புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இராபர்ட் மாரீஸன்

*வியாபாரியாகவும் மிஷனெரியாகவும் தன் பணியை செய்த இராபர்ட் மாரீஸன்*

19ம் நூற்றாண்டின் பாதி சீன தேசம் சுவிசேஷகர்களை தன் நாட்டினுள் உள்ளே அனுமதிக்காமலிருந்தது .

வியாபாரத்திற்காக வந்த கிழக்கிந்திய கம்பெனியாரும் சு வி சே ஷ த் ைத அ றி வி க் க வும் , அப்படி அறிவிப்போருக்குத் தடையாகவும் இருந்தனர் .

இராபர்ட் மாரீஸன் , சீனாவுக்காக ஆத்மீக பாரம் கொண்டார் .

எப்படியாவது அங்குள்ள மக்களை கிறிஸ்துவின் பாதையில் நடத்த தீவிரம் காட்டினார் .

கிழக்கிந்திய கம்பெனி மூலமாகவே தன் பணியைத் தொடங்கினார் .

ஓர் வியாபாரியாகவும் அதே வேளையில் மிஷனெரியாகவும் தன் பணியைத் தொடங்கினார் .

18 மாதங்களில் சீன மொழியில் அகராதியை உண்டு பண்ணினார் .

இதனால் கிழக்கிந்திய கம்பெனியார் அவரைப் பாராட்டி மொழி பெயர்ப்பாளர் பதவியை அவருக்குத் தந்தனர் .

குடும்ப வாழ்வில் பல சோதனைகள் அவரைத் தொடர்ந்தாலும் , அவைகளைப் பொருட்படுத்தாமல் முழு கவனத்தையும் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியில் செலுத்தினார்.

1815ம் ஆண்டு சீன மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து வெளியிட்டார் .

இதனால் கிழக்கிந்திய கம்பெனி இவரை வேலை நீக்கம் செய்தது .

ஆயினும் , இவருடைய அறிவுத்திறனால் மீண்டும் வேலைக்குச் சேர்ந்தார் .

பல இன்னல்களும் , இடையூறுகளும் வந்தபோதிலும் 1824ம் ஆண்டு முழு வேதாகமத்தையும் சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார் .

சீனப் பெண்கள் மத்தியில் கிறிஸ்து அறிவிக்கப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறியதால் அநேகப் பெண்கள் மாரீஸனின் வீட்டிலேயே வேதபாட வகுப்புகளில் கலந்து கொண்டு ஊழியர்களாக மாறினர் .

சீனாவில் 25 வருடங்கள் கடினமாகப் பணிசெய்த மாரீஸன் , அழியாத பொக்கிஷமான வேதாகமத்தை அம்மொழியில் தந்தது உலகம் உள்ளவரை போற்றதலுக்குரியது .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory