புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மார்கரேட் லாட்ஜ்

சேலத்தில் பெண்கல்வியை உயர்த்த ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த கல்விச்சுடர் சகோதரி மார்கரேட் லாட்ஜ் அம்மையார் அவர்களின் 154 வது ஆண்டு பிறந்த நாள் இன்று (12.09.2019).

1891 ஆண்டு சகோதரி அன்னி கிரவுச் அம்மையார் ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபார்ட் நகரிலிருந்து சேலம் வந்தார். ஏற்கெனவே அங்கு 1889 ஆண்டு முதல் ஆஸ்திரேலியா உதவி சங்கத்தின் மூலம் ஏற்கனவே சேலத்தில் பெண்கள் கல்வி முன்னேற்றத்திற்கு சேவை செய்து கொண்டருந்த சகோதரி லோய்ஸ் அன்ஸ்லீ காக்ஸ் அம்மையாருக்கு உதவியாக கிரவுச் இருந்தார். காக்ஸ் அம்மையாருக்கு திடீர் என ஏற்பட்ட உடல் நிலை குறைவால் 1891 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது 27 வயதில் இறந்து விட்டார்.
பிறகு கிரவுச் அம்மையார் அழைப்பினை ஏற்று ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபார்ட் நகரிலிருந்து சகோதரி மார்கரேட் லாட்ஜ் அம்மையார் அவர்கள் 1892 ஆண்டு சேலம் வந்தார்.
கிரவுச் மற்றும் லாட்ஜ் அம்மையார் இருவரும் 1893 ஆண்டு சேலம் அஸ்தம்பட்டியில் தனது சொந்த முயற்சியால் இடம் வாங்கி பங்களா கட்டி இருவரும் கல்விப்பணியை தொடர்ந்தார்கள்.
இதனருகே பெண்கள் விடுதியும், பகல் நேர பள்ளி கூடம் கட்டப்பட்டு இதற்க்கு மறைந்த சகோதரி லோய்ஸ் அன்ஸ்லீ காக்ஸ் அம்மையாரின் நினைவாக ‘சகோதரி லோய்ஸ் காக்ஸ் நினைவு பெண்கள் பள்ளி மற்றும் தங்கும் விடுதி' என பெயரிட்டனர்.
இவர் ஈரோட்டில் ஏப்ரல் 1915 முதல் மே 1917 வரை பெண்களுக்கு கல்வி முன்னேற்றத்தை வழங்கினார்.
தற்போது சி.எஸ்.ஐ. ஹோபார்ட் உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்து உள்ளது. சுமார் 125 ஆண்டுக்களுக்கு மேல் பெண்கல்வி சேவையில் இப்பள்ளி முத்திரை பதித்து வருகின்றன.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory