ற 3 பிள்ளைகளையும்விட ஆங்கிலத்தில் அதிக பாண்டித்தியம் உடையவர்களாயிருந்தார்கள் .

பாசன் அம்மாளவர்கள் " கிரேஸ் உன்னுடைய இங்கிலீஷ் பி . ஏ . இங்கிலீஷ எக்குச் சரி ' ' என்று சொல்லு வார்களாம் . உண்மையில் பி . ஏ . இங்கிலீஷுக்கு மேல் .கனம் ஆல்பர்ட் ஐயாவர்கள் சென்னை டிவினிற்றி ஸ்கூலில் இருந்த கடைசி வருஷத்தில் 1895 - ம் வருஷம் மே மாதம் 9 - ம் தேதியன்று ஐயரவர்களுடைய மூத்தமகன் பிறந்தான் .

இவன் பிறந்தது இரவு 10 மணிக்கு , அச்சம்யத்தில் கிரேஸ் அம்மாள்தன் தகப்பனாரோடு ஒரு மெத்தைக் கட்டிலில் தூங்குவது வழக்கமாம் , விடிந்தவுடன் கனம் ஐயரவர்கள் கிரேஸ் அம்மாளைத் தூக்கிக்கொண்டு போய் ' உனக்கு ஒரு தம்பி பிறந்திருக்கிறான் ” என்று காட்டினார்களாம் . கிரேஸ் அம்மாள் இதை அடிக்கடி சொல்லு வார்கள் . இந்த மகன் பிறந்தவுடன் குழந்தையை வீட்டில் போட்டுவிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போக மனமற்றவர்களாய் அப்போது குருப்பட்டத்துக்குப் படித்துக்கொண்டிருந்த கனம் நோவா அடால்பஸ் ஐயரவர்களின் தாயார் , " நீங்கள் பள்ளிக்கூடத்துக்குப் போங்கள் அம்மா . குழந்தையை நான் பார்த்துக்கொள்ளுகிறேன் . ஒருபவுனை இழப் பானேன் " என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ஆல்பர்ட் அம்மாளவர்கள் ஒரே சாதனையாய் வேலையை ராஜிநாமா செய்தார்கள் .

கனம் ஆல்பர்ட் ஐயரவர்கள் 1916 - ம் வருஷம் மரித்தபின் கனம் அம்மாளவர்களை 35 வருஷ காலமாகத் தன்னுடன் வைத்திருந்தது இந்த மகனே . ' ' உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக , "

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory