புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கடையனோடை திருச்சபை வரலாறும் கேமரர் ஐயரும்

*கடையனோடை திருச்சபை வரலாறும் கேமரர் ஐயரும்*

ஊர் வரலாறு ஆங்கில ஆட்சி ஆரம்பத்திற்கு முன்னரே இவ்வூர் தோன்றியதாகத் தெரிய வருகிறது .

இது முன்னர் திருநெல்வேலி மாவட்டம் , திருச்செந்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது .

கடயர்கள் என்ற சமுதாயத்தினர் ஏராளமாக வாழ்ந்தார்கள் .

நில புலன்களும் தனி ஓடை ( கால்வாய் ) பாசனமும் இருந்திருக்கிறது என்பதற்கான ரிவினியூ ஆதாரங்கள் உள்ளன .

ஆதியில் கடயனூர் என்று இருந்தது மாறி கடையனோடை என்றாகி விட்டது என்பது செவி வழிச் செய்தி கடயர்களால் உருவாக்கப்பட்ட ஊர்தான் கடையனோடை என்பது வரலாறு .

கி பி . 1901 ஆம் ஆண்டுக்கு முன்பே இங்குள்ள கடயர்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருக்கிறார்கள் .

பழங்காலக் கல்லறைகள் இதற்குச் சான்றாக உள்ளன .

கி . பி . 1917 இல் திருநெல்வேலி கலெக்டர் எச் ஆர் பேட் ஐ சி எஸ் . , அவர்களின் சர்வேப்படி கடையனோடை கடயர்கள் கிறிஸ்தவப் பொது ஊர்வலம் , வரவேற்பு இவைகளில் தலைமைப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர் என்று அறிய முடிகிறது .

தற்சமயம் இவ்வூரின் ஆதி மக்களாகிய கடயர்கள் சிதறுண்டு மூக்குப்பீறி , தூத்துக்குடி , ராமேஸ்வரம் , அரியாங்குண்டு , வேர்கோடு , அக்காள்மடம் , தண்ணீர் ஊற்று , தென்குடா ஆகிய ஊர்களில் பெருவாரியாக வாழ்ந்து வருகிறார்கள் .

கடையனோடை பேர்க்காரணம் அறிந்து மகிழ்ந்தேன் .

ஏ . எப் கேமரர் ஐயர் தோற்றுவித்த கடையனோடை சபையின் புதிய பொன் விழா 21 . 12 . 1997ல் கொண்டாப்பட்டுள்ளது .

கேமரர் ஐயரின் தந்தை ஜெர்மானியர் .

டேனிஷ் மிஷன் மூலமாக அனுப்பப்பட்டவர் .

அவர் வரும் வழியில் நன்னம்பிக்கை முனையில் கப்பல் உடைந்துவிட்டது .

அதன்பின் இலங்கை மார்க்கமாக தரங்கம்பாடிக்கு 1791 இல் வந்தார் .

அவர் மகன்தான் நாசரத் மிஷனரி ஏ . எப் . கேமரர் இருவர் பெயரும் ஒன்றே .

1841 இல் கடையனோடையில் கிறிஸ்தவம் வேர்க் கொண்டது .

1843ல் இது ஒரு பெரிய சபையாக மாறியது .

இச்சபையின் முதல் உபதேசியார் ஏ . யோபு அவர்கள் .

இச்சபைக்கு 1848 ல் ஆலயம் கட்டப்பட்டது .

அதன் கோபுரம் 1850 ல் எழுப்பப்பட்டது .

இதன் முதல் குருவானவராக அருள்திரு . வி . ஆபிரகாம் நாட்டையர் 1874ல் நியமிக்கப்பட்டு 38 ஆண்டுகள் பணியாற்றினார் .

100 ஆண்டுகளுக்குப் பின் தற்போதைய ஆலயம் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் நாள் அஸ்திபாரமிடப்பட்டு 1948 டிசம்பர் 21 ஆம் நாள் தோமாவின் திருநாளன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது .

தற்போதைய ஆலய கோபுரம் 1957 டிசம்பர் 20 இல் மங்கலப் படைப்பு செய்யப்பட்டது .

கேமரர் ஐயர் ஒருமுறை கூட தம் தாய்நாடு செல்லவில்லை .

அவர்தம் 87 ஆம் வயதில் 1891 செப்டம்பர் 2ம் நாள் நித்திய இளைப்பாறுதல் பெற்றார் .

இந்தியாவில் பிறந்து , இந்தியாவில் வளர்ந்து இந்திய மக்களுக்காகவே பாடுபட்ட கேமரர் ஐயரின் காலடிபட்ட புண்ணிய பூமி கடையனோடை

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory