புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

தாமஸ் குக்

*தனக்கு கிடைத்த தரிசனங்களை நிறைவேற்றிய தாமஸ் குக்*

#Tinnevelly #Historical

ஆண்டவர் ஒரு மனிதனை ஊழியத்திற்கு அழைக்கும்போது அவனுக்கு தரிசனங்களைத் தருகின்றார்.

அத்தரிசனங்களை நிறைவேற்றுவதில் நமது செயல்பாடும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நாம் வாழும் உலகில் பல ஊ ழி யங் க ள் ஆரம்பிக்கப்பட்டாலும் , தரிசனம் இல்லையேல் அவை நிலைநிற்க முடியாது.

தரிசனங்கள் கொடுக்கப் பட்டிருந்தும் அவற்றை செயல்படுத்துவதற்குச் சரியான ஆர்வமுள்ள ஊழியர்கள் இல்லையெனில் , அவ்வூழியம் நிலைத்து நிற்க முடியாது .

எனவே தரிசனமும் , செயல்படும் ஆர்வமும் இரண்டறக் கலத்தல் வேண்டும் .

தாமஸ் குக் ஒரு ஆர்வமுள்ள , துடிப்புள்ள , செயல்படும் வேகமுள்ள போதகர் .

ஆங்கிலிக்க திருச்சபையிலிருந்து வெளியேறிய இவர் , ஜான் வெஸ்லி ஆரம்பித்த மெதடிஸ்ட் திருச்சபையில் இணைந்தார் .

பிரான்சிஸ் அஸ்பெரியால் அமெரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டார் . அங்கே மெதடிஸ்ட் திருச்சபையின் பேராயராக அபிஷேகம் பண்ணப்பட்டார் .

தாமஸ் குக் பிறர் உதவியை எதிர்பாராமல் தன் சொந்தத் திறமையாலேயே தனது மிஷனெரிப் பயணங்களை மேற்கொண்டவர் .

அமெரிக்காவுக்கு ஒன்பது முறை பயணம் செய்த இவர் , தனது பிரயாண செலவுகளை பிறரிடமிருந்து எதிர்பார்க்காமல் தாமே அவற்றைச் சந்தித்தார் . அதுமட்டுமல்லாமல் , மெதடிஸ்ட் திருச்சபைக்கு ஏராளமான சொத்துக்களையும் வழங்கினார் .

அடிமைத்தனங்களை முற்றிலும் வெறுத்த இவர் , பிரான்சிஸ் அஸ்பெரியோடு இணைந்து , அமெரிக்காவில் காணப்பட்ட அடிமைத்தனங்களை முற்றிலும் அகற்ற பாடுபட்டார் .

இதற்காக ஒருமுறை அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனுடன் பேச்சு வார்த்தை நடத்தி , இக்கொடிய சீரழிவைத் தடுக்குமாறு வேண்டுதல் செய்தார் .

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் , ஆப்பிரிக்காவுக்கும் சுவிசேஷப் பயணங்கள் மேற்கொண்டார் .

இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட மெதடிஸ்ட் மிஷனெரி சங்கத்தின் முதல் தலைவரான இவர் , இலங்கை பயணத்தின்போது கப்பலிலே மரித்து கடலில் அடக்கம் செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory