கிறிஸ்துவின் உத்தமத் தொண்டன் பேராயர் V . S . அசரியா பிறந்த தினம் ஆகஸ்ட் 17
அது ஒரு மாபெரும் மிஷனெரி மாநாடு , அலைகடல் என மக்கள் கூட்டம் , மான்கள் நீரோடைகளைத் தேடித் தவிப்பது போல , பேராயர் V . S . அசாரியாவின் இறை வார்த்தைக்காக மக்கள் ஆவலாய் காத்துக் கொண்டிருந்தனர் , இறைச் செய்தியின் இனிய நேரம் .
வேகமாகப் பறக்கும் அம்புகளைப் போல இறை பணியின் அவசியத்தையும் , தேவைகளையும் அனைவர் உள்ளத்திலும் பாயச் செய்தார் அசாரியா .
இறைப் பணியின் வாஞ்சைப் பற்றி எரிந்த போது . . மிஷனெரிப் பணிக்காக அர்ப்பணிப்போர் உங்களில் எத்தனை பேர் ? அவர்கள் முன்னே வரலாம் , " அசரியா அறைகூவல் ஒன்றை விடுத்தார் .
திடீரென்று புயலெனச் சீறி எழுந்தான் ஓர் வாலிபன் . " நீங்களே ஏன் ஒரு மிஷனெரியாகச் செல்லக்கூடாது ? " அந்தோ ! அசரியாவின் உள்ளம் உடைந்தது . கதறிக் கதறி அழ ஆரம்பித்தார் .
இயேசுவின் கைகளில் இதயத்தைக் கொடுத்தார் .
தோர்ணக்கல் என்ற பகுதியில் அவர் தன் கால்களைப் பதித்தார் .
அது கர்த்தரின் பூமியாகக் கனிந்தது . 8 , 000 கிறிஸ்தவர்கள் என்ற எண்ணிக்கை 2 , 26 , 000 ஆக உயர்ந்தது . ' மாபெரும் மிஷனெரி , ' ' மிஷனெரி இயக்கத்தின் விடிவெள்ளி , ' ' முதல் இந்திய பேராயர் ' என்று போற்றப்பட்ட இவர் IMS , NMS , CSI போன்ற மாபெரும் நிறுவனங்கள் உருவாக அடித்தளமிட்டார் ,
*அஞ்சா நெஞ்சத்துடன் அயராது உழைத்தவர் ; கிறிஸ்துவின் உத்தமத் தொண்டன் ; கிறிஸ்தவர்களின் வழிகாட்டி ;* அர்ப்பணிப்பின் மகுடம் என்ற பெரும் புகழுடைய V . S . அசரியா , ஆகஸ்ட் 17ல் 1874ம் ஆண்டு பிறந்தார் .

No comments:
Post a Comment