புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மாலா மொய்

*நற்செய்தி அறிவிக்கும் பணியில் , மனிதர்களின் தயவு மிகவும் அவசியம் என்ற மாலா மொய்*

#Tinnevelly #Historical

நாம் எந்த இடத்தில் பணி செய்கிறோமோ , அவ்விடத்திலுள்ள மனிதர்களின் துணையின்றி , சுவிசேஷத்தை வெற்றிகரமாக அறிவிப்பது என்பது இயலாத ஒன்றாகும் .

சுவிசேஷ பணியில் நாம் இடங்களையும் , கலாச்சாரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் .

புதிய கலாச்சாரங்களை புகுத்தாமல் , அம்மக்களின் வாழ்க்கை முறையிலேயே அவர்களோடு அவர்களாகவே வாழ்ந்து காட்டி , கிறிஸ்துவின் அன்பை வார்த்தையிலும் , வாழ்க்கையிலும் செயல்வடிவம் கொடுப்பதே சிறந்த மிஷனெரிப் பணியாகும் .

ஆப்பிரிக்க நாட்டில் மிஷனெரி பணியாற்றியவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர் மாலா மொய் என்பவரும் ஒருவர் .

இவர் அர்ப்பணிப்பிலே ஆனந்தம் கண்டவர் . அம்மக்களின் வாழ்வு முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டவர் . முன்வைத்த காலை பின்வைக்காதவர் ; கலப்பையில் கைவித்துவிட்டு பின்னிட்டுப் பார்க்காதவர்.

54 வருடங்கள் சிறந்த மிஷனெரியாக சுவிட்சர்லாந்தில் பணி செய்தவர் .

மக்களோடு தன் வாழ்வை இணைத்துக் கொண்டார் . பின்பு ஆப்பிரிக்காவில் டோரிக்கா என்ற ஆப்பிரிக்கப் பெண்மணியின் உதவியுடன் , பல பாகங்களுக்கும் சுவிசேஷத்தைச் சுமந்து சென்றார் .

தென் ஆப்பிரிக்காவில் பெத்தேல் நிலையம் என்ற மிஷனெரி தளத்தை உருவாக்கினார் .

பல ஆப்பிரிக்க தலைவர்களோடு ஐக்கியத்தை வளர்த்துக் கொண்டார் .

இது இவரின் ஊழியப் பணிக்கு மிகவும் உறுதுணையாக அமைந்தது .

1927ஆம் ஆண்டு அவருக்கு வயது 65 . நற்செய்திப் பணியில் இன்னும் தீவிரம் காட்டினார் .

இடம் விட்டு இடம் பெயர்ந்து நற்செய்தி வீராங்கனையாக கிறிஸ்துவின் அன்பை கற்றுக் கொடுத்தார் .

தான் பணி செய்த மக்களைக் குறித்ததான முழு விவரத்தையும் அவர் அறிந்திருந்ததினாலும் , அவர்களோடு நல்ல ஐக்கியத்தை வைத்துக்கொண்டதினாலும் தம் ஊழியப் பணியில் நல்ல வெற்றிகளைக் கண்டார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory