புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மேரி பிஷ்ஷர்

ஆயிரக்கணக்கானோரை கிறிஸ்துவண்டை ஈர்க்கும் சிறந்த கருவியாக செயலாற்றிய மேரி பிஷ்ஷர்*

#Tinnevelly #Historical

600 மைல்கள் தூரம் . தனிமையில் நடக்க வேண்டும் , உங்களால் முடியுமா ? முடியும் என்று சாதித்துக் காட்டினார் மேரி பிஷ்ஷர் .

ஆபத்துகளும் , பேராபத்துகளும் , பயங்களும் , திகில்களும் நிறைந்த பயணம் அது . கேட்கவே சற்று பயமாகத் தான் உள்ளது . ஆனால் , கிறிஸ் து வி ன் அ ன் பு இ வ ரை ஆட்கொண்டபோது , தன் பயங்கள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு , ஆண்டவரைக் குறித்து சாட்சி பகர துருக்கி நாட்டை நோக்கி பயணமானார் .

அரசன் சுல்தான் இவரை அன்போடு ஏற்றுக்கொண்டு , இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தைக் குறித்து ஆழமாக அறிந்து கொண்டான் .

1657ஆம் ஆண்டு இவர் மேற்கொண்ட பயணம் வெளிப்படையாக பயனைத் தரவில்லையெனினும் அநேகர் கிறிஸ்துவைப் பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக அமைந்தது .

மேரி இப்பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு பல தடைகளைத் தாண்டி வர நேரிட்டது .

இவர் " இயேசுவின் நண்பர்கள் " என்ற இயக்கத்தை சார்ந்தவரானபடியால் , பரந்த , விரிந்த , தெளிவான மனநிலையுடன் அனைவருடனும் கிறிஸ்துவைப் பறைசாற்றுவதில் தீவிரம் காட்டினார் .

இதனால் தன் சொந்த நாட்டிலேயே சிறைப்பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார் . கத்தோலிக்க போதகத்தைத் தாண்டி இவரது போதனை காணப்பட்டபடியால் பல கொடுமைகளை இவர் அனுபவிக்க வேண்டியிருந்தது . இவரிடமிருந்த புத்தகங்கள் பறிக்கப்பட்டு தீயிலிட்டு எரிக்கப்பட்டது .

இதனால் இவரது சாட்சி பகரும் வாழ்வு தடைசெய்யப்படும் என நினைத்தபோதிலும் , என்ன வந்தாலும் , எது நடந்தாலும் கிறிஸ்துவுக்குள் நிலைத்து நின்று தன் சாட்சியை வெளிப்படையாக பிரசங்கித்தார் .

12 வருட சாட்சி பகரும் மிஷனெரி வாழ்வுக்குப்பின் இவர் திருமணம் செய்துகொண்டு , தன் கணவருடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தினார் .

தன் வாழ்நாள் இறுதிவரை சாட்சி பகர்வதை விடாமல் தொடர்ந்த இவர் ஆயிரக்கணக்கானோரை கிறிஸ்துவண்டை ஈர்க்கும் சிறந்த கருவியாக செயலாற்றி தன் வாழ்வை முடித்தார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory