புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பாமாலையின் முதல்பக்கம்

பாமாலையின் முதல்பக்கம்

பாக்களைப்பற்றியும் , பாடுவதைப்பற்றியும் குறிப்புகள்*

1 . பாமாலையில் ஒரே பொருளைச் சேர்ந்த பாக்கள் எழுத்து வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன .

2 . சில இடங்களில் , ஒரு பொருளைச் சேர்ந்த கடைசிப் பாவின் அடியில் அதோடு பொருத்தமான வேறு பாக்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

3 . இயேசு , கிறிஸ்து , கிரீடம் எனும் மூன்று பதங்களும் எப்பொழுதும் இரு அசைப் பதங்களாகவே பாடப்படவேண்டும் . அது போன்று , திரியேக எனும் பதம் மூன்று அசைப் பதமாகவே பாடப் படவேண்டும்.

வளைவுகளின்கீழ் இருக்கும் எழுத்துக்கள் ஒரு அசை யாக சேர்த்துப் பாடப்படவேண்டும் . ( உ - ம் : நித்தியர் என்பது நித்யர் எனப் பாடப்படும்.

4 . ஒவ்வொரு பாவின் தலைப்பில் குறிக்கப்பட்டிருக்கும் இராகங்கள் , இராகத் தலைவர்களால் பொருத்தமாக எண்ணப்படுபவை ; ஆனால் சபையார் பொருத்தமான வேறு இராகங்களையும் பாடலாம் .

பாமாலையின் இராகங்கள் பின்வரும் இராக நூல்களிலிருந்து தெரிந்துகொள்ளப்பட்டவை .

அவைகளை உபயோகிக்க அநுமதித்த அந்தந்த உரிமையாளருக்கு நமது மனமார்ந்த நன்றி உரித்தாகும்.

1 . AMERICAN LUTHERAN HYMNAL ( ALH ) .

2 . BAVARIAN MUSIC BOOK ( B , BA , BS , BSS ) .

3 . CANTICA EVANGELICA .

4 . CHURCH HYMNARY .

5 . ENGLISH HYMNAL .

6 , GOLDEN BELLS .

7 . HYMNS ANCIENT AND MODERN .

8 . METHODIST HYMNAL ( MH ) .

9 . SONGS AND SOLos ( SS ) .

10 . SONGS OF PRAISE ,

11 , SPIRITUAL SONGS ( SpS ) .

5 . சத்தக் குறிப்புகள் போடப்படவில்லை . ஆயினும் , பாடுகையில் சத்தத்தைக்கொண்டே உள்ளத்தின் உணர்ச்சியையும் பாவின் கருத்தையும் வெளிப்படுத்தக்கூடுமாகயால் , பாடுகிற சபையார் வசனத்தின் கருத்துக்கு இசைவாக சத்தத்தைப் பெருக்கியோ அடக்கியோ பாடுவது உள்ளத்தைப் பரவசப்படுத்தக்கூடியதா யிருக்கும்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory