புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சி . ஜ . ஸ்கோபீல்டு

புகழ்பெற்ற ஒத்த வாக்கிய வேதாகமத்தை உருவாக்கிய பண்டிதர் சி . ஜ . ஸ்கோபீல்டு பிறந்த தினம்* ஆகஸ்டு 19

கிறிஸ்தவர் ஒருவர் வழக்கறிஞரின் அறைக்குள் நுழைந்தார் , தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றிவிட்டு வெளியே புறப்படும் முன் , நீண்ட நாட்களாகவே அவருக்குள் இருந்த அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டுவிட்டார் .

என்ன கேள்வி அது ? ஐயா , நீங்கள் ஏன் கிறிஸ்தவராகவில்லை ? . இக்கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத அவ்வழக்கறிஞர் திகைத்தும் , மலைத்தும் நின்றார் .

சற்று சுதாரித்துக் கொண்டு , தன் தலையை தொங்கவிட்டவராக , ராஜ்யத்திற்கு அருகதை அற்றவன் என்று இருக்கிறதல்லவா ? என்னுடைய பெலவீனமே அது தான் .

எனவே நான் கிறிஸ்தவனாகவில்லை " என்று பதிலளித்தார் , ஆனால் வந்தவர் " நீங்கள் ஏன் கிறிஸ்தவராகக்கூடாது " என்று மீண்டும் கேள்வியைக் கேட்டார் , அதற்கு அந்த வழக்கறிஞர் " ஒருவரும் இதுவரை என்னை இந்த கேள்வி கேட்டதில்லை .

நான் எப்படி ஒரு கிறிஸ்தவனாகக்கூடும் எனக்கு சொல்லித் தாருங்கள் " என்றார் .

இருவரும் சற்று அமர்ந்து உரையாட ஆரம்பித்தனர் .

வேதாகத்தின் சத்தியங்களை விளக்கமாக எடுத்துக் கூறினார் வந்தவர் .

ஜெபிப்பதற்கு முழங்காற்படியிட்டவுடன் , அவ்வழக்கறிஞர் , " ஆண்டவரே ! என் பெலவீனம் எனக்குத் தெரியும் .

அதை என்னிடத்திலிருந்து மாற்றிப்போடும் " என்றார் . அன்றுமுதல் குடியை முழுவதுமாக விட்டுவிட்டு புதிய ஜீவியத்தை ஆரம்பித்தார் அவ்வழக்கறிஞர் .

யார் அந்த வழக்கறிஞர் ? அவர் தான் புகழ்பெற்ற ஒத்த வாக்கிய வேதாகமத்தை உருவாக்கிய பண்டிதர் ஸ்கோபீல்டு .

ஆயிரக்கணக்கானோருக்கு வேதாகம சத்தியத்தை கற்றுக் கொடுப்பதில் எளிமையான முறையை புகுத்தியவர் .

வேதாகமத்தில் " தேடி வாசியுங்கள் " என்ற வார்த்தைக்கு புது வடிவம் கொடுத்தவர் .

இவரின் பழைய வாழ்க்கை மறைந்ததால் , பலர் புது வாழ்க்கை பெற்றனர் .

ஆம் . உங்கள் பழைய வாழ்வும் மறையுமானால் , உங்களால் பலர் புதிய ஜீவியத்தை ஆரம்பிக்க முடியும் .

ஆண்டவரின் விருப்பமும் அதுதான்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory