புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மோகர் பழங்குடி மக்கள்

*பழங்குடி இனமக்கள் பட்டியல்-02*

*மோகர் பழங்குடி மக்கள்*

மோகர் பழங்குடி மக்கள் கேரளா , கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய நிலங்களில் அதிகமாக உள்ளனர் .

குறிப்பாக , கர்நாடகாவிலுள்ள தக்ஸின் மாவட்டத்திலும் , கேரளாவிலுள்ள பெரும்பாலான மாவட்டங்களிலும் அதிகமாக வாழ்கின்றனர்.

இவர்கள் மக்கர் என்ற வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றார் இவர்களுக்கு எள் சாமியன்னியா , கைரான்னயா , செளந்தரானனயா ஆகிய உட்பிரிவுகள் உள்ளது .

இவர்கள் துளு , மலையாளம் ஆகிய மொழிகளில் பேசுகின்றனர் .

இவர்கள் கல்வியறிவில் குறைந்து காணப்படுவதால் மிகவும் பின்தங்கிய நிலைமையில் உள்ளனர் .

இவர்கள் பரம்பரையாக விவசாயக் கூலி வேலை மற்றும் தோட்டங்களைப் பராமரிப்பது போன்ற வேலைகளைச் செய்து வருகின்றனர் .

இவர்களிடையே குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர் .

இவர்களது முக்கிய உணவு அரிசி மற்றும் தானியங்கள் ஆகும் .

இவர்கள் மிகவும் ஏழைகளாக இருப்பதால் இவர்களுக்கென்று சொந்தமான நிலங்களோ , வீடுகளோ கிடையாது .

திருமணங்கள் இவர்களது உட்பிரிவிலேயே நடைபெறுகின்றது.

பெற்றோர்களே திருமணத்தைப் பேசி நிச்சயிக்கின்றனர்.

ஆண்கள் தாய்வழி சகோதரனுடைய மகளையும் , பெண்கள் தந்தைவழி சகோதரியுடைய மகனையும் திருமணம் செய்துகொள்கின்றனர் .

திருமணம் மணப்பெண் வீட்டில் நடைபெறும் . தாலி திருமணமான பெண்களுக்கு அடையாளம் கணவனை இழந்த மனைவியும் , மனைவியை இழந்த கணவனும் மறுமணம் செய்துகொள்ளலாம்.

விவாகரத்தும் அனுமதிக்கப்படுகிறது.

இவர்கள் பஞ்சூர்லி , கல்லூரிடி , குலிகா , பாப்பரியா ஆகிய கிராமதெய்வங்களை வழிபடுகின்றனர் .

மேலும் தங்கள் குலதெய்வங்களையும் , மூதாதையர்களின் ஆவிகளையும் வணங்குகின்றனர்.

தங்களது முன்னோர்களின் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

விழாக்களின்போது பாடல்களைப் பாடி , நடனமாடுகின்றனர்.

இவர்கள் கதிரு ஹப்பா , உகாதி , சங்கராந்தி போன்ற இந்துப் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர்.

இறந்தவர்களைப் புதைக்கவும் அல்லது எரிக்கவும் செய்கின்றனர்.

பழங்குடி மக்கள் இனத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும் அவர்களுக்காக ஜெபிக்கவும் வேண்டும் என்ற நோக்கத்திற்க்காக பதிவு செய்கின்றோம்.

*நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒருமனுஷனைத் தேடினேன்...."*

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory