புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

அருட்திரு . டாக்டர் . S . V , பால் ஜெயராஜ்

*திருநெல்வேலியில் இருந்து வந்த இந்திய மிஷனரி சங்க ஊழியர்கள்: - 11*

#Tinnevelly. #Historical

அருட்திரு . டாக்டர் . S . V , பால் ஜெயராஜ்

அருட்கரு , பால் ஜெயராஜ் , தமிழ்நாட்டில் , திருநெல்வேலி மாவட்டத்தில் , சங்கரன்கோவில் தாலுகாவிலுள்ள தலைவன் கோட்டையில் , திரு சுவாமிதாஸ்க்கும் , திருமதி . அன்னம்மாள் சுவாமிதாசுக்கும் 24 . 12 . 1921இல்ல மகனாகப் பிறந்தார் .

தனது உயர்நிலைக் கல்வியைக் கோவில்பட்டியிலும் , பசுமலையிலுள்ள அமெரிக்கன் மிஷன் பள்ளியிலும் பயின்றார் .

சிறுவனாக இருந்தபோதே வழியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார் .

விடுமுறை நாட்களில் திரு . ஸ்கல்ட் என்ற மிஷனெரியுடன் சேர்ந்து வாழியத்திற்குச் சென்று , ஓய்வுநாள் வகுப்புகளை நடத்தினார் .

இவர் எழுத்தராகத் தேயிலை பண்ணையில் சில காலம் வேலை செய்தபின் , இரண்டாம் உலகப் போரின் போது இராணுவப் பணியில் சேர்ந்தார் .

1945 - 46இல் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியரானார் .

லில்லியைத் திருமணம் செய்தார் .

1947 ஆண்டு ஜூலை 7இல் கடலூர் மாவட்டத்திலுள்ள , நெல்லிக்குப்பத்தில் உள்ள டேனிஷ் மிஷன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார் .

நெல்லிக்குப்பத்தில் இருந்த போது , இருவரும் பெண் மிஷனெரி செல்வி , பேடென் ஃபிலத்தின் என்பவருடன் இணைந்து , நற்செய்தி அறிவிக்கும் பணியில் ஈடுபட்டனர் .

பின்னர் கோவையில் யூனியன் உயர்நிலைப்பள்ளியில் பணி செய்தார் .

அதன்பிறகு பி . ஏ . வரலாறு மற்றும் தத்துவஇயல் , பி . டி . ( 8 , T . ) படித்து 1957 முதல் 10 ஆண்டுகள் உதவி தலைமையாசிரியராகப் பணி செய்தார் .

*இவரது அழைப்பு :*

ஒரிசாவின் புதிய பணித்தளமான மல்க்கன்கிரியில் பல செய்வதற்கு ஊழியர்கள் தேவை என்று இ . மி . ச , சுவிசேஷ பிரபல்ய வர்த்தமானி இதழின் மூலம் அறிந்த இவர் அப்பணிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார் .

நேர்முகத் தேர்வுக்கான அட்டையைப் பெற்ற பிறகு , தனது பிள்ளைகளின் படிப்பைக் குறித்தும் , தான் சந்திக்க வேண்டிய கடுமையான துன்பங்களைக் குறித்தும் எண்ணி இப்பணிக்குச் செல்வதற்குச் சிறிது தயங்கினார் , அந்நேரத்தில் இ . மி . ச , உபதலைவர் - அருட்திரு . பால் மணிக்கம் அவர்களிடமிருந்து ஒரு கடிதம் வந்தது . அதில் தேவன் இப்பணிக்கு உங்களை , என் மூலமாக அழைத்துள்ளார் .

நீங்கள் வருகிறீர்களா ? அல்லது வரவில்லையா ? உங்கள் பதிலை உடனடியாக அனுப்புங்கள் ' என எழுதப்பட்டிருந்தது . ஞாயிறு ஆராதனையில் இவரது அழைப்பு உறுதிப்படுத்தப்பட்டது .

ஞாயிறு ஆராதனையில் குரு . ' படித்த பவுல் , படிக்காத பேதுரு , சொல்வன்மையுள்ள ஆரோன் மற்றும் மந்தமான , இக்கி பேசுகிற மோசேயும் கடவுளுக்குத் தேவை ! ' என்று பேசினார்.

என் மேய்ப்பர் முன்னே போகிறார் ; என்னைத் தனியே விடமாட்டார் என்ற பாடல் பாடப்பட்டது . அன்று மாலையே இவர் , இ . மி . ச . . பொதுக்காரியதரிசிக்கு , ' நான் ஒரிசாவிற்குப் போகிறேன் ' என்று எழுதினார் .

*ஊழியப் பயிற்சியும் , அர்ப்பணிப்பும் :*

பாளையங்கோட்டையில் அருட்திரு . பால் மாணிக்கம் அவர்களிடம் நான்கு மாதங்கள் ஊழியப் பயிற்சி பெற்றார் .

1967 ஆம் ஆண்டு அக்டோபர் 15இல் பாளையங்கோட்டை திரித்துவ பேராலயத்தில் , திருநெல்வேலி பேராயர் அருட்பெருந்திரு . A . G ஜெபராஜ் அவர்களால் ஊழியராக அர்ப்பணிக்கப்பட்டார் .

தனது மனைவி மற்றும் மகள் நிர்மலாவுடன் ஜெய்ப்பூர் , ஒரிசாவிற்குப் பயணமானார் .

டாக்டர் , R . A . C . பால் இவர்களை வரவேற்று , ஜெய்ப்பூரில் வாடகை விட்டிற்கு அழைத்துச் சென்றார் .

இவர்களுக்கு ஒரியா மொழி கற்பிக்க திரு . பிஸ்வாசி என்பவர் நியமிக்கப்பட்டார் .

*அபிஷேகம் : -*

மூன்று ஆண்டுகள் பணி செய்தபின் , 6 மாதங்கள் விடுமுறையில் சென்றார்.

மூன்று மாதங்கள் திருநெல்வேலி திருமண்டலத்தில் முன்னேற்ற ஊழியம் செய்தார் .

அடுத்த மூன்று மாதங்கள் , தனது குடும்பத்தினருடன் தோர்ணக்கல்லில் தங்கியிருந்து , இ . மி . ச . தோர்ணக்கல் பணித்தளத்தின் செயலர் அருட்திரு . R . ஜாண் , G சாமுவேல் அவர்களிடம் ஊழியப் பயிற்சி பெற்றார் . 13 . 6 . 1971 அன்று தென் இந்தியத் திருச்சபையின் பிரதம பேராயரும் , தோர்ணக்கல் பேராயருமான அருட்பெருந்திரு . சாலொமோன் அவர்களால் , தெ . இ . தி . தோர்ணக்கல் பேராலயத்தில் உதவி குருவாக , 30 . 6 . 1974 அன்று குருவாக அபிஷேகம் செய்யப்பட்டார்

அருட்திரு . பால் ஜெயராஜுடன் பணி செய்வதற்கு , ஒரியா , கோயா , இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளையறிந்த திரு . கோரா ஐசக் என்ற தெலுங்கர் நியமிக்கப்பட்டார் .

கடவுளுக்காக ஆத்துமாக்கள் ஆதாயம் செய்யப்பட்டு , விசுவாசிகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது .

தனக்குக் கொடுக்கப்பட்ட இ . மி . ச . பள்ளி , பணித்தளம் மற்றும் ஆலயப்பணிகளில் குடும்பமாக ஈடுபட்டுத் திறமையாகப் பணிபுரிந்தார் .

டாக்டர் . R . A . C . பால் ஊழியத்தை விட்டுச் சென்றபின் , இவர் மல்க்கன்கிரியில் சந்தாலியர் மத்தியில் பணிசெய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் .

1976இல் சுக்மா ( ம . பி . ) பணித்தளம் ஆரம்பிக்கப்பட்டபோது , அதன் முன்னேற்பாட்டுப் பணிகளில் அறிவுரை வழங்கி , மேற்பார்வையிட்டார் .

1976இல் மல்க்கன்கிரியில் தொடங்கப்பட்ட ஆங்கிலப் பள்ளிக்கு திருமதி . லில்லி ஜெயராஜ் தலைமை ஆசிரியையாகப் பணி செய்தார் .

மல்க்கன்கிரி பணித்தளத்தில் இருபது ஆண்டுகள் கடவுளுக்காகச் சுறுசுறுப்பாக ஊழியம் செய்த பின் அருட்திரு . பால் ஜெயராஜ் தனது குடும்பத்தினருடன் மதுரை இராமநாதபுரம் திருமண்டலத்தில் பணி செய்தார் .

இவரது பொறுப்பை அருட்திரு . இ . விக்டர் மனுவேல் ராஜ் ஏற்றுக் கொண்டார் . மீண்டும் அருட்திரு . பால் ஜெயராஜ் இ . மி . சங்க முன்னேற்றப்பணி இயக்குநராக ஒன்றரை ஆண்டுகள் பணி செய்தார் .

திருமண்டலத்தில் சில ஆண்டுகள் ஊழியம் செய்த பின் 19 . 12 . 2006 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் .

( இ . மி . சங்கத்தில் இவரது பணி பற்றி இ . மி . ச . மல்க்கன்கிரி பணித்தளம் என்ற அத்தியாயத்தைப் பார்க்கவும் ) . "

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory