புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இந்திய மிஷனரி சங்கத்தின் அருட்திரு . ஜாண் சாமுவேல் -2

*தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே , ஆண்டவரின் ஊழியத்திற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட இந்திய மிஷனரி சங்கத்தின் அருட்திரு . ஜாண் சாமுவேல் -2*

1918 ஆம் ஆண்டில் ஊழியராக இப்பகுதிக்கு வந்த இவர் , தன் ! தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே , ஆண்டவரின் ஊழியத்திற்கென்று அர்ப்பணிக்கப்பட்டவர் .

அன்று அன்னாள் தனது குமாரனை ஆண்டவருக்கு அர்ப்பணித்த விதமாகவே இவருக்கும் *' சாமுவேல் '* என்று பெயரிட்டனர் .

இவர் தனது கல்வியை முடித்தவுடன் அரசு அலுவலராகப் பணி செய்தார் .

எனினும் அவரது தாயார் அவரைக் குறித்து ஆண்டவருக்குக் கொடுத்த வாக்கைத் தெரியப்படுத்தவே , அப்பணியை விட்டுவிட்டு ஆண்டவரின் ஊழியத்திற்காக நமது பகுதிக்கு வந்து , மிகவும் குறுகிய காலத்திலேயே மொழியைக் கற்று தோர்ணக்கல் சேகரத்தலைவராக ஊழியம் செய்தார் .

அக்காலத்தில் பிரயாண வசதிகள் அதிகம் இல்லாததால் , மாட்டு வண்டிகளிலேயே பிரயாணம் செய்து சுவிசேஷம் அறிவித்தார் .

அவர் இவ்வாறு பிரயாணம் செய்யும் போது இரண்டு , அமன்று முறைகள் மாட்டு வண்டி கவிழ்ந்தாலும் உயிர்ச் சேதத்திலிருந்து தப்பியுள்ளார் .

எனினும் , இவர் சிரித்த படியே , பரி . பவுல் சுவிசேஷத்திற்காகப் பெற்ற கஷ்டங்களை எண்ணிப் பார்க்கும் போது , இது ஒன்றுமே இல்லை என்று கூறுவார் , -

சென்னையிலேயே இவர் இறையியல் கல்வி கற்றதால் பேராயரால் குருவாக அபிஷேகம் பெற்றார் .

1919 - 1920 வரை தோர்ணக்கல் பள்ளியில் மேலாளராகப் பணி செய்தார் .

ஊழியத்தில் இவரது மனைவி இவருக்கு வலது கையாக இருந்து உதவி செய்தார் .

எனினும் இவரது சுகவீனம் காரணமாகத் தனது சொந்த இடத்திற்கே திரும்ப வேண்டியதாயிற்று .

அப்போது தாய்ச் சபையில் இவர் பொதுக்காரியதரிசியாகப் பணி செய்தார் .

பணப்பற்றாக்குறை காரணமாக இரங்கூன் , பர்மா முதலிய தேசங்களுக்குச் சென்று , ஊழியப் பிரதிநிதியாக வேலை செய்து , பணம் சம்பாதித்தார் .

பொதுக் காரியதரிசி ஊழியத்தை ஊதியம் பெற்றுச் செய்தவர்களில் இவரே முதன்மையானவர் .

இவருக்கு முன் பணி செய்த பொதுக் காரியதரிசிகள் அனைவரும் ஊதியமின்றிப் பணி செய்தனர் .

இவர் திருநெல்வேலி திருமண்டலத்திலுள்ள கோவில்பட்டி , மெஞ்ஞானபுரம் , பண்ணைவிளை முதலிய இடங்களில் சபைமன்றத் தலைவராகப் பணி செய்தார் .

1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் நாளில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory